(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 02 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

Hello Chillzee friends.. First of all, Thanks a lot for your reviews and comments... and so Sorry for the short update. Due to navratri and vacation plans, couldn't implement my plan. next will meet you all on 'Diwali' day :) Happy purchase ;)'

கன், தனது மனதிலும் நினைவிலும், ஏன்? ஒவ்வொரு அணுவிலும்கூட நிறைந்து உள்ளவளை முதன் முதலில் சந்தித்த, இல்லை இல்லை.. அவளின் விழிகளை சந்தித்த நொடிகளில் முழ்கி முத்துக் குளித்து தொப்பலாக நனைந்து வெளியேவர, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது முதலில்.

அன்று சந்தித்த அவளின் விரிந்த விழிகளும், அது காட்டிய அதிர்ச்சி ஆச்சர்யம் வியப்பு பயம் கூச்சம் ஆகிய உணர்வுகளின் மொத்த குழப்பமும், இன்றும் நினைத்தால் கண் முன் படமாக ஓடியது.

இப்பொழுதும் இவனுக்கு வியப்பு தான். ‘ஒரு செகண்ட்.. மிஞ்சிபோனா ரெண்டு செகண்ட் தான் அவளுடைய கண்ணை பார்த்து இருப்பேன்... அப்போதான் அவளும் தான் என்னோட கண்ணை நேருக்கு நேரா பார்த்து அவளோட பீலிங்சை(feelings) இடம் மாத்தினாள்..! அந்த ஒருநொடியில் அவ மனசுல தோணின உணர்வுகள், அவளோட அந்த பிரவுன் ஐஸ்(brown eyes) காட்டிய எக்ஸ்பிரஷன்ஸ், எல்லாம் தெள்ளத் தெளிவா புரிஞ்சது எனக்கு தானா?! எனக்கே தானா?! டவுட்டா தான் இருக்கு இப்போவும்..!

ஏன்?! பேபிக்கும் சந்தேகம் தான்.! காதலிக்கும் போதும் சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் சரி, அவளின் ஐஸ் பேசிய பாஷை எனக்கு பலப் பல சமயத்துல புரிஞ்சதே இல்லையே.. அவ கண்ணால ஏதோ சொல்லரான்னு புரிஞ்ச சில சமயத்துல அதுக்கு அர்த்தம் புரிஞ்சது இல்லை.! ஷப்பா... ஆனா அன்னிக்கு மட்டும் எப்படி அவளின் ஐஸ் பேசின பாஷையை புரிஞ்சிகிட்டேன்?! ஒரு வேளை   அது தான் குயுபிட்(cupid) எங்களுக்கு அம்பு போட்ட மொமேன்ட்டோ!!

அதை அன்னிக்கே உணர்ந்து இருந்தால், அவளை தேடி.. லவ் பண்ணறேன்னு நான் பீல் பண்ணி ... அதுக்கு அப்புறம் அவளுக்கு லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணி.... எவ்ளோ மாசம் வேஸ்ட்..!’ என்று நினைத்துக்கொண்டே இருந்தவன் சட்டென்று, “அய்யய்யோ.... Baby… let me make it clear da… I just thought about the ‘time’, I’ve wasted in proposing you. That’s all. .”  என்று ‘time’-இல் ஒரு அழுத்தம் கொடுத்து சத்தமாக கூறினான்.

அவள் என்னவோ அவன் முன் நின்று முறைப்பதுபோல் விளக்கினான். பிறகு நிலைமை உறைக்க சட்டென்று தலையில் அடித்துக்கொள்ள கையை கொண்டு போனவன் அப்படியே ஒரு விநாடி நின்று பின் கையை கீழிறக்கியவாரு

“பேபி.. சீ.. நான் கன்ட்ரோல் பண்ணிட்டேன் டீ... ஹப்பாடா..!!” என்று ஒரு சிரிப்புடன் கூறிக்கொண்டான்.

 பிறகு..”இன்னைக்கு என்ன ஆச்சு எனக்கு.. செமயா டிஸ்டர்ப் பண்ற டீ பேபி நீ என்னை.. ஈஷு... இதுக்கு மேல என்னால முடியாது.. வரேன்... கூடிய சீக்கரம் வரேன் டீ.. நீ ஒகே சொன்னாலும் இல்லைனாலும் உன்னைதூக்கிட்டு வரப்போறேன்.. வந்து, இப்போ பிரிஞ்சதுக்கும் சேர்த்துவெச்சு நாம ரெண்டு பேரும் செமயா வாழறோம்..!! ஒகே..?! பீ ரெடி பேபி..”என்று தீர்மானத்துடன் கூறிக்கொண்டான். பின் பார்கிங் லாட்டில் இருந்து கிளம்பி அவன் சென்றது அவன் மனைவியின் மிகவும் பிரியமான பொக்கே கடைக்கு.

இங்கே ககன் அவனின் பேபயின் நினைவுகளுடனும் அது தரும் உணர்வுப் போராட்டத்துடனும் நாட்களை கடத்திக்கொண்டு இருக்க, அவனின் பேபி எங்கே? என்ன செய்துகொண்டு இருக்கிறாள்??

மலை... மனதை குளுர்விக்கும் இயற்கையின் படைப்பு. பச்சை பசேலென்ற அதன் அழகான தோற்றமும், செடிகளை வரிசையாக அடுக்கி வை த்தது போன்ற அதன் நேர்த்தியும்... அதில் பல வண்ண பூக்களும்... நடு நடுவே பல நிறங்களில் பாறைகளும், வளைந்து நெளிந்து செல்லும் கருத்த சாலைகளும்... அதில் ஊர்ந்து பறந்து என செல்லும் வாகனங்களும்.. அந்த ஊருக்கே அழகு சேர்க்கும்பேர் மலையால் சிறப்பே..!

கடல்...  மனதை குதுகலிக்க வைக்கும் இயற்கையின் வரப்பிரசாதம். ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று. ‘என்ன மாயம் செய்தாய் இறைவா?’ என்று ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கும் அலைகளின் அணிவகுப்பு... நாம் விலகினாலும் நம்மை விட்டு விலகாத மென்மையான மணல் துகள்கள்... மணலுக்குள் ஒளிந்து கண்ணா மூச்சி ஆடும் நண்டுகள்... கண்டிப்பாக கடலால் அதன் ஊருக்கு பெருமையே.!

தனித் தனியே சிறப்பும் பெருமையும் வாய்ந்த மலையும் கடலும் ஒரே ஊரில் இருந்தால்??!!

அதுவும் எதிர் எதிரில் இருந்தால்..??!! இன்னும், அவற்றிற்கு இடையில் நாம் வாழும் பகுதி இருந்தால்???!!! அப்பப்பா... காணக் கண் கோடி வேண்டுமல்லவா...! வாழ பல நூறாண்டுகள் வேண்டுமல்லவா?! அப்படி ஒரு ஊரில், சிறிது காலம் என்றாலும் தங்கி வாழவேண்டும்.! அதற்கு வரம் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஊர் தான் இது. ‘வைசாக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ‘விசாகப்பட்டிணம்’.

வைசாக்கில் இருந்து செகந்திராபாத் செல்லும் ‘ஏழைகளின் ரதம்’என்று அழைக்கப்படும் தொடர் வண்டி   ‘கரீப் ரத் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பும்’ என்ற அறிவுப்பு தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் வர,

“போடி போடி... அவன் சொல்லுவான்.. ‘சற்று நேரம்.. சற்று நேரம்’ன்னு.. எப்படியும் டிரெயின் கிளம்ப இன்னும் 5 மினிட்ஸ் இருக்கு. அதுக்குள்ள வண்டில ஏறிடுவேன்..” என்று போனில் உரையாடிக்கொண்டு இருந்த அந்த யுவதி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.