(Reading time: 11 - 21 minutes)

“என்னடீ சொல்ற.. இன்னும் பிளாட்பாரமே போகலையா? மணி ஆச்சு டீ... போன முறை மாதிரி இன்னுக்கும் ட்ரைன் மிஸ் பண்ணிடாத டீ...அப்புறம் நானே அங்க வந்து உன்ன கொல்லுவேன்.. வேகமா போய் ஏறு டீ எரும.. இவ்ளோ கூலா என்கிட்ட பதில் சொல்ற...” என்று அங்கிருந்து வந்த புலம்பலில் வந்த சிரிப்பை விழுங்கினாள்.

“ஹ்ம்ம்.. இதோ ராம்ப்(ramp) இறங்கறேன்.... அய்யய்யோ.... வண்டி மூவ் ஆகுது டீ..... டேய்.. எப்போலேர்ந்து டா இவ்ளோ பண்ட்ச்சுவலா ட்ரைன் கெளப்ப ஆரம்பிச்சீங்க... ஒரு நிமிஷம் டா... அடேய்.. அடேய்... அய்யய்யோ வண்டி போகுதே... போகுதே... போச்சா.... இன்னிக்கும் போச்சா.. சுத்தம்.!!..”

“ஓடு டீ.. வேகமா ஓடு... எப்படியாவது டிரெயின் ஏறிடு டீ எரும...” என்று பதறியது அந்த பக்கக் குரல்.

அதற்கு பதிலாக “ஆ..............” என்ற அலறலுடன் ஏதோ ‘டப்.. டப்..’ என்று இடிக்கும் சத்தம் மட்டுமே கேட்டது அந்த பக்கம் பேசியவளுக்கு.!

“தாரா... தாரா... என்ன டீ ஆச்சு..?? ஐயையோ.... தாரா.....”

“ஹான்... ஹக்க்க்க்....”

“தாரா.... என்னடீ....?? விழுந்துட்டியா எரும.... எனக்கு உடம்பு பதறுது டீ.... பதில் சொல்லு.... தாரா.....”

“..................”

“அம்மா..... தாராக்கு........”என்று அந்த பக்கம் அழுகையுடன் இழுக்கும் குரல் கேட்டவுடன்,

“ஹே.. ஹே.. காவீ..... அம்மா கிட்ட சொல்லாத.........” என்று மெல்ல என்றாலும் வேகமாக கூறினாள் தாரா.

“அப்போ நீ என்ன ஆச்சுன்னு சொல்லேன் டீ... கீழ விழுந்துட்டியா? அடி பட்டுடுசுச்சா? ட்ரைன் போனா பரவாயில்லை டீ.. நீ வீட்டுக்கு போய்டு... சாரி டீ.. என்னால தானே எல்லாம்..”. மெல்ல மெல்ல காவீ என்பவளின் குரலில் அழுகையின் ஸ்ருதி கூடியது.

“ஹா... ஹா... ஹா...... ஹே காவீ.. போதும் டீ... என்னால சிரிப்பை அடக்க முடியல.. ப்ளீஸ்.. எனக்கு மேல இருக்க டீ நீ! என் அறிவாளி ஸிஸ்ஸி... உம்மா..“ என்றுவிட்டு போனில் தனது பிரியமான தங்கை என்னும் எதிரிக்கு ஒரு முத்தம் பறக்க விட்டாள்.

“கண்டுப்பிடிச்சிட்டியா..?! கண்டுப்பிடிச்சிட்டியா..?! “என்று காஞ்சனா டயலாக் பேசிய காவ்யா, “ஏன் டீ எரும? ஓடற ட்ரைனோட சத்தம் எப்படி இருக்கும்?! நீ ட்ரைன் மிஸ் பண்ணினா ஸ்டேஷன்ல சத்தம் எப்படி இருக்கும்?! அதோட இன்கேஸ் நீ கீழ விழுந்தா எப்படி ஆக்ஷன் அண்ட் ரியாக்ஷன் சீன்ஸ் இருக்கும்னு எனக்கு தெரியாதா?! எங்கக்காவே.... போதும் டீ...  சரி சொல்லு.. எதாவது பிகர் இருக்கா?! அத்திம் மாதிரி ஏதாவது நல்லா பீசா(piece) இருந்தா சொல்லு.. நானும் சீக்கரம் செட்டில் ஆகணும்ல...” என்று இழுக்க...

“அடியே.. உன்ன என்ன பண்ணினா தேவலாம்?! இரு இரு.. உதய் கிட்ட சொல்றேன். செட்டில் ஆக போறீங்களா... அதுவும்...” என்று தொடங்கியவள், காவ்யா கூறிய  ‘அத்திம்’என்ற சொல்லுக்கு வெகுண்டாள், “ஹே... என்ன டீ... திமிரா?! இப்போ எதுக்கு நீ அவனை பத்தி பேசற...? உனக்கு அவனை மாதிரி ஆளு வேணுமா..! நான் ஒருத்தி அந்த திமிர் பிடிச்சவன கல்யாணம் பண்ணி இப்போ ரொம்ப அழகா வழறேனே.. அந்த மாதிரி வாழவா...? கடுப்ப கிளப்பாம ஒழுங்காகப் படிக்கற வழிய பாரு... எரும...”என்று சீறிப் பாய்ந்தாள்.

“அட... என்னம்மா ஓவரா சவுண்ட் ஏறுது..?! என்ன? ஆளு பக்கத்துல இல்லன்னு கொழுப்பா? என்னவோ என் பாவாகூட நீ கஷ்டப்பட்டு வாழ்ந்த மாதிரி பேசற... நீங்க அடிச்ச கூத்து என்ன! பண்ணின ரொமான்ஸ் என்ன! உங்க ரெண்டு பேருக்கும்..........”

“காவ்யா... shut up I say... Just shut up.!” என்று அதிகாரமாக ஒலித்தது தாராவின் குரல். அதில் அடங்கிய காவ்யா, ‘சாரி டீ... சாரி டீ.... ஆனா எனக்கு ஒரே ஒரு டவுட்டு. கேட்கவா??” என்றாள்.

அந்த குறும்புக்காரி  ஏதோ தூண்டில் போடுவதை உணர்ந்த தாரா, “ஒரு மண்ணும் தேவை இல்லை. போ.. போய் படி.. இல்ல படு. நான் போனை வைக்கறேன்.” என்று நழுவினாள்.

“ப்ளீஸ் ப்ளீஸ்... தாரு... லாஸ்ட் கொஸ்டின் டீ... “

“சரி.. எடக்கு மடக்கா கேட்காம, ஒழுங்கா கேளு...”

“”இல்ல... இப்போ நீ எதுக்கு ஹைதராபாத் வர? என்ன ஸ்பெஷல்? இங்க வீட்ல நாங்க எல்லாரும் இவ்ளோ நாள் கெஞ்சியும் மசியாத நீ, இப்போ எதுக்கு திடீர்னு வர??!! நாளைக்கு.. அதுவும் கண்டிப்பா நாளைக்.....கே வரணும்னு என்ன அவசியம்?! அப்போ நீ போட்ட சவால், சபதம், சண்டைக்கு எல்லாம் அர்த்தம் என்ன?? சோ.......... ?!”

“அப்படில்லாம் எதுவும் இல்ல காவீ... சபதம் சண்டை சவால்... இதுக்கு எல்லாம் நான் அர்த்தம் கொடுக்க விரும்பல. அதுக்கு எந்த அர்த்தமும் இல்ல.. புருஷன் பொண்டாட்டிகுள்ள ஈகோ வர கூடாது டீ... அதுக்கு நாம இடமும் தர கூடாது. ஆனா நாங்க இடம் தந்துட்டோம்.! விஷயம் வேனா பெருசா இல்லாம இருக்கலாம்.. பட் அடிப்பட்டது என்னோட தன்மானம். அது தந்த வலி அதிகம். அதோட எங்க ரெண்டு பேருக்குமே காதல் மாதிரி திமிரும் அதிகம்னு நான் பீல் பண்றேன்.. சோ... இதுலேர்ந்துலாம் வெளில வந்து, எல்லாத்தையும் விட எங்க காதல் தான் முக்கியம்னு நாங்க ரெண்டு பெரும் உணரனும் டீ.. அதுக்கு இந்த சின்ன பிரிவு அவசியம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.