(Reading time: 17 - 33 minutes)

15. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

விடை தெரியா பல கேள்விகள் விடையில்லா பல கேள்விகள் விடை தெரிந்தும் பல கேள்விகள்.. வித்யாசம்.. ஊசிமுனை அளவே..

இதில் வ்ருதுஷ் கேள்வியாது நான்காவது வகை.. விடையை நறுங்கிய நிலை.. ஓர் அழைப்பில் விடையவன் கையில்.. ஆனால் அவன் விடையை எதிர்பார்ப்பது குருஷேத்ரத்தின் கிருஷ்ணனிடத்தில்.. விடையை பெருவனோ..?? குழப்பத்தில் மூழ்குவானோ..??

“மர மேப்பை நீங்க எடுத்து வெச்சுட்டு மயா தொலைச்சுட்டாங்கன்னு ஏன் பிளேட்டை திருப்பிப் போட்டீங்க..??”,என்று தியாவை கூர்மையாக பார்த்தபடியே கேட்டான் வ்ருதுஷ்..

முகத்தில் எந்த ஒரு சலனத்தையும் காண்பிக்காமல் வழக்கம் போல்,”நான் ஏன் அப்படி பன்னுன்னேன்னு உங்கக்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை..“,என்றாள் அவனை விட கூர்மையாக..

“திஸ் இஸ் நாட் அ ஃபேர் ரிப்ளை தியா..”,எரிச்சல் பட்டான் வ்ருதுஷ்..

“ஆல் இஸ் ஃபேர் இன் வார் வ்ருதுஷ்..”,என்று நக்கலாகவும் உறுதியாகவும் மொழிந்த தியா அவனை அலட்சியமாக பார்த்தபடியே படிகளில் கீழ் இறங்கத் துவங்கினாள்..

இரண்டு படிகள் இறங்கியவள் என்ன நினைத்தாலோ மீண்டும் வ்ருதுஷிடம் வந்து,”முடிஞ்சா என் கிட்டத்தான் அந்த மேப் இருக்குன்னு ப்ரூவ் பண்ணிக் காமி  பார்க்கலாம்..”,என்று வ்ருதுஷிடம் சவால்விட்டு விட்டு கையிலிருந்த சிறு பால் போன்ற ஒரு சாதனத்தை அவன் முன் ஒருமுறை தூக்கிப் போட்டுப் பிடித்து, அவனின் சர்ட் பட்டனில் அவனது திகைத்த பார்வையை பொருட்படுத்தாமல் பொருத்திவிட்டு,”யூ கெனாட் ஹைட் எனிதிங் ப்ரம் மீ..”,என்று தனது பழுப்பு நிறக் கண்களால் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கெத்தாக நடந்து சென்றாள்..

அவள் சென்ற பாதையைப் வெறித்தபடி இருந்தவன் க்ரியாவின் உலுக்கலில் சுயநினைவடைந்து,”க்ரியா.. தியா ஏதாவது தீவிரவாத இயக்கத்தில் மெம்பரா இருக்காங்களா..??”,கொஞ்சம் சீரியஸாக கேட்டான்..

“வாட்..?? என்னடா லூசுத்தனமா கேள்வி கேட்கற..??”

“ஐ ஆம் சீரியஸ் க்ரியா..”

“தியா என்னடா பண்ணுனா..??”,அவனின் குரலில் இருந்த எதுவோ ஒன்று க்ரியாவை இக்கேள்வியை கேட்கவைத்தது..

“பேசுல செஞ்சிட்டுப் போயிட்டா..”,என்றவன் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான்..

பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்டவள்,“அவ எது பண்ணுனாலும் அதில் கண்டிப்பா ஏதோ ஒரு காரணம் இருக்கும் வ்ருதுஷ்.. நீ ஏன் டா அவளை வேவு பார்த்த..??”, கோபமாக..

“நான் வேணும்னே பண்ணல க்ரியா.. எனக்கு அந்த மேப்பை தியா தான் எடுத்திருப்பாங்கன்னு இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னால் தான் ஸ்ட்ரைக் ஆச்சு..”

“நீ எப்படி தியா தான் அந்த மேப்பை எடுத்து வெச்சிருக்கான்னு கெஸ் பண்ணுன..??”

“தியா பேசும்பொழுது எல்லா விஷயத்தையும் ஸ்ட்ராங்காகவும் ஸ்ட்ரைட் பார்வார்டாவும் பேசுவாங்க..ஆனால் அன்னைக்கு அவங்க அந்த மேப் தொலைஞ்சு போனதை பற்றி அப்புறம் டீல் பண்ணிக்கலாம் பண்ணிக்கலாம்னே ஏதோ சமாளிப்பாவே சொல்லிட்டு இருந்தாங்க.. அப்போ எனக்கு ஆச்சர்யாவிடம் அந்த மேப்பைப் பற்றி சொன்னால் அவர் மயாவை திட்டுவார் அப்படீங்கரதுக்காக அவங்க அப்புறமா அதைப் பற்றி பேசிக்கலாம்னு சொல்றாங்கன்னு நினைத்தேன்.. ஆனால் இப்போ என்னமோ எல்லாத்தையும் ரீவைன் பண்ணிப் பார்க்கும் பொழுது அன்னைக்கு தியா ரொம்பவே மழுப்பலா பீகேவ் பண்ண மாதிரி ஒரு பீல்.. அதான் அவங்கக்கிட்ட அதைப் பற்றிக் கேட்டேன்.. பட் அவங்க பிஹேவியர் அன் எக்ஸ்பெக்டட்..”,என்றான் சிறிது அதிர்ச்சியோடு..

“நான் இதைப் பற்றி அவக்கிட்ட கேட்கிறேன்..”

“வேண்டாம் க்ரியா.. அவங்கக்கிட்ட நீ இதைப் பற்றி பேசாதே..”,என்று எச்சரித்தான் வ்ருதுஷ்..

“நான் இதைப் பற்றி பேசலைனாலும் அவ கண்டுபிடிச்சுருவா..”,என்று முனுமுனுத்த க்ரியா,”சரி சரி அவக்கிட்ட இதைப் பற்றி நான் பேசமாட்டேன்..,”என்றவள் தாத்தா பாட்டியுடன் பேசுவதாக சொல்லி விட்டு தனது மொபைலை காதில் வைத்தவண்ணம் தனது அறையை நோக்கிச் சென்றாள்..

திகாலை விடியலிலேயே அலரி மலை அடிவாரத்தை அடைந்த ஆச்சார்யா அண்ட் கோ அங்கு தங்குவதற்கு தோதாய் சில டெண்டுகளை தாங்கள் அழைத்து வந்த ஆட்களோடு போடத் துவகினர்..

விண்ணின் பூமாரி மண்ணில் சாரலாய்த் தூவ மயா எழில் விக்கியுடன் மலை அடிவாரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வனத்திற்குள் நடக்கத் துவங்கினர்..

பத்து பதினைந்து அடிகள் எடுத்துவைப்பதற்குள் விக்கி இவர்கள் இருவரிடமும் எதுவோ கேட்க வருவதும் தயங்குவதையும் கண்ட எழில்,”எங்ககிட்ட ஏதாவது பேசனும்மா விக்கி..??”,என்று கேட்டான் நேரடியாக..

ஆமாம் என்பது போல் தலையசைத்தவன் மயாவைப் பார்த்து,,“மயா நான் ஒன்னு கேட்டால் தப்பா நினைத்துக் கொள்ள மாட்டீர்களே..??”,தயக்கத்துடன் கேட்டான்..

“பீடிகை எல்லாம் பலமா இருக்கே.. எதுவா இருந்தாலும் தயங்காமல் கேளுங்க விக்கி.. இவ தப்பாலாம் நினைச்சுக்க மாட்டா..”,என்றான் எழில் சிரித்துக்கொண்டே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.