(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 21 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் மலரின் கல்லூரியில் நூறாவது ஆண்டு விழாவிற்கான அறிவிப்பு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அதை பார்த்தபின் மாணவர்கள் உற்சாகம் பொங்க ஹோ.. .என்று கத்தியபடி தங்கள் வகுப்பறைகளில் ஆட்டம் போட்டனர்.

ஆசிரியர்கள் எத்தனை முயற்சித்தும் அவர்களின் கொண்டாட்டத்தை அடக்க முடியவில்லை.

செழியன் வகுப்பறையினுள் வர, அங்கே ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது. அவனை பார்த்தவுடன்

“குட் மோர்னிங் சார்..” என எல்லோரும் சொல்ல.

“குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ் .. “ என்று எல்லோரையும் அமர சொல்லி கை அசைத்தான்.

அவன் பாடம் எடுக்க நிமிரும்போது,

“சார்.. பாடம் எல்லாம் அப்புறம் பார்க்கலாம்.. இப்போ நம்ம காலேஜ் நூறாவது வருஷம் கொண்டாட்டம் பத்தி பேசலாம் சார்..”

“அதுக்குதான் இன்னும் நாள் இருக்கே பசங்களா..”

“சார்.. நாங்க எல்லாம் முதல் வருஷ ஆண்டு விழாவிற்கே .. முப்பது நாள் படம் ஓட்டுறவங்க.. நூறு வருஷ படம் ஓட்டனும் சார்.. நியாயப்படி.. பார்த்தா எங்களுக்கு இந்த வருஷம் பூரா நீங்க கொண்டாட விட்ருக்கணும்... ஏதோ போனா போகுதேன்னு.. ஒரு மாசத்துலே முடிக்கலாம்னு நினைச்சு இருக்கோம்..”

“அடபாவிகளா.. சரிதான்... விட்டா நீங்க இன்னும் பேசுவீங்க.. சரி ..சரி.. நோட்டீஸ் பார்த்தீங்கள்ள... உங்க கருத்துக்களும் கேட்டுட்டு அதுக்கு அப்புறம் தான் ஒரு லிஸ்ட் ரெடி பண்ண போறோம்.. சோ. உங்க கருத்துக்கள் எல்லாம் சொல்லலாம்..” என்றபடி தன் நாற்காலியில் அமர்ந்தான்..

“சார்.. என்னோட முதல் விருப்பம்.. இந்த வருஷம் செமஸ்டர் எக்ஸாம் இல்லாமல்.. எல்லோரையும் பாஸ் பண்ணி விட்டுடுங்க சார்.. நூறு வருஷமா படிச்ச நம்ம காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் எல்லோர் இதயமும் குளிர்ந்து விடும்..” என்று ஒருவன் சொல்ல, மொத்த வகுப்பறையும் சிரித்தது..

“டேய்.. படுபாவி.. நானும் இங்கே படிச்சு தான்  இன்னிக்கு உங்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன்.. இந்த ஐடியாவ மட்டும் நான் மானேஜ்மென்ட் கிட்டையும், பிரின்சிபால் கிட்டயும் சொன்னேன்னு வச்சிக்கோ முதல் வேலை என் சீட் கிழிச்சு அனுப்புவாங்க..”

“சார்.. ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்குதான் புரியும்னு சொல்ற மாதிரி இந்த காலேஜ் ஓல்ட் ஸ்டுடென்ட்டான உங்களுக்குத்தான் எங்க மனசு நல்ல புரியும்.. சோ நீங்கதான் எடுத்து சொல்லனும்..”

“ஹோய்.. இது ஒன்னும் ஆகர கதை இல்லை .. மொத்தத்தில் என்னை காலேஜ் விட்டு துரத்தி விடணும்னு முடிவு பண்ணிடீங்க... நடத்துங்க..”

“சார்.. நீங்க அப்படி எல்லாம் சொல்லலமா.. நாங்க உங்களோட கண்ணின் மணிகள் சார்..”

“சரிங்கடா.. அதுக்குதான் மொத்தமா ஆப்பு வைக்க முடிவு பண்ணிடீங்களே... “ என்று சிரித்தவன்,

“ஓகே.. இத தவிர வேற எதாவது கருத்துக்கள் இருந்தா சொல்லலாம்..”

“சார்.. உங்க லிஸ்ட் லே.. கேம்ஸ் ஈவென்ட் எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் vs டீச்சர்ஸ் போட்ருக்கீங்க.. அப்படி வேண்டாம் சார்..”

“ஏன் பா.. அப்போ தானே நமக்குள்ளே நல்ல பாண்டிங் இருக்கும்..”

“அதுக்கு இல்லை சார்,.. நம்ம ரெண்டு பேருமே சமமான பலத்தில் இல்லாதவர்கள்.. ஒரு இடத்தில் எங்கள் பலம் அதிகம் இருக்கும்.. ஒரு இடத்தில் உங்கள் பலம் நிறைய இருக்கும்.. போட்டியில் குறிபிட்டுள்ள எல்லாமே குழு விளையாட்டுக்கள் தானே.. அதனால் எல்லா டீம்க்கும் ரெண்டு டீச்சர்ஸ் மற்றவர்கள் ஸ்டுடென்ட்ஸ் என்று குழு அமைக்கலாம்.. “

“ஹ்ம்ம்.. குட் ஐடியா.. அப்படி என்றால் department வாரியாக குழு கிடையாது.. எல்லா ஸ்டுடென்ட்டும் எல்லா குழுவிலும் கலந்து தான் இருக்க வேண்டும்.. அப்படி என்றால் தான் போட்டிகளும் சரியாக நடத்த முடியும்..”  என்று முடிக்க, மாணவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அதே நேரம் மலர் எடுக்கும் வகுப்பறையிலும் இதே டாபிக் நடக்க, அங்கேயோ

“மாம். கர்ல்ஸ் vs பாய்ஸ் என்று போட்டி நடத்தலாம்..” என்று கேட்க,

மலரோ “நோ.. அது தேவை இல்லாத ஈகோ உருவாக்கும்.. என்னை பொறுத்தவரை இரு பாலருமே சமமான அளவில் எல்லா போட்டிகளும் பங்கேற்க வேண்டும்.. உங்க வெற்றிக்கு அவர்களும், அவர்களின் வெற்றிக்கு நீங்களும் இணைந்து பாடு பட்டீர்கள் என்றால் நல்ல டீம் உருவாகும்.. எல்லோர் இடத்திலும் ஒரு பரஸ்பர நம்பிக்கை ஏற்படும்..” என்று கூற, மாணவிகளும் ஆமோதித்தனர்.

பின் அவள் மாணவிகளிடம் எந்த எந்த போட்டிகள் சேர்க்கலாம் என்று கேட்க, அவர்களும் சளைக்காமல் பதில் அளித்தனர்.

ரங்கோலியில் ஆரம்பித்து பாட்டு, டான்ஸ், டிராமா என்று எல்லா வகை போட்டிகளும் நடக்க விருப்பம் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரின் கருத்துக்களும் தொகுத்து வைத்தாள் மலர். இது எல்லா வகுப்புகளிலும் நடக்க, அந்த அந்த ஆசிரியர்கள் குறித்து வைத்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.