(Reading time: 8 - 16 minutes)

ன்று மாலை வண்டி எடுக்க செல்லும் போது செழியன் , மலர் இருவரும் சற்று நேரம் தங்கள் வழக்கம் போல் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.

செந்தில் இவர்களை கொஞ்ச நாளாக கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.. அவனுக்கு செழியன் மேல் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.. அவன் மலரை பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருந்தது..

இத்தனைக்கும் அவன் ஆசையாகவோ, காதலாகவோ கல்லூரியில் இருக்கும் போது பார்க்க மாட்டான்.. ஆனாலும் வித்தியாசம் தெரிந்தது.. இதை எப்படி கேட்க என்று யோசித்துக் கொண்டு இருந்தவன், இன்றைக்கு அவர்களின் பார்கிங் ஏரியா சந்திப்பை பார்த்தவுடன் கேட்க முடிவு செய்தான்.

அவர்கள் இருவரும் நின்று பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவன், சற்று நேரத்தில் அவர்கள் கிளம்புவதை புரிந்து கொண்டவன், அப்போதுதான் வருவதை போல் அந்த பக்கம் வந்தவன்..

“ஹேய்.. மாப்ள.. நீ இன்னும் கிளம்பலியா?” என்று வினவ,

மலரிடம் கண்ணால் ஜாடை செய்த படி ,

“கிளம்பி விட்டேனடா மச்சான்.. மலர் மேடம் .. அவங்க கிளாஸ் பசங்க பற்றி பேசிட்டு இருந்தாங்க ... நீயும் வந்துட்ட..” என

“ஒஹ்.. அப்படியா “ என்று ஆச்சரியமாக வினவியவன், “ஏன்மா.. பசங்க எதவும் வரம்பு மீறி நடக்கறான்களா..” என்று மலரிடம் நேரிடையாக கேட்க, ஒரு நொடி செழியனை பார்த்து விட்டு,

“அதெல்லாம் இல்லை அண்ணா.. இந்த ஆண்டு விழா கொண்டாட்டம் பத்தி தான் பசங்க பேசிட்டு இருந்தாங்க.. இந்த அறிவிப்பு வந்ததுலேர்ந்து பசங்க கிளாஸ் நடத்தவே விட மாட்டேன்குறாங்க.. எங்கியாவது எப்படியாவது சுத்தி இந்த function விஷயத்துக்கு வந்துடறாங்க... இப்படி இருந்தா எப்படி portion முடிக்கறதுன்னு சார் கிட்டே கேட்டுட்டு இருந்தேன். “ என,

“ஆமாம்.. செழியா.. எல்லா கிளாஸ்சம் இதே பிரச்சினைதான்.. எப்படி சமாளிக்க்ன்னு தெரியல..”

“பார்க்கலாம் டா. பிரின்சிபால் கிட்டே பேசிட்டு இதுக்கு என்ன செய்யரதுன்னு பார்க்கலாம்.. நீங்க கிளம்புங்க மேடம்..” என,

மலரும் இருவரிடமும் பொதுவாக தலையாட்டியபடி “வருகிறேன் “ என கூறியபடி தன் கவச குண்டலங்களுடன் கிளம்பி விட்டாள்.. அதுதான் ஓவர்கோட், ஹெல்மெட் சகிதம்..

அவள் சென்றதும் வண்டியை எடுத்த செழியன், செந்திலை பார்க்க, அவன் ஏதோ யோசனையோடு நிற்கிறார் போல் இருந்தது,

“என்ன புது மாப்பிள்ளை.. இன்னும் சார்க்கு தேன்நிலவு முடியல போலே. நின்னுகிட்டே கனவு காங்கர..”

“அட போலே.. இத்தனை நாளா வீட்டுலே இருக்கிற நண்டு சுண்டு வரை.. நம்மள பார்த்த .. ஆத்தி.. மாப்பிள்ளை ன்னு சீன் ஓட்டிட்டு இருந்துதுக.. இப்போ எல்லாமே தலை கீழ்.. “

“ஏம்லே.. இப்போவும் நீதானே புது மாப்பிள்ளை.. “

“அதம்லே இல்லை.. கல்யாணம் முடிஞ்சு பொண்ணு மாப்பிள்ளை மறு கல்யாணம் பார்க்கணும்.. அதுக்கு பொறவுதான் மத்த நல்லது கேட்டது எல்லாம் கலந்துக்கனும்னு சொன்னாக.. நானும் சரின்னுட்டு என் மனைவி சைடு அத்தை பொண்ணு கல்யாணம் வந்ததுன்னு அங்கே போயிட்டு வந்தோம்.. வந்தா ரெண்டு வீட்லேயும் பெருசுங்க ரவுசு காட்ட ஆரம்பிச்சுட்டுதுங்க..

“என்னடே செஞ்சாங்க...”

“ரெண்டு வீட்டு பெருசுங்களும், என் பொண்டாட்டிக்கு சமைக்க கத்துக் கொடுக்கறாங்களாமாம்.. அதனால் ரெண்டு வீட்லேயும் என் பொண்டாட்டி தான்.. எங்க அம்மாவ கேட்டா வீட்டு மருமகளுக்கு பொறுப்பு வரணுமாம்.. எங்க அத்தைய கேட்டா பொண்ணுக்கு ட்ரைனிங் கொடுக்கிறோம் மாப்பிள்ளை.. ன்னு கதவுக்கு பின்னாலே இருந்து முணுமுணுப்பு.. “

“ஏண்டா இது நல்ல விஷயம் தானே..”

“எது.. என் பொண்டாட்டி சமைக்கிறதா.. அட போப்பா.. அவ காபிய சுடுதண்ணி மாதிரி குடுத்தாக் கூட பரவா இல்லை.. சுடுதண்ணி கே மஞ்சத்தூள், காரம் , உப்பு எல்லாம் போட்டு சுடுதண்ணின்னு கொடுக்கிரா.”

“அப்புறம் நீ என்ன செஞ்ச?” ஹ.. ஹா என்று சிரித்தபடி செழியன் கேட்க,

“ஏன்மா.. எதுக்கு சுடுதண்ணிக்கு எல்லாம் மஞ்ச தூள் போட்ருக்கன்னு கேட்டா, எங்க எந்த ஒரு சாப்பாட்டுக்கும், மஞ்சள் காரம் , உப்பு இவை மூனும் சரியான அளவா  போட்டு எது செஞ்சாலும், அது நல்லா ருசியா இருக்கும்னு அப்பத்தா சொல்லிருக்காங்க..  அப்படின்னு கைலே கொண்டு வந்து கொடுத்துட்டு போறா.. “

இப்போ இன்னும் பலமாக சிரிக்க, செந்தில் அவனை அடிக்க துரத்தினான்.. பிறகு இருவரும் வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பினர்..

சற்று தூரம் சென்ற பின்னர்

செந்தில் “டேய் செழியா... உன்கிட்ட வித்தியாசம் தெரியுதுடா... “ என

“அது எல்லாம் ஒன்னும் இல்லை னா.. உனக்கு தான் பார்க்கும் இடம் எல்லாம் நந்தலாலா.. ன்னு பாடுற மாதிரி .. உன் கண்ணில் வழியும் காதல் எல்லோர் கண்ணிலும் வழியற மாதிரி இருக்கோ என்னவோ ?”

“டேய்.. யாரு நானு.. ? அப்படின்னு பாடனும் தோணிச்சால் நேரே வீட்டுக்கு போயடுவேண்டி... உங்கள மாதிரி காத்துலே தூது விட்டுட்டு இருக்க மாட்டேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.