(Reading time: 24 - 48 minutes)

15. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

செய்தது சரியா தவறா? நிச்சயம் தவறு தான், ரிஷியிடம் மனதை திறந்ததில் ஏற்பட்ட நிம்மதி, அடுத்த சில நிமிடங்களிலேயே விக்னேஷை காயப்படுத்தியதில் மறைந்துபோனது, அது தான் உண்மை. இதை விட வேதனை தரும் நாள் ஒன்று இனி இல்லை” என செல்விக்கு தோன்றியது. தோட்டத்து புழக்கடையில் நடையோ நடை என நடந்து தீர்த்தும், மனதின் வேதனை மட்டும் தீர்வதாய் இல்லை. இவளை வீட்டில் விட்டு விட்டிற்குள் வராமற்போனதற்கே வனிதா இவளை வருத்து எடுத்துவிட்டாள். இதில் நடந்த பிரச்சனையை சொன்னால் அவள் கதி அதோகதிதான். ‘அப்பா’ எங்கிற அற்புதமான உறவு தரும் பாதுகாப்பையும் அன்பையும் அறியாதவள், இன்று விக்னேஷ் சொன்ன வார்த்தைகளில் சிறிது தெளிந்திருந்தாள். அவரை பற்றி அறிந்துகொள்ள இதயம் துடித்தது. ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் தன் அப்பாவைப்பற்றி கேட்பது.

எத்தனையோ முறை, பல தருணங்களில் விக்னேஷின் பார்வை அவளைத் துழைக்கும்போதெல்லாம் வெருப்புடன் முகம் திருப்பி இருக்கிறாள், இன்று அவனிடம் பேசுவதற்கு ஏங்கி எத்தனை முறை இவள் திரும்பியும் அவன் இவள் புறம் திறும்பவேயில்லை. அருந்ததியைப்பற்றி வாயைத்திறந்து இந்த கல்யாணத்தை எளிதாக நிறுத்திவிட முடியும் தான், ஆனால் இறுதியாகவும் தீர்மானமாகவும் ரிஷி சொன்னது ஞாபகத்தில் வந்து போனது. அதை எல்லாம் விட, ‘விக்னேஷ்’ அவனைப்பற்றி ஏன் உள்ளம் நினைக்கிறதென அவளுக்கு புரியவில்லைதான். எந்த சூழ்நிலையிலும் அவன் அவமானபடுவதையோ இல்லை வருந்துவதையோ  செல்வியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும் அவன் கல்யாணத்தை நிறுத்தப்போவதாய் எந்த வார்த்தையும் விடவில்லை. எனில் அவன் மனதில் இருப்பதுதான் என்ன? செல்வியின் மனம் தவித்தது.

“உண்மையில் ரிஷி கேட்டதுபோல், எனக்கு விக்னேஷைப் பற்றி என்னதான் தெரியும்?” தவறு என் மேல்தான, மனதின் கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து உண்மையான அன்பை அவமதித்து விட்டேனா என்ன?”  என அவள் தவித்தாள்.

காவ்யா-ரிஷி இடையே உள்ள முழுமையான காதலயை செல்வி இன்று நேரில் கண்டுகொண்டாள், ஒருவரை ஒருவர் உளமாற நேசித்தால் அவர்களது கண்களிலே தெரிந்த அந்த காதல், இவள் மன கற்பனைகளை வேரோடு அருத்துவிட்டது. ஒரு காதல் முளையிலேயே அரியபட்டதன் வலி கண்களில் வழிந்தது கண்ணீராக.  திடீரென்று பூமிபிளந்து தன்னை விழுங்கிக்கொள்ளக் கூடாதாவென எண்ணம் வந்தது.  எத்தனை முறை துரத்திவிட்டாலும் அறியா குழந்தை அருகே வருவதுபோல் இவள் பாராமுகம் தாண்டி தன்னை நெருங்கியவனின் முகம், வலியின் நடுவே வந்துபோனது.

தனியே விக்னேஷை அவள் ஒண்டிரண்டு முறை சந்தித்திருப்பாள், தானுண்டு, தன் வேலையுன்டென மருத்துவமனையில் இவள் பணியில் இருக்கும்போது, ஏதேதோ காரணங்களை சொல்லிக்கொண்டு இவள் அருகே விக்னேஷ் வரும்போது அவனை சந்தித்திருக்கிறாள், தவிர திடீரென ஒரு நாள் இளமாறன் நீட்டியப் புகைப்படத்தில் அவனைப் பார்த்ததும் செல்விக்கு ஒருவாறு எல்லாம் புரிந்தது, பணக்கார வீட்டுப்பிள்ளை, தான் வேண்டியதை அடையும் ஆவலில் இவளையும் கேட்டிருப்பான், அது கல்யாண ஏற்பாட்டில் வந்து நின்றிருக்குமென்பது எண்ணம்.

இன்று அவன் வாய் வார்த்தைகளில் தெளிவாய் ஒன்றை உணர்த்தினான், அது ‘உன் மீது ஏற்பட்ட மோகமல்ல பெண்ணே, இது உன் உன்னத குணத்தாலும் பண்பாலும் என்னுள் எழுந்த காதல் என்று!’  இப்போது தெளிவாய் அறிவிற்கு விளங்குகிறது, விக்னேஷ் இவன் மீது வைத்தது காதல், இவளுக்கு ரிஷி மீது வந்தது ஈர்ப்பு, அப்படி தான் ரிஷி இவள் முகத்தின் முன் கத்தினான். நன்று அடைய முடியாத இடத்தை மறப்பதே நல்லது. இதை ஆயிரம் முறை மனதிற்கு சொல்லி, முடிந்த வரை அழுது தீர்த்து, ரிஷியை மனதிலிருந்து களைய அவள் கடும் போராட்டத்தை மேற்கொண்டாள்.

பௌர்ணமி இரவில், பெருங்கடலின் சத்தம் காதில் விழுந்தது. ஓயாது தரையை முட்டும் அந்த ஆழி அலைகளைப்போன்று விக்னேஷின் மனமும் அலைக்கழிந்தது. நிர்பந்தத்தின் பேரில் தான் செல்வி இவனிடம் வரப்போகிறாள் என்ற எண்ணம் இதயத்தை கீறியது. சரி, போகட்டுமென அவனால் அவளை எளிதில் இழக்க முடியாது. ரிஷியின் மீது கடும் கோபம் வந்துபோனது, தன்னவளின் இதயத்தை தீண்ட அவனுக்கு எந்த உரிமையும் இல்லையென்ற கோபம். கூடவே செல்வியை ஒரு இக்கட்டான நிலையில் இருந்து காத்து, தன்னையும் பிரச்சனைக்கு உள்ளாக்கிக்கொண்ட நண்பன் மீது கரிசனமும் வந்தது. "விரைவில் ரிஷியின் திருமணம் நடந்தால், செல்விக்கு நிலைமை விளங்கும், எனினும் அவள் மனதை திருப்பும் வழி ஒன்றும் புலப்படுவதாய் இல்லை, சில நாட்கள் அவளை விலகியிருக்கலாம் என்பது எண்ணம், அருந்ததி அத்தையின் வீட்டுக்கு செல்வி சென்றால் அவள் ரிஷியை சந்திக்க வேண்டியிருக்கும் எனில் அவள் மனம் லேசில் மாறாது, ஓரே ஒரு நிம்மதி காலை உடைத்து இவன் கெஸ்ட் ஹவுசில் இருக்கும் வரை, தனியாக செல்வி அங்கு போகமாட்டாள்,  சீ சீ இது என்ன எண்ணம், அவளது மென்மையான பெண்மையைப் பற்றி இவன் அறியாததா? அவ்வளவு கனவுகளும் கற்பனைகளும் இப்போது சரிந்துபோனது! வெகு நேரம் இந்த எண்ணங்களால் சூழப்பட்டு, இறுதியில் அவளது நினைவுகளை துரத்தமுடியாது மீண்டும் செல்வியைப்பற்றிய கற்பனைகளிலேயே வீட்டிற்குள் வந்து கட்டிலில் தோய்ந்து தலையணையை செல்வியாய் நினைத்து உருகி, கோபப்பட்டு  கடைசியில் கற்பனையில் அவளை அனைத்து உறங்கிப்போனான், அந்த உன்னதக் காதலன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.