(Reading time: 24 - 48 minutes)

காதலில் திழைத்திருந்த பெண்மைக்கு திடீரென்று ஒளிர்ந்த விளக்குகளில் நாணம் வர மெதுவாக அவனிடமிருந்து விலகி எழுந்துகொண்டாள் தன்னை சரிபடுத்துக்கொண்டு இவள் கிளம்ப எத்தனிக்க கிட்டத்தட்ட பெண்மைதந்த போதையில் இருந்தவன் இவள் விலகுவது பொறுக்காது விருட்டென்று கைகளைப் பிடித்து இழுத்தான், அவனது அழுத்தமானப் பிடிக்குள் படர்ந்த சூடு அச்சுறுத்த, “நேரமாச்சு, நான் கீழ போறேன்!” அவனது முகத்தைப்பார்த்துக் கூற துணிவில்லை அவன் பிடியிலிருந்த கையைத்திருகியவாரே சொன்னாள், அவன் இன்னுமாய் அழுத்திப்பிடித்தான், அந்த உரிமையிலும் வலியிலும் தான் எத்தனை சுகம், “தர்ஷூ இன்னும் கொஞ்ச நேரம் இரு ப்ளீஸ்!” குழைந்த வார்த்தைகளில் தாபம் இருந்தது.

தர்ஷினியின் கன்னங்கள் சிவந்துபோயிற்று, அதுக்குமேல் அங்கிருக்க துணிவில்லை, அவளது பெண்மை கிளர்வதை உணர முடிந்தது, “வேண்டாம்!” என்று தலையசைத்து நகர துணிந்தவளை இழுத்து அனைத்தான். ஒரு நோடி உலகத்தின் இன்பங்கள் யாவையும் அனுபவித்துவிட்டதாய் இருவரும் திழைத்திருந்த அந்த நொடி,

“தர்ஷினீ…” உக்கிரமாய் வந்த சப்தத்தைக்கேட்டு பதறி இருவரும் விலக தோட்டத்து வாசலில், உக்கிர மூர்த்தியாய் மாணிக்கம்.

சிவாவீட்டின் தோட்டாத்துக் கதவை படாரென திறந்துகொண்டு ஆக்ரொஷமாய் மாடிப்படிகளைத் தாவி ஏறினார். என்ன நடக்கிறதென இருவரும் உணரும் முன்னரே, அவர் சிவாவின் பிடியிலிருந்து தர்ஷினியை இழுத்து தன் பக்கம் கொண்டுவந்தார், “மாமா…” என வாயைத்திறந்த சிவாவின் கன்னங்களில் பளார் பளாரென அறைந்தார், மூன்றாம் முறை, அவர் கை ஓங்கும்போது, அவரது கையை அழுத்திப்பிடித்தான் சிவா, தர்ஷினியும் குறுக்கே வந்து நிற்க, மாணிக்கத்தின் கண்கள் சிவந்தது.

“பொறுக்கி இராஸ்கல், என்ன தைரியம், என் கண் முன்னாடியே என் பொண்னோட கைய பிடிச்சு இழுப்ப…?”

“அப்பா ..ப்ளீஸ்..!” – தர்ஷினி தடுமாறி எதுவோ சொல்ல நினைக்க..

“சீ.. வாயமூடு, தர்ஷீ, உனக்கு உடம்புல என்ன திமிர் இருந்தா அர்த்த இராத்திரில இங்க வந்து நிப்ப..நீயா இவன தேடி வந்தீயா, இல்ல உன்ன வரவச்சான இவன்..” நரநரவென மாணிக்கம் பல்லை கடிக்க, தர்ஷினியின் ஈரக்கொலை நடுங்கிற்று.

“மாமா கொஞ்சம் மெதுவா பேசுங்க..”

“என்னத்தடா மெதுவா பேசறது.. நீ பன்னின காரியத்துக்கு அப்படியே உன் கழுத்தை அறுத்து.. “ என பல்லைக் கடித்துக்கொண்டே அவர் இரு கைகளாலும் சிவாவின் கழுத்தைப்பிடிக்க, தர்ஷினி அவரைத் தடுக்க, சிவா அவரைக்காயப்படுத்தாது தன் கைகளில் இருந்து கையை எடுக்க திமிரினான்.

மாடியில் ஏற்பட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட செண்பகம், பதறி மேலே ஓடி வந்தார், தட்டுதடுமாறி அவர் வந்து நிற்கும்போது, சிவாவின் கழுத்தை இருக்கிக்கொண்டிருந்தார், “அப்பா.. அவர விடுங்க என..” கூச்சலிட்ட தர்ஷினியின் குரல் அவர் காதுகளை எட்டவேயில்லை. செண்பகம் ஓடி வந்து தடுக்க, ஒரு கையால் அவரை தள்ளினார் மாணிக்கம், செண்பகம் அருகே இருந்த கம்பியில் முட்டபோக, அவ்வளவு நேரம் திமிரிய சிவா, மாணிக்கத்தை உதறிவிட்டு, செண்பகம் தரையில் விழுவதற்கு முன் கைத்தாங்கலாய் பிடித்தான்.

மறுபடியும் ஓடி வந்த மாணிக்கத்தை இப்போது ஆக்ரோஷமாய் பிடித்துக்கொண்டான் சிவா, அவன் கண்களில் முதன்முறையாக கோபம் தெரித்தது. “மாமா.. இன்னொரு முறை என் அம்மா மேல கைப்பட்டுச்சு மரியாதை கெட்டுடும்..”

“இன்னும் கெடுறதுக்கு என்னடா இருக்கு.. பொறுக்கி.. தர்ஷினி என் உயிரு டா, யாரவாது பார்த்தாக்கூட கையெடுத்து கும்பிடுற குல விளக்கா இருந்த பெண்ண மயக்கி இப்படி நடு இராத்திரி.. சீ பெத்த அப்பன் வீட்டுல இருக்கிற அப்பவே நீ இப்படி இருக்க….!”

“ஐயோ அப்பா…நீங்க அவசரபடுறீங்க..!”

“தர்ஷினி ஒழுங்கு மரியாதையா கீழ போ, இல்ல …!” அவரது மிரட்டலை விட தர்ஷினியின் மனம் சிவாவின் மீது அவருடைய வெறுப்பை நினைத்து தான் வாடியது.

“மாணிக்கம், என்ன பேச்சு இது? நம்ம பசங்க நடத்தைய நம்மளே களங்கம் சொல்றது தப்பு, கீழ போய் பேசலாம் வா!” கைதாங்கலாய் சிவாவின் அருகே நின்ற செண்பகம் சொன்னார்.

“உங்க பையன் நடத்தை தான் வெட்ட வெளிச்சம் ஆயிட்டே.. இதுக்கு மேல ஏன் மறைக்கிறீங்க..?”

“மாணிக்கம்  வார்த்தைய அளந்து பேசு, என் மகன தரக்குறைவா பேசினா, நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்!”

“என்ன செய்வீங்க, அதான் சின்னப்பொண்ண மயக்கி இவ்வளவு தூரம் வந்தாச்சு, நான் பாக்கலனா இந்த பொறுக்கி என் பெண்ண என்னவெல்லாம்.. சீ சொல்லவே நாக்கு கூசுது!”

“அப்பா…” என தர்ஷினி கத்த , தர்ஷினியின் மீது கையை ஓங்கினார் மாணிக்கம். அந்த அடி அவள் மீது விழும்முன்னே தடுத்துவிட்டான் சிவா. “மாமா, என்ன பன்றீங்க, தப்பு என் மீது தான் அவளை ஏன் காயப்படுத்துறீங்க.. கீழ போங்க ப்ளீஸ்.. தர்ஷினி நீ மாமாவ அழைச்சுட்டு போ, நாளைக்கு பேசலாம்!”

“என்னடா நடிக்கிற, என் பொண்ணை நான் அடிப்பேன் திட்டுவேன் நடுவுல நீ என்ன சொல்றதுக்கு, செய்றதெல்லாம் செஞ்சுட்டு நல்லவனா? என்ன கீழ போக சொல்றியா?”

“மாணிக்கம்.. வார்த்தைல மரியாதை இருக்கட்டும், தர்ஷினி வந்து நிக்கிறது என் வீட்டு மாடி, உன் பொண்ணு தான் இங்க வந்தாளே தவிர என் பையன் அத்துமீறல..!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.