(Reading time: 24 - 48 minutes)

“எவா அவ, மது மாடு மண்ணுனு, மண்ணாங்கட்டி, எவளா இருந்தாலும் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவேன்.. சும்மா நீங்க நீட்டின கயித்துக்கு நான் கழுத்த நீட்டினேனு நினைச்சுறாதீங்க… அது ஒரு இரவ என் வாழ்க்கையோட அஸ்திவாரமா நினைச்சுருக்கேன், விருப்பமே இல்லாம நீ கட்டினதாவே இருக்கட்டும், ஆனா உன்னோட பொண்டாட்டியா என்ன நினைச்சுதான் இந்த தாலிய நான் சுமக்கிறேன்..இன்னொருத்தி கழுத்துல நீ தாலி கட்டனும்னாலும், எங்கிட்ட இருந்து இத கழட்டனும்னாலும் அது நான் செத்ததுக்கப்புறம் தான் நடக்கும்.”

அவள் சட்டைக்காலரை பிடித்து பேசியதில் அவனுக்கு உள்ளே குளிரதான் செய்தது, அந்த உரிமை மனதை ஏதோ செய்ய, அருகே இருந்த அவள் முகத்தையும் இதழையும் கண்கள் வருடியதில் அவன் சட்டைக்காலரை விட்டு விலகினாள். லேசாக கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

“சரி நீ இவ்ளோ தூரத்துக்கு வந்தப்புறம் ஓப்பனாவே பேசலாம்!” அவன் பேசிய விதம் தனில் மகிழ்ந்து நிமிர்ந்தாள்.

“உங்கப்பா கிட்ட வந்து சார், நான் இளமாறன் உங்க புள்ள கிட்ட மாசம் நாற்பாதாயிரம் சம்பளம் வாங்குற ஒரு அனலிஸ்ட்.  பெரிசா சொத்து பத்து எதுவும் கிடையாது, தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கின நாலு லட்சம் கடன், சொந்த வீடுனு ஐம்பது வருஷ பழைய வீடு ஒன்னுதான் இருக்கு, அதை ரிப்பேர் பன்னகூட நான் லோன் போடனும், நீங்க மகாராஜா உங்க வீட்டு இளவரசிய இந்த ஒன்னுமே இல்லாதவனுக்கு கட்டி கொடுங்கனு கேட்கவா கீர்த்தனா?”

“உங்கப்பா என்ன சும்மா விடுவாரா? இல்ல ரிஷி சார்கிட்ட வேல செஞ்சுகிட்டு அவர் தங்கைய நான் விரும்பினா நல்லாவா இருக்கும்.. ஒரு கேவலமான நிலைமைல நமக்கு நடந்தத பத்தி யார்கிட்டயும் சொல்ல முடியுமா? இல்ல சூழ்நிலை அப்படினு சொன்ன அவங்க சிரிக்கமாட்டாங்க?”

அவன் சொன்னவற்றைக் கேட்டு சோர்ந்துபோனவள், அருகே இருந்த சேரில் அமர்ந்து முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டாள். விழி முட்டியது. நிமிர்ந்து அவனை பார்க்கும்போது கன்னத்தில் விழுந்து ஓடியது ஒரு துளி. “நீங்க உங்களை ஏன் இவ்வள்வு தாழ்வா நினைக்கிறீங்க மாறன், நான் எதுக்கெல்லாம் தான் போராடுறது..? இது நம்ம வாழ்கை எங்கிட்ட இது இருக்கு உங்கிட்ட அது இருக்குனு கேல்குலேட் பன்னிட்டு இருக்க இது வியாபாரமில்ல.. நம்ம இரண்டு பேர்கிட்டயும் படிப்பு இருக்கு, உங்கம்மாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு, நீங்க சொன்ன மாதிரி ஒரு இளவரசியா என்ன நினைக்கிற அளவுக்கு எங்க வீட்டுல எல்லாருக்கும் என் மீது அவ்வளவு அன்பிருக்கு, அதுக்கு மேல நம்ம விருப்பத்தா சொன்னா அவங்க ஏதுக்கமாட்டாங்களா என்ன?”

“ஆமா நீங்க சொன்னவுடனே கோடீஸ்வரர் விஸ்வம் அவர் பொண்ண எனக்கு கட்டிக்கொடுத்துருவாரு.. அம்மா தாயே நீ கிளம்புறீயா இவ்வளவு நேரம் நீ இங்க நின்னதுக்கே என் மேல லேசா சந்தேகம் வந்திருக்கும்.. போதும்மா.. உங்கள மாதிரி பணக்காரங்கள நம்பி ஏமாந்தது, என் அம்மா காலத்தோட முடியட்டும், உங்க வார்த்தைகளை நம்பினா தெருவுல தான் நிக்கனும்.. அட்லீஸ்ட் இப்போ உருப்படியா ஒரு வேலை இருக்கு, நீ சொன்ன மாதிரி செஞ்சா நான் மறுபடியும் தெருவுக்கு தான் வரணும்…”

 “மறுபடியும் மறுபடியும் நீங்க உங்க அம்மா ஒத்துக்கனும்னோ, இல்ல உங்களுக்கு தகுதி இல்லனோ தான் சொன்னீங்க, உங்களுக்கு என்னபிடிக்கலனு நீங்க இதுவரைக்கும் சொல்லல மாறன்..!”

மாறனுக்கு கோபம் வந்தது. அவளை பிடிக்காதென எந்த மடையனும் சொல்லமாட்டான் தான். ஒருவேளை அவன் மனதை அறிந்துகொண்டாளா இவள்? எனில் அதை வளரவிடாது வெட்டுவது நல்லது. ஒரு அடி முன்னால் வந்து அவள் வலக்கையின் தோளுக்கு கீழே அழுத்திபிடித்து இழுத்தான்..

“ஏய்.. உனக்கு என்னடி வேணும்…நானும் இவ்வளவு விளக்கிட்டேன்.. படிச்சவ தானே நீ… ஒரு தரவ சொன்னா புரியாது..விலகி விலகிபோனாலும் ஏன் இப்படி பின்னடியே வந்து நிக்குற.. எனக்கு உன்ன பிடிக்கல சுத்தமா பிடிக்கல..உன் மூஞ்சியும் முகரகட்டையும், அத பார்த்தா அப்படியே எரியுது உள்ள…அன்னிக்கு உன் கழுத்துல தாலி கட்டினேன் தான், அது உன்ன காப்பாத்திறதுக்கு இல்ல, என்ன காப்பாத்திக்கிறதுக்கு, இத கூட புரிஞ்சுக்க முடியலா.. நீ எல்லாம் … “

“அப்புறம் இப்படி பின்னாடியே வந்து கெஞ்ச உனக்கு வெக்கமா இல்ல…ஓ வேற எதாவது வேணும்னு இப்படி பின்னடியே அலையிறீயா என்ன? அப்படி வேணும்னா உங்கப்பா கிட்ட சொல்லி சீக்கிரமா எவனையாவது கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதுதானே, ஏன் என் கழுத்த அருக்கிற?” கீர்த்தனா ஒரு நொடி வெக்கித்து போனாள். அசையாது அவன் முகம் பார்த்தாள். அவனது இந்த கேவலமான வார்த்தைகளுக்கு துவண்டு விட்டாள், கால்கள் தடுமாறியது…அவனை நிமிர்ந்து பார்க்கும்போது கண்கள் சிவந்து இருந்தது.. அந்த முகத்தைப்பார்த்ததும் இளமாறனின் பிடி தளர்ந்தது. கீர்த்தனா அதன் பின் ஏதும் பேசாது அவனைத்திரும்பி பார்க்காது வெளியேறினாள். இளமாறன் உறைந்துபோய் நின்றான். வெகு நேரத்திற்கு பிறகு இளமாறன் மேசையை பார்க்கும்போது அதில் கீர்த்தனாவுடைய கார் சாவி இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவன் கீழே வரும்போது, ட்ரைவர் கோபி ஓடி வந்தான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.