(Reading time: 24 - 48 minutes)

ஒரு நொடி தர்ஷினியும் சிவாவும் அதிர்ந்து போய் நின்றனர். உண்மையும் அது தானே, ஒரு பெண் செய்யும் சிறிய தவறு கூட இப்படி பிரளயத்தைக் கிளப்பக்கூடுமென இப்போது புரிந்தது.

“ஆஹா, உங்க உத்தம புத்திரன பத்தி ஊருக்கே தெரியும்.. இதுல என் பெண்ண பத்தி பேசுறீங்களா?”

“மாணிக்கம் தர்ஷினி நம்ம வீட்டு பெண் அவளை குறை சொன்னா சொன்னவங்க நாக்க  நானே அருத்துறுவேன், நிலைமய புரிஞ்சுக்கோ சின்ன சிருசுங்க ஏதாச்சு பேசனும்னு வந்திருக்கும், இல்ல ஏதேச்சியா பார்த்துபேசிகிட்டு இருந்திருக்கும்.. நாம ஏன் அத பெரிசு படுத்தனும்?”

“ஐயோடா உங்க புள்ளைக்கு விவரமே தெரியாது பாருங்க… நான் இங்க வரும்போது என் பெண் கைய பிடிச்சு திருவிக்கிட்டு இருந்தான் திருட்டுபய..!”

“இருக்கட்டுமே.. தர்ஷினி மேல அவனுக்கு இல்லாத உரிமை என்ன இருக்கு.. மாணிக்கம், தர்ஷினிய கல்யாணம் பன்றதுக்கு, சிவாக்கு இல்லாத உரிமைவேறு யாருக்கு இருக்கு… நமக்கு உறவில்லையா என்ன..? கொடுக்க உனக்கு மனசில்லை!

“ஆமா இல்லை… தர்ஷினிய எவனுக்கு வேணும் நாலும் கொடுப்பேன் இந்த கேடுகெட்டவனுக்கு மட்டும்..” அவர் சொல்லி முடிக்கும் முன், தர்ஷினியின் கோபம் எல்லையைக் கடந்தது.

“அப்பா.. மரியாதையா பேசுங்க..நான் அவரை விரும்புறேன்..” அவள் கத்தியவிதம் தனில் ஒரு கனம் மாணிக்கம் உறைந்து மீண்டார்.

“தர்ஷினி.. உனக்கு இவன பத்தி தெரியாது…நீ குழந்தை டா..!”

“அப்பா.. சும்மா இப்படி சொல்லி என்ன கையாலாகாதவிதமா ஆக்காதீங்க..? எனக்கு நீங்க எப்படியோ அப்படிதான் அவரும்!”

“சீ.. வாயத்திறக்காத.. கீழபோ உன்னலாம் தோள உரிச்சாதான் சரிவரும்..!”

“மாமா.. தயவுசெஞ்சு அவளை ஒன்னும் சொல்லாதீங்க..”

“சிவா.. உங்கிட்ட இனி பேச்சு கிடையாது.. என் மகள நீ பார்க்கவோ பேசவோ கூடாது, மீறினா நான் மனுசனா இருக்க மாட்டேன்!”

“அப்பா.. நான் அவர்கிட்ட பேசுவேன் பழகுவேன். அத யாரும் தடுக்க முடியாது!” தர்ஷினியின் அழுத்தமான அந்த வார்த்தைகள் மாணிக்கத்திற்கு கர்ண கொடூறமான கோபத்தை கொடுத்தது. அவர் தர்ஷினியின் அருகே வந்து அவள் தலைமுடியை பிடித்து இழுத்துபோனார், சிவா ஓடி வந்து அவர் கையிலிருந்து அவளை விலக்கினான் தர்ஷினி அழுதுகொண்டே அவன் கைப்பிடிக்குள் வந்தாள்.

“மாமா, கொஞ்சம் நிதானமா நடந்துக்கோங்க.. ப்ளீஸ்.. எந்த தப்பும் செய்யாத தர்ஷினிய ஏன் காயப்படுத்துறீங்க..?”

மாணிக்கம் சிவாவின் கைகளில் இருந்து தர்ஷினியை பிடுங்காத குறையாக பிடித்திழுத்தார். “உன்ன பத்தி இவளுக்கு என்ன தெரியும், தாயில்லாம வளர்ந்தவடா இவ, ஏதோ உன் பெண் மேல் உள்ள பாசத்தால பைத்தியக்காரத்தனமா இப்படி யோசிச்சிருப்பா..மத்தபடி காதலும் இல்ல உன்மேல ஒரு புண்ணாக்குமில்ல!”

மாணிக்கம் பேசட்டும் என சிவா பல்லைக்கடித்துக்கொண்டு நினறான், செண்பகம் சேலை தலைப்பில் வாயைபொற்றிக்கொண்டாள்.

“அப்பா ஏன்பா இப்படி என்ன கேவலப்படுத்துறீங்க.. நான் கேக்காமலே எல்லாத்தையும் செய்றவங்க நீங்க.. சிவா விசயத்துல  மட்டும் ஏம்பா இப்படி நடந்துக்றீங்க…?” தர்ஷினியின் வார்த்தைகள் அழுகையினூடே விசும்பலாய் வந்தது.

“ஏன்னா இவன் கொலகார பாவீ…!”

“மாமா..!” என சிவா கத்தினான்.

“கத்தாதடா.. சும்மா பணத்தாலும் ஆள் பலத்தாலும் நடந்தத நீ மறைச்சுட்டா, எதுவுமே நடக்கலனு ஆயிடுமா?”

தர்ஷினி அதிர்ச்சியில் உறைந்து சிவாவின் முகத்தைப்பார்த்தாள், அதில் கோபம் சுடர் விட்டு எறிந்தது.

“மாமா உங்க வாய்க்கு வந்த மாதிரிலாம் பேசாதீங்க, என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு..”

“அதுதான் தெரியுமே.. கட்டின பொண்டாட்டிய கொன்னுட்டு அவ சொத்துக்காக பிள்ளைய வளக்கிறவன் தானே நீ.. உனக்கு எப்படி என் பெண்ணோட அருமை தெரியும்!”

“உங்க பொண்ணு உங்களுக்கு எப்படியோ அப்படிதான் என் பெண்ணும் எனக்கு, அவ என் வீட்டு தேவத, அவளுக்கு அப்புறம் தான் எனக்கு மத்தவங்க.. அது யார இருந்தாலும் சரி தர்ஷினியா இருந்தாலும் சரி, என் மனைவி தற்கொலை பன்னிகிட்டானு ஊருக்கே தெரியும் அவளை பத்தியோ அவளோட மரணத்தை பத்தியோ யாருகூடவும் விவாதிக்க நான் விரும்பல!”

“நீ விரும்பமாட்டடா, ஏன்னா நீ பன்னின தப்பு அப்படி நீ உத்தம புத்திரன்னா உன்னோட யோக்கியதையும் உன் மூத்த பொண்டாட்டி யோக்கியதையும் சொல்லி என் பொண்ணு கூட பழகியிருக்கனும்..!”

“என்னோட கடந்த காலத்த பத்தி நான் யார்கிட்டயும் பேச விரும்பல!”

ஓஹோ, அப்ப நீ உண்மை எதுவும் சொல்லாம நடிச்சு என் பொண்ண ஏமாத்திருக்க, நீ அம்பளையா இருந்திருந்தேனா, உன் பொண்டாட்டி ஏன் தப்பு பன்னுறா, நீ ஏன் அவளை கழுத்த நெரிச்சு கொலை பன்னுற, உன்னோட உண்மையான முகம் என்னானு எனக்கு நல்லா தெரியும்!”

“தெரிஞ்சுகிட்டீங்கல்ல, சரி உங்க பொண்ண கூட்டிட்டுபோங்க!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.