Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ங்கு இளம்பிறை தன் தந்தையிடம் "இந்த விக்கிக்கு என்ன ஆச்சுன்னே தெரியலப்பா வர வர அவன் அன்பு தொல்லை தாங்க முடியல, ரொம்ப உரிமை எடுத்துக்கிறான் எனக்கு கோபம் வருது பட் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்” என்று முதல் நாள் அலுவலகத்தில் நடந்த அனைத்து செய்திகளையும் கூற, அவள் தந்தை “ ம்”கொட்டிக்கொண்டு சிற்றுண்டி உண்ண, “ அப்பா இன்னிக்கு இட்லி செம்ம சாப்ட்டா இருக்கு இல்லப்பா” என்றவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்

“கதிர் கூட எப்படிமா போச்சு உன் நாள்?” என்று கேட்டார் தந்தை.

ஒரு நொடி உண்பதை நிறுத்தியவள் “ம் போச்சு பா ரொம்ப மாறியிருக்க மாதிரி தெரியுது பா, குத்தலா பேசுற மாதிரி காட்டிக்கிறார் பட் அது வேணும்னே பேசற மாதிரி இருக்கு. திடீர்ன்னு என்னன்னவோ”என்றவள் மனதில் நேற்று இரவு அவளிடம் அவன் கிசுகிசுத்த வாக்கியங்கள் நினைவில் வர, முகம் தன்னையும் அறியாமல் புன்னகை கொள்ள, தந்தை நினைவு வந்தவுடன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு “பா இப்போ எதுக்கு அவரை பத்தி பேச்சு நீங்க சாப்பிட்டுட்டு இருங்க நான் அதுக்குள்ளே அசோக் சாருக்கு கால் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றவள் போனை தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட்டாள்.

அசோக்கின் மனைவி துளசி மூன்று முறை கருவிலேயே கலைந்த தன் பிள்ளைகளை எண்ணி வருந்தி இருந்தவள், நான்காம் முறை கருத்தரித்த போது மகிழாமல் அழுதாள்.

இம்முறையும் பிள்ளை கருவியிலேயே கலைந்து விடுமோ என்று அதீத பயத்துடனே இருக்க அவளுக்கு மருத்துவர், இளா, அசோக் மாறி மாறி தைரியம் ஊட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆனது. எனவே சிறு வலிக்கும் அவள் மிகவும் அஞ்ச அப்படி இப்படி என்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் அவளுக்கு அன்று மாலை வயிற்று வலி எடுக்க அனைவரையும் ஒரு வாறு படுத்தி எடுத்து விட அசோக் உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட இளா அசோக்கை தொந்தரவு செய்ய மனம் இன்றி மறுநாள் அதாவது இன்று அழைத்தாள்.

அவளின் அழைப்பை ஏற்ற எதிர் முனையோ “என்னடா இன்னும் கால் வரலைன்னு நினச்சேன் செஞ்சுட்ட” என்றான் அசோக்

நினைப்பீங்க நினைப்பீங்க, துளசி எப்படி இருக்காங்க ஏதும் பிரச்சனை இல்லையே நேத்து நான் வந்ததே ரொம்ப லேட் அதுக்கு அப்பறம் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன் டாக்டர் என்ன சொன்னாங்க?

ஒன்னும் பிரச்சனை இல்லமா. இவ தேவை இல்லாம பயப்படுறா இளா, நேத்து முழுக்க எவ்ளோ டென்சன் தெரியுமா?

என்ன சார் நீங்களே அவங்களை புரிஞ்சிக்கலைனா எப்படி? அவங்க என்ன பண்ணாலும் நீங்க டென்சன் ஆக கூடாது ஓகே! என்று அவள் கட்டளை இட

“சரிங்க மேடம் இல்லாட்டி நீயும் அவளும் கூட்டணி சேர்ந்து என்னை படுத்துவீங்களே” என்று சிரித்தவனிடம்

அசோக் சார் என்று மெலிதாய் குரல் எழுப்ப

என்ன இளா என்றது எதிர் முனை.

ம் கும் என்று தொண்டையை செறுமியவள் கதிர்க்கு நம்ம ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் எல்லாம் என்று இழுத்தவளிடம் கடந்த எட்டு மாத காலமாகவே நிறுவனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான் என்ற செய்தியும், தன் நிறுவனம் மற்றும் அதன் தொடர்பான அனைத்தையும் அவன் சில மாதங்களாகவே கண்காணித்து கொண்டிருக்கிறான் .அவன் விருப்பப்பட்டதால் மட்டுமே, தான் இவளிடம் பேசி அவன் தந்தையிடம் பேச சொல்லியதாகவும் அசோக் தெரிவிக்க அவள் இதழ்கள் புன்னகை போர்வை போர்த்தின.

ம் குட் சேஞ்சஸ் என்று மனதுள் எண்ணியவள் தன் தந்தையிடம் விடை பெற்று விட்டு அலுவலகம் கிளம்ப அவளை எதிர்பார்த்து கொண்டிருந்தன நான்கு கண்கள்.

அவளை கண்டவுடன் விக்கிக்கு கண்கள் விரிய, கதிருக்கோ உள்ளம் விரிந்தது.

எப்போதும் போல் விக்கிக்கு ஒரு ஹை சொன்னவள் தன் வேலையை கவனிக்க செல்ல அவனோ ம் எத்தனை நாளுக்கு தான் இளா இப்படி கண்ணாமூச்சு ஆடுறது ஆனாலும் இது எனக்கு பிடிச்சிருக்கு நீயா சொல்றவரைக்கும் நானும் சொல்ல மாட்டேன், ஆனாலும் உன்னை சீக்கிரம் ஐ லவ் யு விக்கின்னு சொல்ல வெக்கிறேன் பாரு என்று மனதுள் நினைக்க

அவனை கண்டுகொண்டிருந்த கதிருக்கோ, “இவன் ஏன் இப்படி ஒரு லுக் விடுறான்?” என்ற எண்ணம் தோன்றியது. அசோக் சொன்னவரை இவன் அவளுடைய கல்லூரி சீனியர், ஆனால் இவன் அவளை பார்க்கும் பார்வை ஏதோ ஒரு நெருடலை உருவாக்கியது கதிருக்கு.

அவள் வருகைக்காக காத்திருந்தவன் அவள் வந்தவுடன் அசோக்கிற்கு கால் செய்து "டேய் அவ வந்துட்டா, வாங்க மீட்டிங் ஸ்டார்ட் செய்யலாம்" என்று சொல்ல அவளை அழைத்து கொண்டு கதிரின் அறைக்கு வந்தான் அசோக்.

குட் மோர்னிங் இளா என்று சொன்னவனுக்கு முக மலர்ச்சியோடு குட் மார்னிங் கதிர் என்று பதிலளிக்க அவன் உள்ளம் புத்துணர்ச்சி பெற்றது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையாDevi 2017-12-16 20:29
oh.. chandra than baby moon.. ah ? Guna vin mudhalili thaan Kadhir appava :Q:
very interesting going.. (y) waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையாTamilthendral 2017-11-23 16:31
Fantastic update Parama (y)
Vicky enna seyya pora :Q:
Guna kathai-kum ippa nadakkara kathai-kum irukkara connection-I kandupidichutten :)
Ila appatha Guna... Kathir appatha chinnaiya :)
Eppadi ennoda guess ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையாAdharvJo 2017-11-23 15:21
Indha akkalanga tholai oru vazhi onjadhu paa :dance: Madras pattinathil ena agum :Q: Sundari sober-n ninaichitten :no: ??? Gunna ippovadhu nimadhiya irupara?? Unga series la vara grannies oda audacity thangala facepalm sema joru thaa ma'am Vicky ena panuvaru Ila-k vicky oda interest eppo theriyum :Q: 1C a/c la vizhuma illa Kadhir oda thalai thoondu vizhuma parkalam waiting for next update ma'am :thnkx: for this cute and cool update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையாmahinagaraj 2017-11-22 13:01
nice.... (y)
epotan kadhai y start agudhu....
waiting for next update mam.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையாThenmozhi 2017-11-22 08:33
interesting update Prama (y)

Kathir and Vikky irandu peril yaraiyavathu antha alavil Ilam pirai parpangala?

Guna - Sunthari vazhkai Chennai-la poi eppadi irunthathu?
Ivanga kathaila vara ilaiya thalaimuraiyin parents or grand parents-a?

Waiting to know ji :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையாmadhumathi9 2017-11-22 07:52
Super epi. Giraamathu kathai, city kathai rendume romba interesting ah nalla irukku. Waiting to read more. :clap: (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top