(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 17 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

ன்புள்ள ரவிக்கு, இந்த வார்த்தைகளுக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா என்று தெரியவில்லை ரவி, அன்பு என்ற அம்பை எய்து என்னை கொல்லாமல் கொன்ற புண்ணியம் உனக்கும் உன் மனைவிக்கும் சேரும். வெறும் உடல் பசிக்காக என்னைத் தேடி வந்தவர்களைக் காட்டிலும் நீ மோசமானவன் ரவி, அவர்கள் என் உடலைதான் கவர்ந்தார்கள் உயிரை இல்லை, முட்டாள் தனமாய் உன் போலி அன்பை உண்மை என்று நம்பி நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை ரவி நீ என்னை உயிரை உறிஞ்சிவிட்டாய் ரவி, நான் கடவுளின் என் வேண்டுதலை எப்போதோ நிறுத்தியிருந்தேன். செய்யாத தவறுக்கு குற்றவாளியாய் என் தன்தையின் முன் நின்றேனே தாயில்லாத பெண்ணை இப்படி தொல்லை செய்கிறேனே என்று என் தமக்கை வருந்தினாளே அப்போது கடவுளை நினைத்தேன் கடவுளே புது இடத்திலாவதுஎன்னை நல்லபடியாக வைத்துக்கொள் பத்துபாத்திரம் தேய்த்தாவது பிழைத்துக்கொள்ளவேண்டும் என்று வண்டியேறியவளை நான்கு பேர் சேர்ந்து அப்பப்பா என்ன வலி அன்று வேண்டினேன் என்னை எடுத்துக்கொள் கடவுளே நான் இறந்துவிடவேண்டும் என்று ! எந்தக்காலத்திலும் கடவுள் என் வேண்டுதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை

ஆனால் உன்னைப் பார்த்ததும் என் வாழ்விற்கு ஒரு புது அர்த்தம் ஏற்படுத்தித் தந்து இருக்கிறாய் என்று சந்தோஷத்துடன் இருந்தேன். இந்த பத்து முழுமையான மாதங்களுக்காக நான் உன்னை மன்னிக்கலாம் ஆனால் என் மூலம் உனக்கு தேவை ஒரு குழந்தை அதை பெற்றுக் கொடுத்து விட்டு போய்விடு என்று நீ நேர்மையாய் என்னை கேட்டு இருக்கலாம், ஆனால், என் மனதில் அன்பையும்,தாய்மையையும் விதைத்து நம்பிக்கை ஊட்டி, உன் சுயநலத்திற்காக என்னோடு விளையாடிவிட்டாயே ?! நான் என்ன கேட்டேன்,உறவினர்களைக் காரணம் காட்டி என்னை வெளியே அனுப்பிவிட்டாய் சூழ்நிலைக் கைதியாய் நீ நிற்கிறாய் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் நேற்று உன்னையும், கல்பனா​வையும் ஆஸ்பத்திரியில் கண்டதும் என் குழந்தையைப் பார்க்க ஆவலாய் வந்தபோதுதான் உங்கள் இருவரின் உரையாடலையும் கேட்க நேர்ந்தது. கேட்க யாரும் இல்லையென்றுதானே என்னை இப்படி செய்து விட்டீர்கள் ரவி என் மார்ப்பு வலிக்கிறது அந்த பிஞ்சின் இதழ் சுவைக்கு ஏங்குகிறது

இனி நீ நிம்மதியாக இருக்கலாம் நான் உன்னுடன் பங்கு கேட்கவில்லை எப்போதாவது ஒரு நாள் அந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இனி எத்தனை நாள் நான் உயிருடன் இருக்கப்போகிறேன் என்று தெரியவில்லை, என் உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது ரவி, இரண்டு முழு மாதங்கள் கடந்த பிறகும் பிரவசத்தின் வலியும் ரத்தப்போக்கும் நிக்கவே இல்லை, இதே நிலை நீடித்தால் நான் இன்னும் பத்து நாட்கள் தான் உயிரோடு இருப்பேன் என்று நினைக்கிறேன் அப்படி இறக்கும் ஒரு தருவாயிலும் என் பிள்ளையைப் பார்க்க முடியாது. ஆனால் இறந்தாலும் அவளைச் சுற்றித்தான் என் மனம் அலைந்து கொண்டு இருக்கும். நான் நிறைய துரோகங்களை சந்தித்து விட்டேன் ரவி ஆனால் உன்னுடையது என்னால் ஜீரணிக்க முடியவில்லை, நான் கடிதத்ததை முடிக்கிறேன். ஒரு சிதைந்த ஓவியம் தன் வண்ணங்களை நிறமிழக்க வைத்துவிட்டது

டிதம் அத்துடன் முற்றுப்பெற்று இருந்தது. அந்த டைரியின் கடைசி பக்கங்களைப்  படித்தாள் லட்சணா.

சுப்ரியா கதவு இப்படி படபடவென்று ஏன் தட்டப்படுகிறது அதுவும் கடிகாரம் மணி இரவு பணிரெண்டைக் காட்டியிருந்தது. தட்டுத்தடுமாறி கதவைத் திறந்தாள். நீயா ? இங்கே எங்கே ?

உன் வீட்டுக்கு வர நேரம் காலம் இருக்கா என்ன ? அதான் ரவி கழட்டி விட்டுடானாமே ? இருக்கிறதை நம்பி பறக்கிறதுக்கு ஆசைபட்டு ஆசைப்பட்டா அப்படித்தான் சுப்ரியா, அந்த ரவியை நம்பிப்போனே ஆனா என்னாச்சு ?! இப்படி நடுக்காட்டுலே விட்டுட்டு போயிட்டான்லே, நான் நேத்து அவனை ஷாப்பிங் சென்டர்லே பார்த்தேன் அப்பத்தான் சொன்னான் நீ அவனை விட்டு விலகிட்டேன்னு நானும் எத்தனையோ பொண்ணைப் பார்த்தேன் உன்னை மாதிரி திருப்தி யார்கிட்டேயும் கிடைச்சது இல்லை டியர் நீதான் எனக்கு.... வா டியர் டைமை வேஸ்ட் பண்ணாதே

ப்ளீஸ் என்னை விட்டுடு நான் இப்போ அதெல்லாம் விட்டுட்டேன் பேசும் போதே மூச்சிரைத்தது ஆனால்  மிருகத்திற்கு வெறிஅடங்கும் வரை வேறு எந்த நினைவும்இருக்காதே அப்படித்தான் அவனுக்கும், என் உடல் நிலையோ மன நிலையோ புரியவில்லை, அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளவும் என் வேதனையை வெகு ஆர்வமாய் பயன்படுத்திக்கொண்டான். நான் மிருகவதைக்கு ஆளானேன். அந்த மிருகம் முழுமையாய் என்னை விட்டு நீங்கிய பொழுது ரத்தத்துளிகளில் முளைத்த நைந்து போன புஷ்பத்தைப் போல இருந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.