Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)

தேங்க்ஸ் டியர்,,,, ரவிக்குத்தான் நான் நன்றி சொல்லணும், அவன் சொல்லலைன்னா நீ இங்கே இருப்பதே எனக்குத் தெரியாது பாரு, அந்தவார்த்​தைகள் என்​னை அக்கினிக்குழிக்குள் தள்ளிவிட்டன இந்தது​ரோகம் ஏன்​செய்தாய் ரவி மீண்டும் நான்தான் உன்வழிக்கு வரவில்​லை​யே ஒருபிச்​சைக்காரி​யைப்​போல நீங்கள்​ போகும் இடத்தில் வந்துநீ​யே அறியாமல்தா​னே என் பிள்​ளை​யை பார்த்​தேன் இப்​போது  அன்னைக்கு அவ என்னுடையவள்ன்னு நீ மார்தட்டி கிட்டேயே ரவி இப்போ நான் உன்னுடையவள் இல்லையா ? இரக்கம் தொலைத்த உன்னிடம் நான் செலவழிக்கும் வார்த்தைகள் கூட வீண்தான். அந்த மிருகத்தை நான் தடுக்க முடியவில்லை அன்று அன்பைக் காட்டி நீ எடுத்துக்கொண்டதை இன்று அரக்கத்தனத்தினால் அவன் எடுத்தக்கொண்டான். உடைந்துவிட்டேன் ரவி, சுக்கல் சுக்கலாய் என் உயிர் மூச்சு இன்னும் எத்தனை நாட்களோ அதை...சில கிறுக்கல்களுடன் அந்த கடிதம் ரத்த்த்துளியோடு கிறுக்கலாய் முடிக்கப்பட்டு இருந்தது

பெண்ணாய் பிறந்ததற்கு எத்த​னை துன்பங்க​ளை அனுபவித்துவிட்டு இருக்கிறாள் பாவம் என்று​ யோச​னையில் இருக்கும்​போ​தே அவளிடம் இ​லேசான அ​சைவு​ தெரிந்தது உதடுகள்​மெல்ல திறக்க கண்களில் கருவிழிகள்திறந்தன கமல் அப்​போ​துதான் குளித்துவிட்டு​ வெளி​யேவந்தான் லட்சணாவின் முகத்தின் மாறுதல்க​ளை கண்டதும் அவனின் பார்​வை​யும் அந்த மயங்கிய கிடந்த​ பெண்ணின் ​மேல்படிந்தது ​மெல்ல கண்க​ளைத் திறந்தவள் லட்சணாவின் சுப்ரியா என்ற வார்த்​தை​யை அலட்சியம்​ செய்து கமல் என்று அ​ழைத்தாள் அடுத்த ​நொடி​யே மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்

ரண்டு மூன்று மு​றை பயமுறுத்தியதற்​கே மருத்துவம​னையில்​சேர்க்கும் அளவிற்கு பர்வதம்மாள் படுத்துவிடுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்​லை எனக்​கென்ன​வோ பர்வதம்மாளுக்கு ஏதும்​தெரியாது என்றுதான்​தோன்றுகிறது காரில் பக்கத்து இருக்​கையில் அமர்ந்திருந்த வினிதாவிடம்​கேட்டான்​ கெளதம்.

ம்....எனக்கும் அ​தேநி​னைப்புதான் சந்துருவின் நடவடிக்​கைகள் குழப்பமாய் இருக்கு மாயா​வை ஏமாற்றி சில கம்​பெனிகளில் பங்குகள் வாங்கியிருக்கிறான் அ​தை​யெல்லாம் விற்க ஏற்பாடு​ செய்திருக்கான் மாயாவின் ந​கைகளும் அவனிடம்தான் இப்​போது இருக்கிறது எனக்​​கென்ன​வோ அவன் ​எங்​கே​யோ தப்பி​யோடப் ​​போகிறான் என்றுதான்​ தோன்றுகிறது

அதற்குள்அவ​னைப்பிடிக்க ​வேண்டு​மே ? வினிதா டி​ரைவரின் விஷயம் என்னாச்சு ?

அவன்வீடு எனக்குத் ​தெரியும் பர்வத்தம்மா​ளை பார்த்துவிட்டு அங்​கே ​போய் பார்க்கலாமா. கார்​ அந்த மருத்துவம​னையின் வாசலில் அடையும் ​போது சந்துருவும் ஒரு​ பெண்ணும் ​வெளி​யே வந்து காரில் சமீபித்தார்கள்

இதாரு புதுப்​பொண்ணு இவனுக்கு மட்டும் எங்​கேயிருந்துதான் கி​டைக்கு​தோ ​கெளதம் கிண்டலடிக்க வினிதாவின் பார்​வை சந்துருவின்​ மேலும் அந்தப்​பெண்ணின் ​மேலும் கூர்​மையாய் படிந்தது இவ​ளை எங்​கே​யோ பார்த்திருக்கி​றோ​மோ என்று!  

மாயா வருவாள்

Epsiode # 16

Episode # 18

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Latha Saravanan

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 17 - லதா சரவணன்Saaru 2017-12-01 18:06
மாயா va idu aapa supriya ku Ena achi
Randu Perum epdi sandhichanga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 17 - லதா சரவணன்Thenmozhi 2017-11-24 23:10
Pavam Supriya.

Inge irupathu Maya endru terigirathu.

Apo Supriyavirku enna anathu?

2 perum epadi idam marinargal?

Waiting to read about it ma'am :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 17 - லதா சரவணன்mahinagaraj 2017-11-24 15:59
nice.... :clap:
good going.....
only 2 page tana... :-|
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 17 - லதா சரவணன்madhumathi9 2017-11-24 14:15
:sad: supriyaavirkkuthaan ethanai innalgal. Pennaaga piranthaale kashtam thaanaa? Super epi. Waiting to read more. :clap: :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 22 Apr 2018 18:46
உலகமே ஸ்தம்பித்து போனாற்போல இருந்தான் கமல், பாவம் கமல் இந்த வினிதா ரொம்பவும் கனவுகளோடு இருக்கா, சந்துருவின் வலையில் விழுந்திடுவாளோன்னு ரொம்பவும் பயமா இருக்கு ?! அவளுக்கு ஒரு பாதுகாப்பை நாமதான் ஏற்பாடு பண்ணித் தரணும். நம்ம கல்யாணத்திற்கு பிறகு நான் நடனமாடப் போவதில்லை, உங்க ஆபீஸில் அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யணும் கமல் இன்று கைதியாய் வினிதாவின் கரங்களுக்குள் கிடக்கும் மாயா அதே வினிதாவின் எதிர்காலத்தைப் பற்றித்தான் எத்தனை அக்கறையாய்ப் பேசினாள். அவள் ஒரு பச்சோந்தி பசுத்தோல் போத்திய ஓநாய் என்று அறியாமல் அவளுக்கு பரிந்து பேசிய மாயாவை எண்ணி மனம் கனத்தது கமலுக்கு !

அவளுக்கு வந்த இடைஞ்சலில் இருந்த இரண்டாம் முறையும் தன் அருமைக் காதலியைக் காக்கத் தவறியிருக்கிறான் எனில் இனிமேல் அவன் இருந்துதான் என்ன பயன் ? தான் தொலைத்த பொக்கிஷத்தை இரண்டாம் முறையும் இறைவன் அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பான் என்று என்ன நிச்சயம் இருக்கமுடியும். கமல் பெருங்குரலெடுத்து உடைந்து அழுதான். லட்சணா கண்விழித்தாள் தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று அவளால் உணர முடியவில்லை, உடலைச் சுற்றி இறுக்கியிருந்த கயிறு வலித்ததை அவளின் முகம் மாறுதல்கள் உணர்த்தியது.

*********************************************************

இன்றைய இறுதி அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-latha-saravanan-23
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 08 Apr 2018 17:22
எத்தனை அழகாக திட்டம் போட்டேன் கமல் எல்லாத்தையும் விதி கெடுத்துடுச்சு வேறு என்ன சொல்ல முடியும் அன்னைக்கு மட்டும் நான் நினைச்சது நடந்திருந்தா இந்நேரம் மாயாவின் சொத்து எல்லாம் என் காலடியில் சொத்து மட்டும் இல்லை நீயும்தான். இதைப் பார்த்தியா மாயாவோட உயில்.....வீட்டை என்பேருக்கு மாயா மாத்தித்தந்தாற்போல ஒரு டாக்மெண்ட் ரெடி பண்ணி, மயங்கி இருந்த மாயா கையெழுத்தை வாங்கிட்டேன் எப்படின்னு தெரியுமா ? அன்னைக்கு நிகழ்ச்சி முடிந்து ஹோட்டல் ரூமிலே உங்கிட்ட மாயா ஸ்கைப்பிலே பேசிகிட்டு இருந்தப்போ நான் வந்தேன் இரவு கொடுக்கிற பால்ல மயக்கமருந்தைக் கலந்து கொடுத்து மாயாவைத் தூங்கவைச்சிட்டேன், மாயாபோலவே உருவம் இருந்ததே அந்தப் பொண்ணு அவளை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஸார்ஜ் செய்து நான்தான் கூட்டி வந்தேன்.

நாப்தலின் வாசனை வீசியது அறை முழுவதும் மெல்ல கண்களைத் திறந்து பார்த்த சுப்ரியா எதிரே முன்பின் அறியாத பெண்ணைக் கண்டு திகைத்தாள்.

பயப்படாதே சுப்ரியா என்பேரு வினிதா நான்தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். நீங்க யாரு என்னன்னு விவரம் சேகரிக்க உங்க டைரியைப் பார்க்க வேண்டியதா போச்சு கவலைப் படாதே கடவுள் அத்தனை சீக்கிரம் உன்னைக் கைவிடமாட்டார்.

*******************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-latha-saravanan-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 29 Mar 2018 19:07
மாயாவா ... கமல் இது...சுப்ரியா

அப்படித்தான் எல்லாரும் நினைத்திருந்தீர்கள் இது என் மாயா

ம்...பரவாயில்லை, கமல் உங்களுக்கு நினைவிருக்கா என்னன்னு எனக்குத் தெரியலை, ஆனா பாட்டிகாலத்து கதைகளில் எங்கேயோ நாலுகடல் ஏழுமலைகளுக்கு அப்பால் காதலியை ஒளித்து வைத்திருந்தாலும் ஹீரோ கண்டுபிடித்துவிடுவார் அதுமாதிரி எத்தனை தூரம் கொண்டு போன பிறகும் நீங்க மாயாவைக் கண்டுபிடிச்சிட்டிங்க ஆனா பாவம் பாருங்க அவ இன்னைக்கு கண்ணைத் தொறக்காமேயே இருந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும் இப்போ அநாவசியா கண்ணைத்தொறந்து உங்களையும் சிக்கல்லே மாட்டிவிட்டுட்டா ?!

நீ சொல்றது எனக்கு புரியலை வினிதா என்னே ஏதோ மாதிரி பேசுறே ?

நிஜம் பேசறேன் புரியலை இல்லை? வினிதாவின் பின்னே கதவைச் சாத்தியபடி இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள் அவர்கள் கைகளில் லட்சணா மயங்கிய நிலையில் ?!

**************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-latha-saravanan-21
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Mar 2018 05:57
மாயாவின் கடிதம் வீராவின் சட்டைப் பையில் இருந்தது. அதை எடுத்து படித்தார்.

அன்புள்ள கமலுக்கு

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும் போது நான் உங்களுடன் இருக்கப்போவது இல்லை சில காரணங்களுக்காக நான் என் முடிவைத் தேடிப் போகிறேன். பணம் பதவி உடல் என்று ஏதாவது ஒரு துரோகத்தில் நான் துவண்டு இருக்கும் போது எனக்குள் வந்த ஒளிக்கீற்று நீங்கள் நாமிருவரும் சேர்ந்து வாழப்போகும் வாழ்விற்கு எந்த வித உறுத்தலோ தடையோ இருக்கக்கூடாது என்பதால் தான் என் சொத்துக்களை எல்லாம் அத்தை பேருக்கும், சந்துரு பேருக்கும் எழுதிவைத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். நான் வாழும் இந்த வீட்டில் என் அழுகையும் சோகத்தையும் பார்த்த இந்த வீடு நாம் இருவரின் சந்தோஷ தாம்பத்தியத்தில் இணைய வேண்டும் என்று உங்கள் பெயரிற்கு அதை மாற்றியிருக்கிறேன்.

எனக்கென நான் ஏற்படுத்திக் கொண்ட வட்டம் தான் என் குணம் சிலர் திமிர், கர்வம் என்றெல்லாம் நினைக்கலாம், என் வேலியைத் தளர்த்திட முயன்றவர்களிடம் நான் என்னைப் பாதுகாக்கப் போட்டுக் கொண்ட முகமூடி நான் அறிந்தோ அறியாமலோ என்னால் ஒருவனின் வாழ்வு சிதைக்கப்பட்ட அவலத்திற்க காரணமாகிப்போனேன்.

**************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-latha-saravanan-20
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 15 Dec 2017 18:15
பாண்டி... என்று வீரா மெல்ல அவன் தோளில் கைவைத்தார். அதை மனதில் வைத்துதான் இப்போ மாயா​வை கொன்னுடீங்க இல்லையா ?
அய்யோ சத்தியமா இல்லை ஸார். மாயா மேடமை கொல்லணுமிங்கிறது என் நினைப்பு இல்லை, ஆனா அவங்களால என் தம்பியோட வாழ்க்கையே குலைஞ்சி போச்சு அவங்க மட்டும் எப்படி கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழலாம் அதனால தான் இங்கே பொய்யா நடிச்சு வேலைக்கு சேர்ந்தேன், மாயாம்மா இறக்கிறதுக்கு முன்னாடி இங்கே பெரிய சண்டையே நடந்தது. அப்போ தோட்டத்துப் பக்கம் ரொம்பவும் யோசனையோட இருந்தவங்களை நான்தான் அரைமணி நேரம் ஏதும் தெரியாதபடி இருக்க ஒரு இன்ஷக்ஷன் போட்டேன், ஒரு​கோவத்தி​லே ஊசி​போட்​டே​னே தவிர தப்பு என் தம்பி​மேலயும் தா​னே அவங்க மட்டும் என்ன​செய்வாங்க யாருக்கும் தண்ட​னை தர்ற​அதிகாரத்​தைfகடவுள்நமக்குத் தரவில்​லை அதற்குபிறகு என்ன​ செய்றதுன்னு ​தெரிய​லை அங்​கேயிருந்து உட​னே கிளம்பி ​போயிட்​டேன் அதற்கு மறுநாள் தான் அவங்க தற்கொலை பண்ணிட்டாங்க.

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...a-latha-saravanan-19

🆕 Latest Updates 🆕

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

NPMURN

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

VeCe

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.