(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 16 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

வி கல்பனா....என் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை, ரவி என்னருகில் அமர்ந்தான் என் கைகளைப் பற்றிக்கொண்டான், ரியா நான் உன்னை என்னைக்குமே கஷ்டப்படுத்த மாட்டேன். இப்போதும் உன் மேல் உள்ள அன்பு உயிர்ப்பாத்தான் இருக்கு, கல்பனாவோட மனசு இப்போ கொஞ்சம் பயந்து இருக்கு, நான் முதலில் சொன்னதுபோல உன்னாலதான் இந்தக் குழந்தை பிறக்கணுமின்னு அவதான் விரும்பினா ஆனா நாளாக நாளாக நான் உன் கூட இருந்த நெருக்கம் பார்த்து அவளுக்கு கொஞ்சம் பயம் வர ஆரம்பிச்சிட்டது, தனக்கு பெரிய குறையா இருந்ததை நீ சாதிச்சிட்டதான அவ நினைச்சா. அதனால குழந்தையைக் காரணமா வைச்சு நீ என்னை வளைச்சிப்போட்டுவிடுயோன்னு என்கிட்டே சண்டை போட ஆரம்பிச்சா

ரவி நீ சொல்றது ?

நிஜம்....! நீ அப்படியில்லைன்னா சொன்னாலும் புரிந்துகொள்ளும் மனநிலையில் அவ இல்லை ரியா, மீறி நீ கூட இருந்தா அவ செத்துப்போயிடுவேன்னு மிரட்டுறா ?

ரவியின் அழுகை கலந்த பேச்சு என்னை அசைக்கத்தான் செய்தது ரவி கல்பனாவா இப்படியெல்லாம் பேசியது ஏன் ரவி அவங்க மனசிலே இப்படி ஒரு தப்பான அபிப்ராயம் வந்தது. நீ அவங்க சொத்து அவங்ககிட்டே இருந்து உன்னை அபகரிக்கணுமின்னு நான் என்னைக்குமே நினைச்சது இல்லை ரவி, தாய்மை நான் அறியாத அனுபவம் எனக்கு அதெல்லாம் கிடைக்காதுன்னு நினைச்சப்போ நீ அதை தந்தே. எத்தனை நாள் அதற்கு மனதார நன்றி சொல்லியிருக்கிறேன் தெரியா, எனக்கும் மனுஷப்பிறப்பிற்கு அர்த்தம் தோணியதே உன்னால் தானே, குழந்தைப் பற்றிய பயம், இனம்புரியாத சந்தோஷம், நல்லபடியா இந்தக் குழந்தை பிறக்கணுமேன்னு அக்கறை இதெல்லாம் சேர்ந்து ஒரு வெறுமையைப் போக்கத்தான் நான் உன்கிட்டே கொஞ்சம் ஈடுபாடு காட்டி பேசியது. இதையெல்லாம் கல்பனா புரிஞ்சிப்பான்னு நினைச்சது எத்தனை தவறா போச்சு மன்னிசிடு ரவி என்னாலே மறுபடியும் உனக்கு சிக்கல்தான், ஆனா எனக்கு வேற யாரும் இல்லை நீ கல்பனாகிட்டே பேசி தயவு செய்து என் நிலைமையைப் புரிய வை, பாப்பாவை நான் சொந்தம் கொண்டாட மாட்டேன் ஆனா அவளை விட்டு என்னைப் பிரிச்சிடாதே,

நான் இறுதலைக் கொள்ளி எறும்பு போல தவிக்கிறேன் சுப்ரியா, தாலிகட்டிய மனைவியின் பேச்சைக் கேட்கறதா இல்லை ? கல்பனா சொன்னதுபோல உன்னை என் கூட வைத்துக்கொள்ள முடியாது, நானும் என் குடும்பத்திற்கு பதில் சொல்லணும் என்னதான் அரையிருட்டில் உன்னைப் பார்த்திருந்தாலும் எந்த ஆம்பிளைக்கும் அடையாளம் தெரியுமே ? அப்படியியே குழந்தைக்காக உன்னை வீட்டில் வைத்திருந்தாலும், வீடு கோவில் மாதிரி இது குடும்பம் ரியா உன்னைக் கொண்டுபோய் அங்கே நான் எப்படி சேர்க்க, நான் கல்பனாகிட்டே பேசறேன் உனக்கு தனியா வீடு எடுத்து தர்றேன் ஏதாவது வெளியூர் போயிடு இப்போ டெக்னாஜி எவ்வளோ வளர்ந்திடுச்சி நான் பாப்பா பற்றி தகவல்களை உனக்கு எப்பவும் அனுப்பறேன் இதுதான் என்னால முடியும். ஏதோ விரக்கதியில் வாழ்ந்த எனக்கும் மனைவி குழந்தைன்னு வாழ ஆசையா இருக்கு. என்னோட விதை நீ கொஞ்சநாள் தாங்கியிருந்த அதுக்கு நான் பணம் தர்றேன். இது உனக்கு பழக்கம் தானே ரவியின் கைகளில் இருந்து நான் என் விரல்களை விலக்கிக்கொண்டேன். சுயநலத்தின் மொத்த உருவங்கள். அவனைப் பார்க்கவே அறுவெறுப்பாக இருந்தது. இத்தனை நாள் உன் விதையை சுமந்தபோது நான் இந்த உடம்பு அறுவெறுப்பா இல்லையா ?! என்று கேட்டு அவளை அறையவேண்டும் போல இருந்தது? !

நீண்ட பெருமூச்சுகளை எடுத்துக்கொண்டு சரி ரவி நீங்க எப்படி என்னை நினைத்தாலும் சரி, நன்றி உணர்ச்சிகாரணமா உங்களை என்னால் மறக்கமுடியாது, நான் இந்த ஒருநாள் மட்டுமாவது நான் குழந்தையை வைத்துக்கொள்ளாலாமா ? அதற்கு மட்டும் உன் மனைவியிடம் அனுமதி வாங்கித்தருவாயா ? ரவி அமைதியாய் வெளியே போனவன் வரும்போது அவன் கைகளில் குழந்தை யிருந்தது? நான் குழந்தையை உச்சி முகர்ந்தேன். இந்த ஜென்மத்திலே நான் உன்கூட வாழுற கடைசி நாள் பாப்பா இது, குழ்நதையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். ரவி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டுவெளியேறினான். வெளியே கல்பனாவின் கோபமும் கொண்ட குரலும், ரவியின் சமாதானப்படுத்தும் குரலும் கேட்டது. எனக்கும் அவன்மேல் பரிதாபம் வந்தது? என்னசொல்லி ஏற்றுக்கொள்வான் என்னை, கட்டிய மனைவியின் உடலும் மனமும் ஒருசேர பாதிப்பதை அவனால் தாங்க முடியாது. முழுமையாய் அவனை இழந்தபோது இல்லாத வேதனை ஒரு நாள் நீ என் கைகளில் தவழ்ந்ததும் வருகிறது கண்ணே, குழந்தையின் கன்னத்தில் என் கண்ணீர்த்துளிகள் பட்டு உடல் சிலிர்த்தது.

அன்றிரவே குழந்தை தன்னிடம் வேண்டும் என்று கல்பனா கேட்டிருப்பாள் போலும் நான் விடியற்காலை 6மணி வரை நேரம் கேட்டு இருந்தேன். ஏற்கனவே வீக்காக இருந்த எனக்கு வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தான் ரவி வேண்டாம் ரவி சிகிச்சை செய்து நான் யாருக்காக வாழப்போகிறேன் என் வாழ்நாளில் இந்த சில மாதங்களையும், இந்த நாளையும் என்னால் மறக்கவே முடியாது. நான் இறக்கும் தருவாய் வரையில் இது தொடரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.