(Reading time: 11 - 22 minutes)

அப்படி என்றாவது நான் இறக்கப்போகிறேன் என்று தெரிந்தால் ஒரு முறை பாப்பாவை என் கண்முன்னால் காட்டுவாயா ரவி, இதுதான் நான் உன்னிடம் கேட்கும் உதவி, தர்மம் , பிச்சை எல்லாம். என் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. எப்போதோ ஷாப்பிங் போகும் போது நான் வாங்கிய உடையை குழந்தைக்கு அணிவித்து அதை இழக்க காத்திருந்தேன். ஆஷா வரவில்லை ரவி மட்டும்தான் வந்தான். என்னிடம் இருந்து குழந்தையை வாங்க நீண்ட அவன் கைகள் எனக்கு வெறுப்பைத் தந்தன. கடைசியாய் அதை ஆழ முத்தமிட்டேன். அவன் கைகளில் தந்து நான் கேட்டது நினைவிருக்கிறதா நிறைவேற்றுவாயா ? என்றேன்

தலையசைத்தான். நீ எப்படி ?

வண்டியை வரச்சொல்லியிருக்கிறேன் ரவி நான் வீட்டுக்குப் போகப்போகிறேன்

உடம்பைப் பார்த்துக்கோ ஏதாவது என்றால் உடனே என் செல்லுக்குக் கூப்பிடு என்று நா தழுதழுக்க, நான் சரி என்று கண்ணீரோடு தலையசைக்கவும் அவன் குழந்தையை எடுத்துக்கொண்டு பிரிந்தான். என்னால் அந்த வேதனையை தாங்கமுடியவில்லை, பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பியை இதயத்தில் சொருகுவதைப் போல் துடித்தேன். ஆனால் என் கண்ணீரை துடைக்க யாரும் முன்வரவில்லை, மெல்ல நர்ஸ்ஸின் உதவியுடன் நடந்தேன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறப்புறப்பட்டேன். அப்போது ஆஸ்பத்திரி சிப்பந்தி கொட்டும் குப்பையில் நான் சற்று முன்பு பிள்ளைக்கு அணிவித்த ஆடை இருந்தது. அதை எடுத்துப் பத்திரப்படுத்திய என்னை அவன் பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல் பார்த்தான்.

ட்சணாவின் கண்கள் குளமாகியது. சுப்ரியாவின் நி​லைக்காக அ​வள் வருந்தினாள் அந்த​டைரியின் க​டைசிப்பக்கத்தில் ரவி என்ற​பெயரிட்டு ஒருகடிதம் இருந்தது ஏ​னோ அ​தை ​போஸ்ட் ​செய்யவில்​லை​செய்தாலும் பயனிருக்காது என்றுவிட்டு இருப்பாள் என்று எண்ணியபடி​யே படுத்துக்​கொண்டுஇருந்த அந்தப்​ பெண்ணிடம்​ சென்றாள் லட்சணா அவள் அருகி​லே​யே அமர்ந்து​கொண்டு மீண்டும் ரவிக்கு அவள் எழுதியகடிதத்​தை வாசிக்க ஆரம்பித்தாள்

டங்காரன் இந்த சந்துருப்பயல் எங்கேதான் போய்த் தொலைந்தானோ, நானும் எத்தனையோ தடவை போன் அடிச்சுப் பார்த்திட்டேன் வரவே மாட்டேங்கிறான். வீட்டிலேதான் வாய்க்கு ருசியா சாப்பிட முடியலை வெளியிலேயே இருந்தாவது ஏதாவது வாங்கிட்டு வந்து தொலையக் கூடாது, வரட்டும் இன்னைக்கு பேசிக்கிறேன். வயசுக்குத் தகுந்த பொறுப்பு இருந்தா நான் ஏன் இப்படி சீரழியப்போறேன். அப்பனை மாதிரியே வந்து பொறந்திருக்கான். பாவிப்பயல்....!

வீட்டுலே இந்த படுபாவி கமல் வந்த பிறகு நிம்மதியா சாப்பிடக்கூட முடியலை, மாயா இருந்தப்பக் கூட ஏதோ கொஞ்சம் எதிர்த்துதான் பேசுவாளே தவிர்த்து இப்படியெல்லாம் சாப்பாட்டில் கைவைக்க மாட்டாள். இவன் என்னடான்னா எப்பப்பாரு, சப்பாத்தி, இட்லி, காரக்குழம்புன்னு வெறும் சைவ சாப்பாடானா சாப்பிடச்சொல்றான். படுபாவி ....!

நான் வேணா சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா,.... திடுமென கேட்ட அந்தப் புதிய குரலில் திகைத்துப் போய் திரும்பினாள் பர்வதம்மாள் , யார் பேசறது ?

யாருன்னு தெரியலையா ?

நான்தான் .. இன்னுமா தெரியலை.... ?!

யாரு யாராயிருந்தாலும் முன்னாடி வந்து பேசுங்க,

என்னத்தை நீங்கதான் என்னை வளர்த்தேன் வளர்த்தேன்னு சொன்னீங்க இன்னுமா என் குரலை அடையாளம் தெரியவில்லையா, என்னைப் பாருங்க இத்தனை நடந்த பிறகும் உங்களுக்கு ஏதாவது வாய்க்கு ருசியா ஏதாவது தரலான்னுதான் . என்ன வேணும்,சூடா இரண்டு கிளாஸ் மனுஷரத்தம் குடிக்கிறீங்களா ? குரல் சற்று க​ரைந்த அந்தவிநாடி  விளக்குள்  தங்கள் இயக்கத்​தை நிறுத்திக்​கொள்ள இரண்டு கண்கள் வெறிகொண்டாற்போல் இரத்த சிவப்பாய் பளபளத்தன, அது கிட்டத்தட்ட நெருங்கி நெருங்கி வர, பர்வதம்மாள் அதிர்ந்து தன் பருத்த உடலை தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் ஓட முயல, ஏதோவொன்று மேலே மோதியது அவ்வளவுதான் விழுந்துவிட்டாள் பர்வதம்மாள். வினிதாவும், கமலின்​பேரில் வந்திருக்கும் ​கெளதமும்​​ வெற்றி என்று ​கை​யை உயர்த்திக்​ கொண்டார்கள்

பர்வதம்மாள் கண்விழித்துப் பார்த்தபோது சந்துருவோடு  சேர்த்து கூட வீட்டில் அ​னைவரும் நின்று​கொண்டு இருந்தனர்

பாவி எங்கேடா போனே என்னைத் தனியா விட்டுட்டு ... நான் தனியா இருந்ததாலேதான் அவ வந்தா....

யாரும்மா...

மாயா... மாயாதான் வந்தா ஏதோ கொடுத்து சாப்பிடச்சொல்லி என்னன்னவோ பேசினா ? பயமா இருக்கு....?!

என்னம்மா என்னவெல்லாமோ உளறுறே ? செத்துப்போனவ எப்படிம்மா வரமுடியும்.

வந்தாடா,,,என்னை மிரட்டினா, டேய் எனக்குத் தெரியாமல் நீ ஏதாவது தப்பு செய்திருந்தா  கூட  ஒத்துக்கோடா  என்னை  என்னை   விட்டுடாதே டா....​​மேற்​கொண்டு அம்மா ஏதும்​ பேசிடாமல் இருக்க அரட்டினான். சும்மா படுங்கம்மா lடாக்டர் நல்லா​ ரெஸ்ட் எடுக்கணுமின்னு​ சொல்லியிருக்கார் அதனால​ பேசாம இருங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.