முன்னாடியெல்லாம் செய்தபாவத்துக்கு அடுத்த ஜென்மத்தில்தான் தண்டனை இப்போபாரு உடனே கிடைக்குது கெளதம் சீண்ட, ஒரு முறைப்போடு சென்று விட்டான் சந்துரு. அம்மாவின் பயம் அவனுக்குமே இருந்தது இரண்டு நாளாக சந்துருவின் அறையிலும் மாயாவின் செண்ட் வாசனையோடு நடுஇரவில் அவளின் குரலும் சலங்கை ஒலியும் காதிற்கு அருகில் கேட்பதைப் போல தோன்றியது இப்போது அம்மாவிற்கும் அதே நிலைமை ஏற்பட்டு இருக்கிறது
ஆயிரம் இருந்தாலும் பர்வதம்மாள் என்றுமே அவனுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை, கொஞ்சமும் உதவாத புருஷனை கட்டிக்கொண்டு தனக்காக அவள் போராடியது அதிகமே ! எனவே அவளுக்கு ஏதேனும் ஆகும் முன்னமே இங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று எண்ணினான்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை சந்துரு உங்களுக்கு,
என்னை என்ன செய்யச் சொல்றே விஜயா ? நேத்து அம்மாவை மாயா அம்மாவை வந்து மிரட்டி இருக்கிறாள். நல்ல காய்ச்சல் எழுந்திருக்கவே முடியலை, பாவமாயிருக்கு, ச்சே காசு பணம் பின்னாடியே போய் எத்தனை பெரிய தவறுகள் எல்லாம் செய்திட்டேன்.
விஜயா அவன் மடியில் இருந்து எழுந்து சந்துருவின் முகத்தை கூர்ந்து பார்த்தாள். அப்போ மாயாவை நீங்கதான்....
இல்லை இல்லை நீ கூட என்னை சந்தேகப் படாதே விஜயா, நான் கெட்டவன்தான். அளவுக்கதிகமான பணம், என்னை தவறான வழியில் இழுத்திட்டு போச்சு, அம்மாவை என்னை இதுவரையில் சின்னதாய் திட்டியது கூட இல்லை, அவளுக்கு உலகமே நான்தான். மாயாவை கல்யாணம் செய்து அவ சொத்தை அடையமுடியலைன்னு இப்போ கூட எனக்கு வருத்தம் இருக்கு, ஆனா அவளை நான் கொல்லலை, எனக்கு அந்தளவிற்கு தைரியம் இல்லை விஜயா, எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனா பணம் காசு இருக்கிற வரையில் தான் என்னிடம் மோகம் அவர்களுக்கு, இப்போ நான் அன்னக்காவடி கண்கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரம் வருங்கிற மாதிரி, இப்போதுதான் உன்னோட அருமை தெரியுது, இப்போ நானும் கொஞ்சம் கொஞ்சம் மனுஷனா மாறிக்கிட்டே வர்றேன். அதனால நீ மட்டும் என்னை தயவு செய்து தப்பா நினைக்காதே.
சரி. மாயாவை நீங்க கொல்லலை அப்புறம் அவ ஏன் உங்கம்மாவை மிரட்டணும்.
தெரியலை, அம்மாவிற்கு மட்டும் இல்லை, எனக்கு கூட அந்த மிரட்டல் சப்தங்கள் கேட்கும். அந்தக் கமலை எப்படியாவது பழி வாங்கணுமின்னு நான் நினைச்சதாலே கூட இருக்கலாம். அதனால்தான் இனிமேல் அந்த மாதிரி ஏதும் செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். நான் இனிமேல் எனக்கு என்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறேன். நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா விஜயா..
உங்கம்மா ஒப்புக்கொள்வார்களா சந்துரு, நான் துணை நடிகைதான் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதுக்காக ஒரு சில நேரம் நான் என்னை இழந்ததுண்டு, இதெல்லாம் தெரிந்தால்....
நான் மட்டும் என்ன யோக்கியமா,,, அப்படி பார்த்தால், உன்னை விட நான்தான் மோசமானவன். பணத் திமிரில் நான் பெண்களை விழவைத்தேன். வாழ்விற்கு ஆதாரமாய் நீ விழுந்திருக்கிறாய். இனி பழசை மறந்துவிட்டு நிம்மதியான வாழ்வைத் தொடங்கலாம் விஜயா என்றான் நாத்தழுதழுக்க...! நாளைக்கே நாம அம்மாவிடம் போய் பேசலாம், தயாரா இரு என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு கிளம்பினான் சந்துரு.
இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை அவள் சந்துருவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை, தன் வாழ்விலும் இப்படியொரு திருப்பம் நேரம் என்று தன் இஷ்ட தெய்வத்தை பிராத்திக்க துவங்கினாள்.
மாயா வருவாள்
{kunena_discuss:1142}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.