(Reading time: 15 - 29 minutes)

17. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ருள் காவலனின் காவல் பணி முடியும் தருவாயில் நிலவு மகள் காவலனுடன் கை கோர்த்து சூரியனை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தாள்..

“எழில் என் கைக்கடியில் இருக்கும் மண்ணை வெளியே தள்ளமுடியுமான்னு பாரு..”,என்றாள் தியா..

“ஒரு நிமிஷம் இரு தியா..”,என்றவன் தான் கொண்டுவந்திருந்த கையளிவிலான சிறு மம்முட்டியால் மண்ணை வெளியே தள்ளத் துவங்கினாள் ..

ரிக்கியிடம் சிறு கத்தியைக் கொடுத்த எழில்,”சைடில் வளர்ந்திருக்கும் வேர்களையும் கொஞ்சம் வெட்டித் தள்ளுங்கள்..”,என்றான்..

வேர்கள் வெட்டப் பட்டவுடன் விடுதலை உணர்வு பெற்ற தியாவின் கை புலித்தோளொன்றை வெளியே எடுத்தது..

“வேறொன்னும் கிடைக்கவில்லையா..??”,இது விக்கி..

இல்லையென்பது போல் தலையசைத்தவள் புலித்தோளை பிரிக்கத் துவங்கினாள்..

இளவட்டங்களில் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சிலை கோயிலில் கிடைத்தது போல் இதுவும் ஒரு மேப்பே..

“இந்த மேப்புக்கு பின்னால் ஏதாவது எழுதி இருக்கான்னு பாரு..”,என்றாள் க்ரியா..

தோலின் பின்பகுதியை ஆராய்ந்தவள் எதுவும் கண்ணுக்கு சிக்காமல்,”ஒன்னும் இல்லை ரியூ..”,என்றாள்..

“எங்கே அதை இங்கே கொடு..எனக்கு இதுல ஏதோ இருக்கும்னு தோனுது..”,என்று அந்த மேப்பை தியாவின் கையிலிருந்து வாங்கிய வ்ருதுஷ் தான் கொண்டுவந்திருந்த பூதக் கண்ணாடி மூலம் மேப்பின் எல்லா மூலையையும் பார்வையிடத் துவங்கினான்..

சிறிது நேரத் தேடலுக்குப் பின்,”வியூகம்..”,என முனுமுனுத்தது அவன் இதழ்கள்..

“என்ன வ்ருதுஷ் சொன்னீங்க..?? புரியல..”,இது மயா..

“வியூகம்..”,என்றான் சத்தமாக..

“என்னது வியூகமா..?? அப்படீனா..??”,என்று கேட்டான் விக்கி..

“ஸ்ட்ராட்டஜி..”,என்றாள் க்ரியா..

“வெயிட்.. செழுவூர்ல நாம எடுத்த அந்த ஓலைச்சுவடிக்கும் இந்த வியூகம்ங்கற இந்த வார்த்தைக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ..??”,என்று கேட்டான் எழில்..

“அப்படி தான் எனக்கு தோனுது..”,என்ற மயா,”இந்த வியூகம்ங்கற வார்த்தையையும் ஓலைச்சுவடியில் இருக்கும் பாடலையும் வைத்துப் பார்க்கும் பொழுது மகாபாரத போரின் ஒன்பதாம் நாள் பீஷ்மரைக் கொள்வதற்காக பாண்டவர்கள் அமைத்த ஏதோ ஒரு வியூகத்தை இது குறிக்குதுன்னு தோனுது..”,என்றாள்..

“ஒன்பதாம் நாள் வியூகமா..??”,சற்று யோசித்த மயா,”சர்வதோபத்ர வியூகம்”,என்றாள் சத்தமாக..

“யப்.. கரெக்ட்..”,என்றொரு நிமிடம் குதித்த க்ரியா ரிக்கியிடம் திரும்பி,”நீங்க மெரைன் ஆர்க்கியாலஜிஸ்ட் தானே..??”,என்று கேட்டாள்..

ஆமாம் என்பது போல் தலையசைத்த ரிக்கி ஏன் என்பது போல் க்ரியாவை ஒரு பார்வை பார்த்தான்..

“இல்லை ரிக்கி.. நீங்க இந்த மேப்பை நல்லாப் பாருங்களேன்.. இது எதுவோ சீ (கடல்) மேப் மாதிரி இருக்கு.. அதான் உங்களுக்கு அதைப் பற்றி தெரியும்னு கேட்டேன்..”,என்றபடி அந்த மேப்பை அவனிடம் கொடுத்தாள்..

ஒரு நிமிடம் அந்த மேப்பையே பார்த்துக்கொண்டிருந்தவன்,”இது நீங்க சொன்ன மாதிரி சீ மேப் தான்.. இதனுடைய பேலன்ஸ் கிடைத்தால் தான் கரெக்ட்டா இந்த இடம் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை சொல்ல முடியும்..”,என்றான் ஓரக்கண்ணால் தியாவைப் பார்த்துக்கொண்டே..

அவன் பார்வை அசராமல் சந்தித்த தியா தன் இடையில் சொருகி வைத்திருந்த மர மேப்பை அவனிடம் நீட்டினாள் ஒரு கேலி சிரிப்புடன்..

அவள் கொடுத்த மர மேப்பை தான் வைத்திருந்த மேப்புடன் சேர்த்து வைத்துப் பார்த்த ரிக்கி,”ஸ்டில் தீ மேப் இஸ் இன்கம்ப்ளீட்..”,என்றான்..

“இன்கம்ப்ளீட்டா..?? ஹ்ம்.. பேலன்ஸ் பகுதியை தேடணுமா அடுத்து..”,என்றான் வ்ருதுஷ் சலித்தபடியே..

“யா..ரைட் வ்ருதுஷ்..இந்த இரண்டு மேப்பும் அந்த இடத்தின் நடு பகுதி..தொடக்குமும் முடிவும் இல்லாமல் இதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது..”,என்றான்..

ரிக்கியிடமிருந்த மேப்பை நெருங்கிய தியா இலையால் ஆன துணி போன்ற ஒரு வஸ்துவையும் இறகுகளாலான மற்றொன்றையும் அந்த மேப்புடன் சேர்த்து வைத்து,”தொடக்கமும் முடிவும் இப்பொழுது உங்கள் கையில்..”,என்றாள் அவனை நோக்கி புன்னகைதவண்ணம்..

என்ன இது என்பது போல் ரிக்கி அது மேப்பின் மீதி பகுதி என்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு,”இது உங்களுக்கு எப்படி கிடைத்தது..??”,என்று கேட்டான்..

ஒரு புன்னகையை அவனுக்கு பரிசளிதவள்,”விரைவில் அதைப் பற்றி சொல்கிறேன்..விடியல் தொடங்கிவிட்டது..சீக்கிரம் உங்க வேலையைத் துவங்குங்கள்..”,என்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.