(Reading time: 15 - 29 minutes)

“காலத்தை கடப்பதற்கான ஒரு வகை கருவி.. பட் அந்த மாதிரி மெஷின் இன்னும் கண்டுப்பிடக்கப் படவில்லை..இட்ஸ் ஸ்டில் அண்டர் ரிசர்ச்..”

“அப்போ அந்த மெஷின் இருந்தா காலத்தைக் கடக்கலாம்னு சொல்ற..?? அப்படிதானே தியா..??”

“இது விரைவில் சாத்தியம்னு விஞ்ஞான உலகம் சொல்லுது..”

“எப்படி..??”

“ஒளியை விட நாம் வேகமாக பயணித்தால் இது சாத்தியம்..”

“சரியா சொன்ன.. இப்போ நாம் ஒளியை விட அதிக வேகமாய் பயணிக்கப் போகிறோம்..”

“அது எப்படி சாத்தியம்..??”

“இந்த விஞ்ஞான உலகத்தில எல்லாம் சாதாரணமப்பா....”,என்று கவுண்டமணி ஸ்டைலில் சொன்ன அகிலன் தியாவின் கைகளை பிடித்தது..

தியா என்னவென்று உணரும் முன்னே தீப்பந்தத்தில் எரியும் நெருப்பிற்கும் அவளை இழுத்துச் சென்றது..

பதிமூன்று வருடங்களுக்கு முன்..

தியா மற்றும் க்ரியாவின் வீடு..

னது கருநீல விழிகளை சிமிட்டிய தியா தான் எங்குள்ளோம் என்பது தெரியாதவளாய் தடுமாறி தனது அருகே இருந்த மரத்தின் கிளையைப் பிடித்து தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள்..

தனது எதிரே தெரிந்து வீட்டின் போர்ட்டிக்கோவில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்த வண்ணம் தேநீரை அருந்திக் கொண்டிருந்தவரை பார்த்தவுடன் துப்பாக்கியிலிருந்து எறியப்பட்ட தோட்டாவாய் அவர் முன்னே சென்று நின்று ஒரு முழு நிமிடம் அவரை தன் இமைக்குள் கொண்டுவந்தாள்..

அந்நபரை மெல்ல நெருங்கியவள் அவரது கைகளை வருடி,“அப்பா..”,என்றழைத்தாள் நா தழுதழுக்க..

எதிரில் அமர்ந்திருந்த நரசிம்ஹனோ வீட்டு வாயிலை நோக்கிய வண்ணம்,”தியா பாப்பா.. இன்னும் நீங்க கிளம்பவில்லையா..??”,என்று கேட்டார்..

எங்க கிளம்பனும்..என்ன சொல்றார் இவர் என புரியாமல் திகைக்க தன்னைக் கிழித்துக்கொண்டு அவர் அமர்ந்திருந்த சேரின் விளிம்பில் அமர்ந்த குட்டி தியா,”மீ ஆல்வேஸ் ரெடி டாடி.. சித்தப்பா தான் பேட் பாய்.. இன்னும் குளிக்க கூட இல்லை..”,என்று கம்ப்ளைன்ட் வாசித்தது..

அவளது சிறுபிள்ளை தனமான பதிலை கேட்டு சிரித்தவர்,“என் தம்பி பேட் பாய் தாண்டா..வாங்க நாம் உள்ளே போகலாம்..”என்று தியாக் குட்டியை அழித்துக்கொண்டு உள்ளே சென்றார்..

பிரம்மை பிடித்தது போல் நின்று கொண்டிருந்த தியாவை உலுக்கிய அகிலன், ”தியா..தியா.. இங்க பாரு..”,என்றது..

ஏதோ கனவிலிருந்து விழிப்பது போல் பேந்தப் பேந்த விழித்தவள் தன்னை உலுக்கிக்கொண்டிருந்த அகிலனைக் கண்டு,“அகி.. எங்க அப்பாவுக்கு ஏன் என்னைத் தெரியவில்லை..??”,என்று கேட்டாள் கண்கள் கலங்கிய வண்ணம்..

“நாம் காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம்..நாம் இங்கிருப்பது யார் கண்களுக்கும் தெரியாது தியா.. நான் உன்னை இங்கு அழைத்து வந்ததற்கு காரணம் சிலவற்றை உனக்கு ஞாபகப்படுத்தவும் சிலவற்றை உனக்கு காட்டவும் தான்.. உணர்சிகளுக்கு இடம் கொடுக்காதே தியா.. நடப்பதை மட்டும் வேடிக்கை பார்..”,என்ற அகிலன் தியாவை நரசிம்ஹன் பின்னே வீட்டுக்குள் அழைத்துச் சென்றது..

(இனி நாம் குட்டி தியாவுடன் பயணிப்போம்..)

ண்ணன் பிறந்தான்-எங்கள்

கண்ணன் பிறந்தான்-இந்தக்

காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்..

தின்ன முடையான்-மணி

வண்ண முடையான்-உயர்

தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்

புண்ணை யொரிப்பீர்-இந்தப்

பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர்-நன்கு

கண்ணை விழிப்பீர்-இனி

ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,

கண்ணன் பிறந்தான்-எங்கள்

கண்ணன் பிறந்தான்-இந்தக்

காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.