(Reading time: 15 - 29 minutes)

தியாவை நோக்கி புரியாத பார்வையொன்றை உதிர்தவன் மேப்பை ஒரு நிமிடம் பார்வையிட்டுவிட்டு,”இது இந்தியன் பெருங்கடலுடைய ஒரு பகுதி.. கேரளத்திலிருந்து இந்த இடத்திற்கான மேப் இது.. அநேகமா இந்தப் பகுதியானது ஒரு தீவாக இருக்க வேண்டும்..”,என்றான்..

“ரிக்கி இந்தியப் பெருங்கடிளில் சில நூற்றாண்டுகளாக மிகப் பெரிய நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது.. இந்த மேப்போ பல நூற்றாண்டுகளுக்கு முன் சேர்ந்தது.. நான் என்ன கேட்க வருகிறேன் என்றால்..”,சற்று தான் கேட்க வரும் கேள்வியை இழுத்தான் வ்ருதுஷ்..

“ம்..ம்.. நீங்க கேட்க வருவது எனக்குப் புரியுது வ்ருதுஷ்.. தீவு கடலுக்குள் மூழ்கியிருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு..?? அப்படித்தானே..??”,என்று கேட்டான் ரிக்கி..

“எஸ் அதே தான் ரிக்கி... அப்போ நாம் இந்த பகுதி கடலுக்கும் மூழ்காமல் இருக்கா இல்லையான்னு எப்படி தெரிந்துகொள்வது..??”,என்றான் வ்ருதுஷ்..

“அதை கண்டு பிடிக்க தான் இந்தியன் மெரைன் ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் இருக்காங்களே..அவங்க கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க..”

“எனக்குத் தெரிந்த ஒருத்தர் கவர்மென்ட் டிப்பார்ட்மென்ட்ல இருக்காங்க..அவர்க்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்..”,என்றாள் க்ரியா..

“நம்ம எல்லாரும் ஒன்னை மறந்து விடுகிறோம்.. இந்த ப்ராஜெக்ட் அன்னபிஷியலா பண்ணிட்டு இருக்கோம்.. இது கவர்மென்ட் டிப்பார்ட்மென்ட்ல வரக் பண்ற யாரவது ஒரு ஆளுக்குத் தெரிந்தால் கூட நம்மால் இதை ப்ரொசீட் பண்ண முடியாது..”,என்றான் எழில்..

“ச்சே..இதை எப்படி மறந்து போனேன்..”,என்றபடி தலையில் லேசாக தட்டிக்கொண்டான் ரிக்கி..

“தட்ஸ் ஓகே ரிக்கி..இதுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு இருக்கும்..லெட்ஸ் டிஸ்கஸ் இட் வித் ஆச்சார்யா சார்..”,என்றான் எழில்..

“அவரிடம் கலந்துரையாடத் தேவையில்லை.. உங்களுக்கு நான் வழி காட்டுகிறேன்..”,என்றது அங்கு பறந்து வந்த கருடன்..

“உங்களுக்கு அந்த இடம் தெரியுமா..??”,என்று கேட்டான் விக்கி..

“தெரியும் விக்கி..அந்த இடத்திற்கு செல்ல வழிகாட்டிகளாக நாங்கள் இருக்கும் பொழுது ஏன் வெளியோரை எதிர்பார்க்கிறீர்கள்..??”,என்ற கருடன் அவர்களின் பதிலை எதிர்பார்க்காது,”மழை இனி வலுக்கும் போல் தெரிகிறது.. அருகில் ஒரு குகை இருக்கிறது..உங்கள் வேலையெல்லாம் முடிந்து விட்டது என்றால் நாம் அங்கு செல்லலாம்..”,என்றது..

குளிருக்கு இதமாய் குகையின் நெருப்பு மூட்டப்பட்டிருக்க அனைவரும் அதை சுற்றி அமர்ந்து அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்..

சற்று நேரம் அமைதி காத்த கருடன் சிவசிஷ்யனிடம் ஆரம்பியுங்கள் என்பது போல் சைகைகாட்டியது..

சிவசிஷ்யனோ தியாவைக் காட்டிய வண்ணம் பொறு என்பது போல் பதில் சைகையொன்றைக் கொடுத்தது..

ஒரு பத்து இருபது நிமிடங்கள் கடந்திருக்க குகையின் ஓரத்தில் தெரிந்த வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்ட தியா அதனை நோக்கி நகரத் துவங்கினாள்..

சிவசிஷ்யனின் முகத்திலோ இப்பொழுது ஒரு சன்னச் சிரிப்பு..

வெளிச்சத்தை நோக்கி முன்னேறிய தியாவிற்கு குகையின் கோடியில் அமைந்திருந்த மற்றொரு குகை வரவேற்றது..

அதன் அருகில் சென்றவள் ஏதோ ஒரு உந்துதலில் அதன் உள்ளே பிரவேசிக்கத் துவங்கினாள்..

சில அடிகள் அதனுள் சென்றவள் அங்கு அகிலன் இருப்பதைக் கண்டு,”இங்க என்ன பண்ற அகிலா..??”,என்று கேட்டாள்..

“உனக்காகத் தான் காத்திருக்கிறேன்..”,என்ற அகி அவளை அழைத்துக்கொண்டு குகையின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்லத் துவங்கியது.. தியாவும் அவனை ஊமையாக தொடர்து சென்றாள்..

ஓர் இடத்தில் நின்ற அகிலன் தனது கையிலிருந்த தீப்பந்தத்தை உயர்த்திக் ஓரிடத்தில் காட்டி,”அங்கு பாரு தியா..”,என்றது..

“என்ன அகி அங்க..”,என்ற வண்ணம் தனது பார்வையை பதித்தவள் அந்த பாறையின் மேல் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்வையிடத் துவங்கினாள்..

நான்கைந்து ஓவியங்களை ரசித்துக் கொண்டு வந்தவள் சட்டென,”இது..இது..”,என்று திகைக்கத் துவங்கினாள்..

“இது நீயே தான்..உன் ஓவியம் தான்..உன் அருகில் இருப்பது நான் தான்..இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டது..”,என்றது அகிலன்..

“அதெப்படி சாத்தியம் அகிலா.. நாம் இந்த ஓவியத்தில் வரைந்திருக்கும் கோயிலுக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் தானே சென்றோம்.. நீ என்னடான்னா இந்த ஓவியம் பல நூற்றாண்டுகளுக்கு முன் வரஞ்சதுன்னு சொல்ற..??”,என்று கேட்டாள்..

“நீ இந்த டைம் மெஷினைப் பற்றி என்ன நினைக்கற..??”,சம்பந்தம் இல்லாமல் கேட்டது அகிலன்..

“டைம் மெஷினுக்கும் இந்த ஓவியத்திற்கும் என்ன சம்பந்தம்..??”,எரிச்சல் பட்டாள் தியா..

“காரணமாகத் தான் கேக்கறேன் சொல்லு.. டைம் மெஷினைப் பற்றி என்ன நினைக்கற..??”,மீண்டும் கேள்வி எழுப்பியது அகிலன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.