(Reading time: 15 - 29 minutes)

அக்கினி வந்தான்-அவன்

திக்கை வளைத்தான்-புவி

யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான்-சுரர்

ஒக்கலும் வந்தார்-சுடர்ச்

சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய்-சுரர்

இக்கணந் தன்னில்-இங்கு 

மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார்,-உயிர்

கக்கி முடிந்தார்-கடல்

போல ஒலிக்குது வேதம் புவிமிசை

கண்ணன் பிறந்தான்-எங்கள்

கண்ணன் பிறந்தான்-இந்தக்

காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்..

பூஜையறையில் வீட்டினர் அனைவரும் கூடியிருக்க சகோதரிகள் இருவரும் பாரதியாரிபன் கண்ணன் பிறப்பு குறித்த பாடலைப் பாடி முடித்தனர்..

வழக்கம் போல் இருவரது தெய்வீக குரலைக் கேட்டு மெய்மறந்து நின்ற குடும்பத்தினரை வழமைக்கு அழைத்து வந்தது வீட்டு போன் அலறிய ஒலி..

“குட்டிப் பொண்ணுங்களா சூப்பர்..”,என்றபடி இருவரையும் அன்போடு அனைத்துக் கொண்ட தியா மற்றும் க்ரியாவின் சிற்றப்பா வேணுசங்கர்,”இதே மாதிரி இன்னும் நிறைய நிறைய பாடகள் படிக்கணும்..”,என்று இருவரது கையிலும் சாக்லேட்டுகளைத் திணித்தார்..

“சோ ஸ்வீட் சித்தப்பு..”,என்று இருவரும் அவருக்கு முத்தமொன்றை அன்புப் பரிசளித்தனர்..

“சித்தப்பாவும் பொண்ணுங்களும் கொஞ்சினது போதும்..தம்பி தியா இரண்டு பேருக்கும் கிளம்ப டைம் ஆகுதுல..?? சீக்கிரம் கிளம்புங்க..”,என்று விரட்டினார் தேவகிருபா (தியா மற்றும் க்ரியாவிம் அன்னை..)..

போன் பேசிவிட்டு வந்த நரசிம்ஹன்(தியா மற்றும் க்ரியாவிம் தந்தை..) வேணுவிடம்,”தம்பி.. நானும் உங்க கூடவே வரேன்..என்னை பைபாஸில் இறக்கிவிட்டு விட்டு செல்லுங்கள்..நண்பர் ஒருவரை பார்க்கவேண்டும்..”,என்றார்..

“சரிங்கண்ணா..”,என்ற வேணு,”தியா பாப்பா.. கிளம்பலாமா..??”,என்று கேட்டார் லக்கேஜுகளை எடுத்தவண்ணம்..

“எஸ் சித்தப்பு.. மீ ரெடி..”,என்ற தியா தன் அன்னையிடமிருந்து சில பல அட்வைஸுகளையும் க்ரியாவிடமிருந்து பிரியா விடை பெற்றும் ஊட்டியிலிருக்கும் தனது தாய் வழி தாத்தா பாட்டியிடம் செல்ல கிளம்பினாள் தனது சித்தப்பாவுடன்..

சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது அவர்கள் சென்று கொண்டிருந்த கார்..

வேணு காரை இயக்க அவர் அருகில் அமர்ந்திருந்த தியா அவருடன் வம்பிழுத்துக் கொண்டே வந்தாள்..

தன் தந்தையிடம் எதுவோ கேட்க திரும்பியவளது கவனத்திற்கு அவர் ஏதோ தீவிரமான சிந்தனையில் அமர்ந்திருப்பது தெரிந்தது..

“என்னப்பா என்ன யோசனை..??”,என்று கேட்டாள்..

மகளின் கேள்வியில் தனது சிந்தனையிலிருந்து வெளிவந்தவர்,”ஒன்னும் இல்லடா குட்டி..நம்ம அன்னைக்கு பாக்கபோனமே ஒரு அங்கிள்..??”

“ஆமாப்பா..சக்ரவர்த்தி அங்கிள்..”

“ம்..ம்..அவர் அவசரமா பார்க்க வர சொன்னார்..அதான் என்னாவா இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன்..”

“என்னங்கண்ணா ஏதாவது பிரச்சனையா..??”,என்று கேட்டார் வேணு..

“தெரியல வேணு..அவரை போய் பார்த்தால் தான் தெரியும்..”

“திரும்பி எப்படி வீட்டுக்குப் போவீங்கண்ணா..??”,அவரது சிந்தனையைக் கலைக்க கேள்வி கேட்டார் வேணு..

“ஏதாவது டேக்ஸி பிடிச்சு போக வேண்டியது தான்..”

“பைபாஸ்ல டேக்ஸி கிடைப்பது கஷ்டம்..நான் உங்களை போகும் வழியில் இருக்கும் டேக்ஸி ஸ்டான்டில் இறக்கி விட்டுட்டு போறேன்..”,என்றார்..

“வேண்டாம் வேணு..ஊட்டி ரீச்சாக லேட் ஆயிட போகுது..”,என்று கவலை கொண்டார் நரசிம்ஹன்...

“ஒரு அரை மணி நேரம் காத்திருப்பதால் ஒன்றும் ஆகிடாது..”,என்ற வேணு நரசிம்ஹன் சொன்ன இடம் வந்துவிட்டதால் காரை ஒரு ஓரத்தில் நிறுத்தினார்..

ரசிம்ஹன் காரிலிருந்து இறங்குவதை பார்த்த சக்ரவர்த்தி (ரிக்கியின் தந்தை) அவசர அவசரமாக அவரை நெருங்கி வந்தார்..

சக்ரவர்த்தியின் இந்த அவரசம் நரசிம்ஹனை திகைக்க வைத்தது என்றாலும் எதுவோ சரியில்லை என்பதுணர்ந்து அவரும் சக்ரவர்த்தியை நோக்கி நகர்ந்தார்..

“சிம்மா.. இந்தா இந்த ஓலைச் சுவடியை பிடி..”,என்று இரண்டாம் ஓலைச் சுவடியை கையில் திணித்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.