(Reading time: 14 - 28 minutes)

21. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

ந்த உலகத்திலேயே அதிகம் சந்தோசமாக இருந்த நபராக இருந்தார் மலர்கண்ணன்.

கவியரசியின் அந்த சொல்லே அவரது காதுகளில் விழுந்துக் கொண்டிருந்தது.அவரது கலையரசியை தாய் என்றல்லவா கூறினாள் கவியை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்..என்..என்னோட பொண்ணாடா...நீ..’என்றுக் கூறிக் கொண்டே அவளது தலையை ஆசையுடன் அவர் தலையை வருட வர அவரது கை படாதவாறு  தள்ளிநின்றாள் கவி.

அவளது ஒதுக்கம் அவருக்கு மனதில் வலியை ஏற்படுத்தியது.எல்லாம் தான் செய்த செயல்களால் தான் என்றுத் தோன்றியது..அவருக்கு

“ டேய் நான் உன் அப்பாடா...” என்று அவர் சொல்ல அவரை ஒரு கோப பார்வைப் பார்த்தவள்

“யார் யாருக்கு அப்பா,நீங்க எனக்கு அப்பாவே இல்லை..,எத்தனை நாள் என்னோட அப்பாவுக்காக ஏங்கி இருக்கேன் தெரியுமா..,அப்ப எனக்கு இந்த அப்பா பாசம் கிடைச்சிருந்தா..,இன்னைக்கி நான் உங்கள அப்பானு கூப்பிட்டுருப்பேனு நினைக்கிறேன்.., அதெல்லாம்  போகட்டும் இப்படி ஒரு மகள் இருக்குறேனு உங்களுக்குன்  தெரியுமா..,ஒரு அன்பான குடும்பத்துக்கு எப்படி ஏங்கி இருக்கனு உங்களுக்கு தெரியுமா..,வந்து இசியா அப்பானு கூப்பிட  சொல்லுரிங்க..,அதுவும் இன்னொரு குடும்பத்த உருவாக்கிட்டு வந்து..”கவி கூற 

அதுவரை அமைதியாக இருந்த பர்வதம்மாள் ”என்னடி,விட்டா அதிகமா பேசிக்கிட்டு போற..,உங்க அம்மா சரியா இருந்தா என்னோட பையன் எதுக்குடி அவளை விட்டுட்டு போக போறான்..,உன்னோட அம்மாவால தாண்டி நான் இத்தனை வருஷம் என்னோட பையன பிரிஞ்சி வாழ்ந்துக் கிட்டு இருக்கோம்..” என்று அவர் பேச ஆரம்பிக்க

“பாட்டி  நீங்க பேசாம இருக்கீங்களா..,உங்க பையன் தான் எங்க அம்மாவ கொன்னுட்டாறு..., அவர்  உங்க பையனா இருக்குறதால நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ணிககிட்டு இருக்கீங்க..,உங்க பையனால நான் எவ்வளவு இழந்துருக்கேன் தெரியுமா..,ஒரு குடும்ப சூழல வாழுற அடிப்படை எதிர்பார்ப்புக் கூட எனக்கு கிடைக்குல..,மூணு வேளை சாப்பாட்டு,போட்டுக்க துணி,லைப்ப ரன் பண்ண படிப்பு  இது போதுமா..,நான் எவ்வளவு இழந்துருக்கனு இங்க இருக்குற யாருக்கும் புரியாது..,அதுல்லாம் இங்க வலிக்கும்..”என்று தனது நெஞ்சை சுட்டிக் காட்டினாள் கவி.

அவளது அருகில் வந்த ஜனார்த்தனன் தாத்தா அவளை தனது தோளோடு அணைத்துக் கொண்டார்,அவரது பிடியிலிருந்து விலகியவலது மூளை பலவற்றை யோசிக்க ஆரம்பித்தது.

இவளுக்கு சர்டிபிகேட் எடுத்து வருவதற்கு ஜனார்த்தனன் தாத்தா தான்,நாராயணன் தாத்தாவிற்கு போன் பண்ணி கூறினார்,அப்ப இவருக்கு எல்லாம் தெரியும்,இவரோட பையனோட பொண்ணுங்குறது தெரியும் என்று யோசித்தவள்,அவரை நிமிர்ந்துப் பார்த்து

“ஏன் தாத்தா நீங்க ரெண்டு பேரும் என்ன ஏமாத்திட்டீங்க தான..”என்று அவரைப் பார்த்து அவள் கேட்க தனது பேத்தியின் அறிவை நினைத்து அவரால் அந்த நிலையிலும் சிலாகித்துக் கொள்ள தான் முடிந்தது.

“ஆமாம் மா..,அந்த ஊருக்கு நீங்க வந்திங்களே அன்னைக்கே தெரியும் டா..,நீ தான் என்னோட பேத்தினு...”என்று அவர்க் கூற

“தாத்தா நான் உங்க பேத்திங்கறதனால  தான உங்க பேரனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சிங்க..,உங்க மனசத் தொட்டு சொல்லுங்க..”என்று அவள் கூற அவரால் பதில் கூற முடியவில்லை,அவள் கூறியதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல தோன்றியது.

அவரது அந்த அமைதிலேயே அவரது எண்ண ஓட்டத்தை புரிந்துக் கொண்டவள்,”என்ன தாத்தா உங்களால பதில் கூற முடியல இல்ல..,உங்க யாருக்கும் என்னோட வலி புரியல எல்லாரும் உங்க பையனுக்காக தான் இப்படி நட்நதுகுரீங்க இல்ல..,என்னோட இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க உங்களுக்கு என்னோட வலி புரியும்...”என்று அவள் பேசிக் கொண்டே போக

அதுவரை அமைதியாக இருந்த அஸ்வின் அவளிடம் வந்தான்,”கவி அதான் எல்லாரும் சொல்லுறாங்கள திரும்ப திரும்ப அதையே பேசிகிட்டு இருக்காமா இப்படி வா..,அத்தைக்கி செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு பேசிக்கலாம்..”என்று அவன் கூற

“அதை அவர் செய்ய கூடாதுதான் நான் இப்படி செய்யுறேன்,அவருக்கு இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இப்ப எதுக்கு வந்தது எங்க அம்மாவுக்கு நான் செஞ்சுக்குறேன்..” என்று அவள் கூற,அவள் பேச பேச தனது மாமாவின் முகம் மாறுவதை பார்த்தவனுக்கு கவி மேல் தான் கோபம் ஏறியது..

“ஏய் சும்மா சும்மா என்னோட மாமாவ மட்டும் குறை கூறாத உங்க அம்மா மேலையும் தான் தப்பு இருக்கும் ,என்னோமோ என்னோட மாமா மேல மட்டும் தப்பு இருக்குற மாதிரி பேசுற..,எல்லாத்தையும் விட்டுட்டு அப்பா கிடைச்சாறா,அவரால இப்படி ஒரு குடும்பம் கிடைச்சிருக்கா அத வச்சி வாழுவோம்னு  வாழ கத்துக்க..” என்று அவன் கூற         

aeom

“போதும் அஸ்வின் நீங்க பேசுனது எல்லாம் போதும்..,எங்க அம்மாவ கெட்டவங்கனு சொல்லுரிங்களா...,இந்த ஆளு தான் எங்க அம்மா சாவுக்கும்,இன்னைக்கி நான் இப்படி வாழுறதுக்கும் காரணம்..,எத்தனை நாள் என்னோட சின்ன அத்தை எண்ண ஓடி போனவளோட  பொண்ணு தான நீ அப்பறம் நீ எப்படி இருப்ப,மத்தவங்கள அண்டி தான் வாழுவ அப்படின்னு சொல்லிருகாங்க தெரியுமா..,எல்லாம் இவரு எங்க அம்மாவ விட்டுட்டு போனதுதால தான ..” என்று  கூறியவளது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது,  “உங்க யாருக்கும் என்னோட வலி புரியாது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.