(Reading time: 14 - 28 minutes)

அடிபட்டா அணைக்க யாரும் இல்லாமா,காய்ச்சல் வந்தா கவனிக்க ஆள் இல்லாமா,ஸ்கூல் பர்ஸ்ட் வந்தா அத சந்தோஷமா கூற அம்மா,அப்பா இல்லாமா..,ஏன் நான் பருவம் அடைஞ்சப்ப அத சொல்ல பக்கத்துல யாரும் இல்லாம இருந்திருக்கேன் தெரியுமா..,இதுகெல்லாம் காரணம் இந்த ஆளு தான்..” என்று மலர் கண்ணனை நோக்கி தனக்கு அருகில் இருந்த சொம்பால் அடிக்க அது மலர் கண்ணனின் தலையை பதம் பார்க்க அவர் அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தார்.

பர்வதம்மாள் கவியை தனது மகனை கொள்ள வந்தவள் என்று வசைபாட மற்றவர்கள் மலர்கண்ணனை கவனிக்க ஆரம்பித்தனர்.

கவிஸ்ரீயும்,சஞ்சீவ்வும் கவியை முறைத்துக் கொண்டிருந்தனர்.தனது மாமாவை ரூமில் கிடத்தியவன் டாக்டருக்கு அழைத்து விட்டு வந்தவன்,அங்கே தனது தாயின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த கவியினை பிடித்து இழுத்து அவளது கன்னத்தில் அறைந்திருந்தான் அவன்.

“என்னடி நினைச்சிகிட்டு இருக்க எதுக்கு..,என்னோட மாமாவுக்கு  எதாவது ஆகட்டும்..,உன்ன.. பார்க்க கூட பிடிக்கலை என்று கூற,

அங்கே வந்த  பர்வதம்மாள் “அடிப்பாவி இந்த வீட்ட விட்டு போடி என்னோடபையன அடிச்சிட்டு இங்க இருக்க உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்,உங்க அம்மா மாதிரி தான நீ இருப்ப...”என்று அவர் பேசிக்கொண்டே வர தனது அறைக்கு  சென்றவள் தனது பொருள்களை எடுத்துக் கொண்டு கீழே வர,அதைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியடைய அஸ்வின் அமைதியாக அவளை பார்த்தான்,அவனுக்கு தெரியும் அவள் எங்கு போவாள் என்று தெரியும் என்பதால் அவன் அமைதியாக இருந்தான்,வீட்டில் இருபவர்களது கோபம் குறைந்த பின் அவள் இங்கு வரலாம் என்று நினைத்தவன் அவள் போவதை தடுக்கவில்லை.தடுக்க வந்தவர்களையும் கண்களால்  தடுத்தான்.

அவனது எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்துக் கொண்டவள் தனது மனதில் அவனிடம் கூறிக் கொண்டாள்,”உங்க குடும்பமே சொல்லுதே அஷு மாமா நான் எங்க அம்மா மாதிரின்னு,அப்ப நீங்க நினைக்கிற மாதிரி நான் அங்கே போக மாட்டேன்,வாழ்க்கையில தோத்து போய் வயித்துல கருவோட இருந்தப்பக் கூட எங்க அம்மா அங்கே போகல நான் மட்டும் போவேனா..”என்றுக் கூறிக் கொண்டவள் அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்..(ஒரு வழியா முடிச்சுட்டேன்...)

ன்று மாலை தனது நண்பன்  ஏற்கனவே கூறியதால் கவிக்கு அவளது தந்தைப் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைத்து நாராயணன் வர,அவர் வந்த பின்பு தான் அனைவரும் புரிந்துக் கொண்டனர் கவி அங்கே செல்லவில்லை என்று..

அதைக் கேட்டு கவியை வெளியில் போக சொன்ன பர்வதம்மாள் கூட அவளை காணவில்லை என்று கூறியதும் பயந்துதான் போனார் அவரது மகன் கண் விழித்ததிலிருந்து அவனது மகளை தேடுகிறான் என்று  தெரிந்திருந்தவருக்கு  பயப்பட தான் முடிந்தது.

கவியை ஒரு டிடக்டிவ் மூலம் தேடி அவள் இருக்கும் இடம் தெரிந்த பின்பு அவள் கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும் என்று அஸ்வின் கூற மற்றவர்களும் அவள் கோபம் குறையட்டும் என்று அமைதியாக இருந்தனர்

அதன் பிறகு பல சமாதானங்கள் இரு குடுமபத்திற்கும் நடந்து இணைந்தனர்.ஆகாஷ் தான் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை,அதன்பிறகு பல வருடம்  பேசாத அவன் தந்தை நடராஜன் அவனிடம் சில விஷயங்கள் சொல்ல,அதன் பிறகு அவன் அந்த குடும்பத்தை ஏற்றுக் கொண்டான்..,அஸ்வினுக்கும் தனக்கும் இருந்த சிறு வயது மனஸ்தாபங்களை எல்லாம் மறந்து விட்டு கவிக்காக ஏற்றுக் கொண்டான்.

கவி ஏங்கோ சென்றுவிட்டாள் என்று அஷ்வின் கூறவும்,இதுநாள் வரையில் இருந்த குற்ற உணர்வு இன்னும் மேலோங்க விஷ்வாவும், காவ்யாவும் அன்று தாங்கள் விளையாட்ட செய்த காரியத்தைக் கூற அனைவரும் முதலில் கோபப்பட பிறகு அஸ்வினும்,ஆகாஷும் அனைவரையும் சமாதானப் படுத்த குடும்பங்கள் இரண்டும் பல வருட மனத்தாங்களை மறந்து இணைந்தனர். ( எல்லாரும் பர்சண்டுக்கு வந்துடுங்க..,கவி அம்மா கதைய மலர்கண்ணன் தான்  உங்க கிட்ட சொல்லுவாராம்..சோ அவங்க கதைய நான் அப்புறம் சொல்லுறேன்...)

ன்னூரில் இருந்த அஸ்வினது வீட்டின் முன்பு கார் சென்று நின்றது.கண்களை மூடி கடந்த காலத்தில் பயணித்த இருவரும் தங்களது நிகழ்காலத்துக்கு வர அங்கே அவர்களது குடும்பமே திரண்டு வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.

அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது..அவர்களது தேவதை மீண்டும் அவர்கள் வீட்டுக்கே வந்துவிட்டாள்.

அஸ்வினையும்,கவியையும்  நிற்க வைத்து  ஆரத்தி எடுத்தது  அஸ்வினது தாயார் ஆனந்தி, அவருக்கு  கவியின் மீது இருந்த கோபம் குறைந்து போய் இருந்தது அவளது மீது தன் அண்ணனும்,மகனும் வைத்திருந்த பாசத்தை அவர்கள் கூடே இருந்து பார்த்ததின் பாதிப்பு அது..

பர்வதம்மாளும் அவளை தனது மகனுக்காக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.

அனைவரும் அவளை பாசத்திலேயே குளிப்பாட்ட அவள் அதில் குளிர்ந்து தான் போனாள், ஆனால்   அவள் மனதில் இருந்தா எதுவோ ஒன்று அவளை முழுவாதுமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியமால் செய்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.