(Reading time: 14 - 28 minutes)

அவளது மனநிலையைப் பற்றி ஏற்கனவே அஸ்வின் கூறியிருந்ததால் அவளை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தார் மலர்கண்ணன்.

சஞ்சீவும்,கவிஸ்ரீயும் அன்று துணிகடையில் நடந்த விஷயத்தை நினைத்து கவியின் மீது கோபமாக இருக்க அவர்களை கவியின் நிலையில் இருந்து யோசிக்க கூறி சமாதானப் படுத்தினார் மலர்கண்ணன்.

அதனால் அவர்களும் கவியுடன் நன்கு பேசினர்.ஆனால் அவர்களை பார்க்கும் பொழுது கவிக்கு ஒரு பொறாமை உணர்வு தோன்ற செய்தது.    தனக்கு கிடைக்க வேண்டியவை அவர்களுக்கு  கிடைத்து விட்டது  என்ற ஒரு உணர்வு...

அனைவரது நல விசாரிப்புகளுக்கு பின்பு தங்களது அறைக்கு கவி சென்று விட,அஸ்வின் தனது மாமாவை தேடி சென்றுவிட்டான்..

கதவை திறந்தவளது கண்களுக்கு  தெரிந்தது சென்னையில் இருந்தது  போல் இங்கும் அவளது புகைப்படம் அனைத்து இடங்களிலும் இருந்தது..,அதை பார்த்த உடன் அவளது உள்ளத்தில் சந்தோஷ ஊற்று உற்சாகமாக பொங்கியது..

அனைத்து புகைப்படங்களிலும் அவள் இருந்தாலும் அந்த அறையில் இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த உடன் அவளது சந்தோஷம் அப்படியே அடங்கியது..

அது அஸ்வின் அவளது தந்தையுடன் சிறுவயதில் எடுத்த  போட்டோவும் இப்பொழுது எடுத்த போட்டோவும் மெர்ஜ் செய்யப்பட்டு இருந்தது..

அதைப் பார்த்த உடன் மீண்டும் அவளுக்கு  தோன்றிய உணர்வு அவளை விட அஸ்வினுக்கு அவளது தந்தை தான் முக்கியம் என்பது தான்..

(எம்மா இது உனக்கே ஓவரா தெரியல்லை,ஒரு போட்டோ தான இருக்குது...)

தனது மாமாவிடமும்,தாத்தாவிடமும் பேசிவிட்டு தனது அறைக்கு வந்த அஸ்வின் தன்னவள் பல நாட்களுக்கு பிறகு தனது அறையில் இருப்பதை பார்த்தவனுக்கு ஒரு நிறைவு...இதன்னை நாள் அவன் இதற்காகத்தானே ஏங்கினான்...

aeom

அவனை அவள் மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டிருக்க அவனோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான்..

கலைந்த முடியும், பயணக்களைப்பும் சேர்த்து அவள் காட்சி அளித்தாலும் அவனுக்கு அவள் அழகாய் தெரிந்தால்..(அவங்க அவங்களுக்கு அவங்க ஆளு எப்படி இருந்தாலும் அழகு தான்...

தத்துவம் தத்துவம்...)

அவளது அருகில் சென்றவன் அவள் மனநிலை தெரியாமல் பின்னிருந்து அணைக்க..

அந்த நிமிடத்தை அவள் நேசிக்க தான் செய்தாள்..

அவன் தன் தந்தையுடன் இருக்கும் போட்டோவை பார்த்தவள் அவனது கைகளை விலக்கி விட்டு

"அஸ்வின் நான் உங்க கிட்ட ஏதோ சொன்னதா நியாபகம்...,உங்களுக்கு மறந்து இருக்காதுனு நினைக்கிறேன்.., நான் இங்க வந்தது அந்த கல்யாணம் நடக்கறதுக்கு மட்டும் தான் வந்துருக்கேன்..அதனால நீங்க இப்படி என்கிட்ட பிகேவ் பண்ணாதீங்க.."என்று கூறி விட்டு அவள் அந்த இடத்தை விட்டு செல்ல அஸ்ஹவினுக்கு தான் கோபம் தலைக்கேறியது...

அதன் பிறகு அவன் அவள் கண்களில் படவில்லை...

கவியின் கண்கள் தேடி தேடி அலுத்துப் போக கடைசியாய் அவன் தன்னை இந்த கல்யாணம் நடப்பதற்காக தான் அழைத்து வந்துள்ளான் என்று தவறாக முடிவெடுத்துக் கொண்டாள்..

இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும்  குரூப் குரூப்பாக அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர்.

நித்தியுடன் அமர்ந்து அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கவி.நித்தியும் கவிஸ்ரீயும் நன்றாக பேசிக்கொண்டிருந்தனர்.

அஸ்வின் கவி பார்க்காத நேரங்களில் அவளை பார்த்தான். அங்கு இருந்த அனைவரும் சந்தோசமாக இருக்க அவள் மட்டும் எதையோ தொலைத்தவள் போல் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்தவனுக்கு கோபம் தான் வந்து தொலைத்து இவ்வளவு அழகான குடும்பம் இருந்தும் அவள் அதை ரசிக்காமல் அமர்ந்திருப்பதை பார்த்து.

விஷ்வாவும்,காவ்யாவும் கவி செய்த குறும்புகள் பற்றி சொல்ல கேட்டவனுக்கு அவள் அதுபோல் இருந்தால் எப்படி இருக்கும் என்று தான் யோசிக்க முடிந்தது..

அப்படி இருந்தவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசிக்க முடியவில்லை.

அவளை பற்றியே அவன் நினைத்திருக்க அவனது மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது.

அதை எடுத்துப் பார்த்தவன் இவன் வேற அப்ப அப்ப கால் பண்ணி அப்டேட் வாங்கிக்குறான்..என்று புலம்பிக்கொண்டே அர்னவின் அழைப்பை ஏற்றான்.

"சொல்லு அர்னவ்,உன் ப்ரண்ட் சாப்பிட்டா நல்லா பார்த்துக்கறேன்..."என்று அஸ்வின் கூற

"எனக்கு அதுல சந்தேகமே இல்லை அஸ்வின் நீங்க எல்லாரும் அவளை நல்லா பார்த்துக்குவிங்க..அவ சந்தோசமா இருக்காளா.."என்று அர்னவ் கேட்க  அதற்காக கத்திருப்பவன் போல் அனைத்தையும் கூறினான் அஸ்வின்.

அவனது மனதில் இருப்பதை கூறி ஆறுதல் அடைய ஒரு நண்பன் அவனுக்கு தேவைப்பட்டான் அவனுக்கு வடிகாலாக அமைந்தான் அர்னவ்.

அஸ்வின் கூறியதை பொறுமையாக கேட்ட அர்னவ் தனது மனதில் பட்டத்தை அவனிடம் கூற ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.