‘” அஸ்வின் நான் சொல்லுறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க,எனக்கு தெரிஞ்சு கவிக்கு உங்க மேல எல்லாம் பாசம் இருக்கு அவ உங்களை ரொம்ப லவ் பண்றா..,அவ என்ன நினைக்குறானா,நீங்க எல்லாரும் அவளோட அப்பாக்காக தான் அவள ஏதுக்க தயாரா இருக்குறதா நினைக்குறா அதுதான் அவ உங்க எல்லார்கிட்டையும் இப்படி நடந்துக்குறா..,
அவளுக்கு அவளுக்காக நீங்க காத்தீருக்கிங்கனு புரிய வைங்க..,அவ அதுக்காக தான் ஏங்குறா.., நீங்க இத செய்வீங்கனு நம்புறேன்..,நான் சொன்னத யோசிங்க...,குட் நைட் “ என்றுக் கூறி தனது அழைப்பை துண்டித்தான் அர்னவ்.
அர்னவ் அழைப்பை துண்டித்ததும் சிறிது நேரம் யோசித்த அஸ்வின்,தனது அறைக்கு சென்றான்.
அங்கே அவளது நங்கை அவளோ அஸ்வினது பாரா முகத்தால் தூக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்தான்.
இந்த அறையில் அவள் அவனது கை அணைப்பில் படுத்துதான் அவளுக்கு பழக்கம்..,இன்று அது நடக்குமா என்ற எதிர் பார்ப்புடன் படுத்திருந்தாள் கவி..
அறைக்குள் வந்த அஸ்வின் கதவை சாத்துவது அவளுக்கு நன்கு கேட்டது..,அவன் கட்டிலை
நோக்கி வரும் ஒவ்வொரு நொடியும் கவியின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது.., ஒவ்வொரு இதய துடிப்பும் வெளியில் கேட்கும் படி துடித்தது..,நாம் ஒரு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேலையில் நமது இதயத்தை அழுத்துமே ஒரு உணர்வு
அதுபோல தான் இப்பொழுது அவளுக்கு இருந்தது.
அவளது மறுபக்கத்தில் படுத்த அஸ்வினுக்கு அவள் இன்னும் உறங்கவில்லை என்று தெரியும் அவளை பின்புறமாக அஸ்வின் அணைக்க அதற்காக காத்திருந்தவளுக்கோ மனதை அழுத்திய வலிபோய் தனது கணவன் தனது தேவைகளை இன்னும் மறக்கவில்லை அவன் எனக்காக யோசிக்குறான் என்று நினைதவளுக்கு கண்ணில் நீர் வர ஆரம்பித்தது.
அவளை தன் புறம் அவன் திருப்ப அவனது நெஞ்சில் தான் அழுதது தெரியாமல் இருக்க புதைந்தாள்.
ஆனால் அவன் அனைத்தையும் அறிந்துதான் இருந்தான். அவள் மறைக்க நினைப்பதை நாம் கேட்கக் கூடாது என்று நினைத்தவன் அமைதியாக அவளது தலையை தடவிக் கொடுத்தான். சிறிது நேரம் கழித்து அவளை நிமிர்த்தி எப்பொழுதும் போல் தனது நெற்றி முத்தத்தை வைக்க
நான் இவனுக்காக ஏங்குகிறோம் என்று அவனுக்கு தெரியகூடாது என்று நினைத்தவள் அவனிடம் வம்பு செய்ய தயாராக இருந்தான்.”உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாத..,இப்படி தூங்குற எனக்கு தெரியாம முத்தம் குடுக்குறீங்க..(அடிபாவி....,இது அஸ்வினோட மைன்ட் வாய்ஸ்.)..”
என்று கவி கேட்க மனதுக்குள் சிரித்தவன்..
“என் பொண்டாட்டிக்கு கொடுக்க யாருகிட்ட நான் கேட்கணும் நீ தூங்குறப்போ என்ன
இப்ப கூட கொடுப்பேன் எனக்கு என்ன பயம்...” என்று கூறி கொண்டே அவளை நோக்கி குனிந்தவன்..” என் பொண்டாட்டிக்கு என்னோட கைவளைவில் தூங்கலனா தூக்கம் வராது..’ என்று கூறி அவளை தனது நெஞ்சுக்குள் இன்னும் ஆழமாக பொத்திக் கொண்டவன்,
“ தூங்குடா,காலையிலேருந்து அலைச்சல் டயர்டா இருக்கும்..” என்று கூறி அவளது உச்சியில் மீண்டும் ஒரு முத்தத்தை கொடுக்க இருவரும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தனர்......
“என்னவனது ஒரு விழி
திண்டலுக்காக காத்திருப்பவள்
நான்..
அவனது நினைவே நான் என்ற
பொழுது....
என் இதயம் மகிழும் மகிழ்ச்சிக்கு
அளவுகோல் இந்த உலகில்
இல்லை..”

தொடரும்
{kunena_discuss:1099}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.