(Reading time: 8 - 16 minutes)

13. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

தாய்மையின் ஊற்று அவளுள் கடல் போல் பெருக, மண்டியிட்டு மகளை வாரி அணைத்துக்கொண்டாள் சந்தா…

ஆசைதீர நைனியை முத்தமிட்டு மகிழ்ந்தவள், அவளை விடும் எண்ணமே இல்லாது தன் கையணைப்பிலேயே வைத்திருந்தாள்…

சந்தாவின் உணர்ச்சி பிரவாகத்தினை சற்றும் அசையாது பார்த்துக்கொண்டே இருந்தான் ப்ரசன்…

“நைனி… எப்படிடா இருக்குற?... சாப்பிட்டியா?... இங்க எப்படி நீ?...”

வரிசையாக கேள்வி மேல் கேள்வி கேட்டாள் சந்தா மகளிடம்…

“உங்கூட நான் சண்டை…. நீ பேசாத… போ…”  என சந்தாவிடமிருந்து விலகினாள் நைனி…

மகளின் விலகல் அவளிடம் ஒரு ஏமாற்றத்தை விதைக்க, முகம் வாடிப்போனாள் சந்தா சட்டென…

திரும்பி நிற்கும் மகளிடம் சென்று “நைனி எங்கிட்ட பேசமாட்டியா?...” என சந்தா கேட்க,

“ஆமா… பேசமாட்டேன்….” என்றாள் நைனி…

“ஏண்டா?... அம்மா எதும் தப்பு செஞ்சிட்டேனா?...”

“ஆமா… இத்தனை நாள் நீ ஏன் என்னைப் பார்க்கவே வரலை?... எங்கிட்ட பேசவும் இல்லை?..”

நைனியின் கேள்வியில் ஒருநிமிடம் உறைந்து போனவள், பின் சுதாரித்து,

“இல்லடா அம்மாக்கு கொஞ்சம் வேலை… அதான்…” என இழுத்தாள்…

“என்ன பெரிய பொல்லாத வேலை உனக்கு?... அப்பாவை பார்த்தியா?... எப்பவும் எங்கூடவே தான் இருக்குறாங்க… ப்ரசனும் வேலைக்குப் போறான் தான?... உனக்கு என் மேல பாசமே இல்லம்மா… அதான் எங்கூட நீ இருக்குறதே இல்ல…”

சந்தா இல்லாத இத்தனை நாட்களின் தவிப்பு, நைனியின் அழுகை கலந்த பேச்சில் தெரியவர, மனமுடைந்தாள் சந்தா…

“இல்லடா… அம்மா… வேணும்னே செய்யலடா…” என சொல்லி முடிப்பதற்குள் சந்தாவிற்கும் கண்ணீர் கன்னம் எட்டியது…

“ப்ரசன்… மம்மியை எங்கிட்ட பேசவேண்டாம்னு சொல்லிடு….” என தகப்பனின் காலை நைனி கட்டிக்கொள்ள, ஒரு வெற்றிடம் வந்து குடிகொண்டது சந்தாவின் மனதில்…

சந்தாவின் இந்நிலையை அவனால் கொஞ்சமும் சகித்திருக்கமுடியவில்லை…

சட்டென மகளின் முன் மண்டியிட்டவன், “அம்மாக்கு நிஜமா வேலைடா… அதான் அப்பா எங்கிட்ட உன்னை நல்லா பார்த்துக்க சொன்னாங்க… அப்பாவும் உன்னை அம்மா நியாபகம் வராதமாதிரி பார்த்துக்கிட்டதுக்கும் அம்மாதாண்டா காரணம்… பாரு அம்மா அழுறாங்க… உன்னை பிரிஞ்சி அம்மாவும் கஷ்டப்பட்டிருப்பாங்க தான… அம்மா பாவம்லடா… நீ அம்மா பொண்ணுதான… அம்மா உங்கிட்ட எப்பவும் தைரியமா இருக்கணும்னு சொல்லிதான வளர்த்தாங்க… அதை மறந்து இப்போ நீயே அழுதா அம்மாவும் அழுவாங்கல்ல?...”

ப்ரசன் தன் மகளினை சமாதானப்படுத்த, சந்தாவோ தன் உணர்வுகளை அடக்கப்போராடினாள்…

நைனியின் முகத்தை அவன் அழுந்த துடைத்துவிட்டு, அம்மாவிடம் பேசு என்பது போல் சைகை காட்ட, நைனியோ அவனையே பார்த்தாள்…

“பாரு இப்போ கூட அம்மா உன்னைப் பார்க்க தான் கிளம்பினாங்க… பக்கத்துல பாரு பை கூட இருக்குல்ல… அப்பா அம்மாவை கூட்டிட்டு வர தான் இங்க வந்தேன்…”

அவன் புன்னகையுடன் சொல்ல, அவள் அவனை இப்போது முறைத்தாள்… நைனி சட்டென அவள் புறம் திரும்ப, சந்தா அவனை முறைப்பதை விடுத்து மகளினை பார்த்தாள்…

“சாரி மம்மி… உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?... சாரி…” என நைனி தலையை ஆட்டிக்கொண்டே கூற, சந்தாவோ அவளின் கரம் பிடித்து முத்தமிட்டு சிரித்தாள்…

“அம்மாவை நீ எந்த கஷ்டமும் படுத்தலைடா… அம்மா தான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன்… அம்மா தான் சாரி சொல்லணும்… சாரிடா நைனிகுட்டி… அம்மாவை மன்னிச்சிடு…”

அவள் மானசீகமாக மகளிடம் மன்னிப்பினை வேண்ட, “நோ மம்மி… நீ சாரி எல்லாம் சொல்லாத… உனக்கு வேலை இருந்ததால தான என்னை விட்டு நீ இருந்த… இல்லன்னா எங்கூடவே தான இருந்திருப்ப…” என நைனி புன்னகைத்தபடியே கூற, சுருக்கென்றது சந்தாவிற்கு…

“நைனி… உன் அம்மா வேலை எல்லாம் முடிஞ்சதா?... இல்லை இன்னும் எதாவது பாக்கி இருக்குதா?...”

குரல் கேட்ட திசையில் திரும்பிய சந்தாவின் புன்னகை ஒரு நிமிடம் விரிந்து பின் தானாகவே உதித்த தடம் தெரியாமல் போனது…

“அம்மா…. நீங்க இங்க?....”

ப்ரசன் கேள்வியாய் நிறுத்தி தாயினைப் பார்த்திட,

“உனக்கும் டிரான்ஸ்பர் ஆகிடுச்சு… அதான் அங்க இருந்து கிளம்பி வந்துட்டோம்… வீட்டுக்குப் போயிட்டிருந்தோம்…. அப்போ வழியில உன் கார் இங்க நிக்குற பார்த்து நைனி தான் அப்பா இங்க இருக்குறார்… உன்னைப் பார்க்கணும்னு சொன்னா…”

கலைவாணி மகனிடம் நடந்தவற்றைக் கூற, “சரிம்மா… நாம வீட்டுக்கு கிளம்பலாம்…” என்றான் அவன் சந்தாவினைப் பார்த்துக்கொண்டே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.