Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகா

Aathibanin kaadhali

திபன் தன்னை வேண்டுமென்றே அவாய்டு செய்து விட்டு சென்றதாக நினைத்த ஆதிராவி்ற்கு கோபம் வந்தது. இருந்தாலும் தன்னை நிராகரித்து செல்லும் அளவிற்கு என்னதான் பிரச்சனை என பார்க்க அவா்கள் பின்னே நடக்க ஆரம்பித்தாள். ஆனால் வெண்பாவோ ஆதிராவின் கையை பிடித்து இழுத்து நிறுத்தி

”எங்கடி போற”

”இருடி அங்க ஏதோ பிரச்சனையாம் நான் போய் பார்க்கப்போறேன்”

”ஒண்ணும் தேவையில்லடி அதான் அத்தான் போயிருக்கார்ல அவர் எல்லாத்தையும் சரிபண்ணிடுவாரு வா போலாம் சாயங்காலம் ஆச்சி அம்மா தேடுவாங்க வாடி”

”இருடி நான் ஒரு வக்கீல் அங்க என்ன பிரச்சனைன்னு பார்க்காம போனா அது தப்பு நான் பார்க்கத்தான் போறேன் நீ வர்றியா இல்லயா”

என சொல்லிவிட்டு அவள் முன்னே நடக்க முயற்சிக்க எவ்வளவு தடுத்தும் அவள் நிற்காததால் அவள் கூடவே பிரச்சனைக்குரிய இடத்திற்கு சென்றாள் வெண்பா.

அங்கே ஆதிபனின் மாமன்களான ஆளவந்தான் வக்கீல் புகழேந்தி அன்பரசு மூவரும் தங்களுடைய ஆட்களுடன் நின்று கொண்டிருந்தனர். அங்கு வேலைசெய்பவர்களை வேலை செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்த ஆதிபன் நேராக அவர்களிடம் சென்று பேசலானான்.

”மாமா இங்க என்ன பண்றீங்க”

”நீயா வாவா இந்த கேள்விய நாங்கதான் உன்னை பார்த்து கேக்கனும் நீ இங்க என்னடா பண்ற” என அன்பரசு ஆதிபனைப் பார்த்து கேட்க”

அதைக் கேட்ட ஆதிபன் அதிர்ச்சியுடன் ”என்ன மாமா இது வேலை செய்றவங்களை வேலை செய்யவிடாம தகராறு பண்றது தப்பு மாமா”

”ஓ உன் மாமனுக்கே எது தப்பு எது சரின்னு சொல்ற அளவுக்கு ரொம்ப பெரிய ஆளாயிட்டியா” என அன்பரசு மீசையை முறுக்கிக் கொண்டே கேட்க

”அப்படியில்ல அன்பு மாமா எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்கன்னுதானே கேட்டேன்”

”ஆதிபா நல்லா கேட்டுக்க இனிமே இந்த தென்னந்தோப்பு எங்களுக்குத்தான் சொந்தம் நீயும் உன் ஆட்களும் இங்கிருந்து  கிளம்புங்க” என ஆளவந்தான் கர்ஜித்துக்கொண்டே கூறினார்.

”அதெப்படி இது உங்களுக்கு சொந்தமாகும் இது அப்பாவோடது மாமா”

”உங்கப்பா அவர் தங்கச்சிக்கு இந்த நிலத்தை என்னிக்கோ எழுதிக் கொடுத்துட்டாரு தெரியும்ல உனக்கு” என்றார் வக்கீல் புகழேந்தி

”அது சரிதான் மாமா ஆனா அத்தைதான் இந்த இடம் வேணாம்னு திருப்பிக் கொடுதுட்டாங்களே இப்போ எதுக்கு வந்து தகராறு பண்றீங்க”

”அவள் கொடுத்தது உண்மைதான் ஆனா பத்திரமா எழுதித் தரலையே வெறும் வாய் வார்த்தைதானே ஆதிபா இது பெரியவங்க விசயம் உனக்கெதுக்கு ஒதுங்கி நில்லு”

என ஆளவந்தான் கூறிவிட்டு மறுபடியும் அங்கிருந்த வேலையாட்களை வெளியேற்ற ஆரம்பித்தார். அதை பார்த்தும் அமைதியாக நின்று கொண்டிருந்த ஆதிபனை பார்த்த ஆதிராவிற்கு கோபம் வந்தது. யாரும் கூப்பிடாமலே தானாகவே அவர்களின் முன் வந்து நின்று பேசலானாள்.

”ஹலோ என்ன பண்றீங்க இங்க நீங்க பண்றது ரொம்ப தப்பு”

அவள் யாரென்று தெரியாததால் அவர்கள் 3 பேரும் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு பேசலானார்கள். முதலில் ஆளவந்தார் பேச ஆரம்பித்தார்.

”யார்மா நீ எங்களை தப்பு சொல்ல வந்துட்ட” என கேட்கவும்

”நான் ஆதிரா நீங்க பண்றது இல்லீகல்”

என அவள் கூறவும் அன்பரசு முன் வந்தார்.

”எது இல்லீகல் இந்த ஆதிபன் பண்றதுதான் மா இல்லீகல் இந்த சொத்து என் பொண்டாட்டி பேர்ல இருக்கு இது எனக்கு சொந்தம். எங்களுக்குதான் இந்த தோப்பு மேல உரிமையிருக்கு” என அவர் சொன்னதற்கு பதிலாக

”அப்ப உங்க ஒய்ப் எங்க”

”அவள் ஏன் இங்க வரனும்”

”அவங்களுக்குத்தானே இந்த சொத்தில உரிமையிருக்கு உங்களுக்கு இல்லையே நீங்க ஏன் இங்க வந்து தகராறு பண்றீங்க வேலை செய்துகிட்டு இருக்கறவங்களை வேலை செய்யவிடாம துரத்தரது சட்டப்படி குற்றம்”

என பொளந்து கட்டினாள் ஆதிரா

”அதை கேக்க நீ யாரும்மா” என அன்பரசு கேட்கவும் கொஞ்சமும் யோசிக்காமல்

”நான் ஆதிபன் அத்தானுக்கு தெரிஞ்ச பொண்ணு” என்றாள்

அவள் சொன்னதை கேட்டதும் 3 பேரும் மட்டுமில்லாமல் அங்கிருக்கும் வேலையாட்கள் முதல் அனைவருமே அதிர்ந்தனர். அதிலும் ஆதிபன் பேரதிர்ச்சியடைந்தான். தன்னுடன் பேசி சிறிது நேரம் கூட ஆகவில்லை இப்படி உரிமையாக பேசுகிறாளே என நினைத்துக்கொண்டான்.

இன்று வரை தன் மாமன்களை எதிர்த்து பேசாமல் பொறுமையாக போனவன் இன்று ஆதிரா அவர்களை எதிர்த்து பேசுவதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவள் அவனை அத்தான் என அனைவரின் முன்பும் அழைத்ததும் அவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது.

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகாSaaru 2017-12-08 22:21
Athi nee alakura
Aduthu ena illangam vara podo
Nice update sasi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகாNanthini 2017-12-07 21:19
Athira oru boldness romba pidichiruku Sasirekha.

Thayangamal, avanga vishayamnu othungamal Aathiban kooda pathil solla hesitate seiyum pothu ivanga pesi 3 peraiyum adakuvathu rasikum badi irunthathu.

Aathiravirku Aathibanai pidithirupathal than aththanu koopidurangala or avanga friend appadi kooppiduvathal solrangala? :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகாmadhumathi9 2017-12-07 20:50
Kathai romba viruviruppu kooduvathu polirukku. Lawyer amma sakkai podu podraanga. :clap: edhiraali therichi odraanga. Super epi. (y) waiting to read more.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகாAdharvJo 2017-12-07 20:40
:cool: & Interesting update ma'am :clap: Appadi ena aadhira sodhapi vachanga :Q: Idhula letter vera ezhuthi vachittu vandhu irukangale :D Pavam venba :sad: :D Aathira oda adhiradi actions wer super and kalakal :dance: Ivanga rombha nalavanga thaa :P she is too straight forward which is cool but does she know adhiban before itself :Q: Aduthu ena agumn therindhu kola waiting. :thnkx: for this cute update.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகாDevi 2017-12-07 20:22
Interesting Sasi.. (y)
what next :Q:
Reply | Reply with quote | Quote
+1 # AkSuveni 2017-12-07 18:07
Super episode
Aathira super
God bless you
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 05 - சசிரேகாsaju 2017-12-07 17:50
SUPER UD SIS
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top