(Reading time: 4 - 7 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 30 - தேவி

vizhikalile kadhal vizha

லர், செழியன் இருவருக்கும் இந்த பங்க்ஷன் கால கட்டங்கள் சில பல மறக்க முடியாத நிகழ்வுகளை கொடுத்தாலும் இருவரும் தங்களுக்குள் உள்ள நேசம் இன்னும் ஆழமாக மாற இது வாய்ப்பாக இருந்தது.

இதோ அந்த விழாவின் அடுத்த ஒரு முக்கிய நிகழ்வு .. ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் மீட். சில வருடங்களாக குறிப்பாக செழியன் அந்த கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து இந்த விழா நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் இந்த நூற்றாண்டு விழா என்பது மிக பெரிய வரம் என்பதால், நிர்வாகத்தினரும், மாணவர்களும் சேர்ந்து எடுத்த முயற்சியால் ஐம்பது வருட முன்னாள் மாணவர்கள் சிலரை அடையாளம் காண முடிந்து அவர்களை விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தனர்.

கிட்டத்தட்ட பத்து பேர் வரை ஐம்பது வருட பழைய மாணவர்கள் இருக்க, அவர்கள் சிலர் அரசு துறையில் நல்ல பதவியில் இருந்து ஒய்வு பெற்று இருந்தனர்.

சிலர் தனியார் துறைகளிலும், ஓரிருவர் சொந்த தொழில் செய்தும் அதில் இருந்து ஒய்வு பெற்று இருந்தனர்.

மொத்தம் சுமார் ஆயிரம் மாணவர்கள் வந்து இருந்தனர். அதில் கிட்டத்தட்ட சென்ற வருடம் முடித்து இருந்த மாணவர்களில் ஆரம்பித்து ஐம்பது வருட மாணவர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

இவர்களுக்கு காலையில் வரவேற்பாக தற்போதைய மாணவர்கள் ஆளுக்கு ஒரு குட்டி மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின் பிரேக் பாஸ்ட் முடிக்காதவர்களை பூட் கோர்ட் அழைத்து சென்று அங்கே தேவையானதை கேட்டு சாப்பிட வைத்தனர்.

மற்றவர்களை இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடங்களில் அமர வைத்தனர்.

இன்றைக்கு பழைய மாணவர்கள் குடும்பத்தோடு வர அழைப்பு இருந்ததால், அவர்களோடு வந்து இருந்த குழந்தைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி அவர்கள் விளையாட, கேம் ஷோ, பாட்டு, ஆட்டம் என்ற எல்லாம் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அந்த பொறுப்பு மலர் ஏற்றுக் கொண்டு இருந்தாள். அந்த பழைய மாணவர்களின் குழந்தைகள் கிட்டத்தட்ட அறுபது பேருக்கு மேல் பதினைந்து வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க அவர்களை வயது வாரியாக பிரித்து , அவர்களுக்கு ஏற்ற வகையில் கேம் ஷோ , மேஜிக் ஷோ எல்லாம் தனியாக நடைபெற்றது.

ஒரு சில குழந்தைகள் தவிர மற்ற எல்லா குழந்தைகளும் உற்சாகமாக பங்கு பெற்றார்கள்.

இந்த பொறுப்பு முழுதும் கல்லூரியின் பெண்கள் அணியை வைத்து திறம்பட நடத்தினாள் மலர்விழி.

இங்கே விழா மேடையில் கல்லூரி டிரஸ்ட்டி எல்லோரையும் வரவேற்று பேசி விட்டு, அந்த மிக பழமையான மாணவர்களை தலைமை தாங்க அழைத்தார்.

அவர்களும் சற்று தளர்ந்த நடையிலும், சிலர் வாக்கர் உதவியோடும் மீடியா ஏறினார்கள்.

அவர்கள் எல்லோரும் வேறு வேறு வருட மாணவர்கள் என்பதால், எல்லோரையும் அவர்களின் அனுபவத்தை சொல்ல சொல்ல, அனைவருக்கும் அவர்கள் கல்லூரி காலம் மலரும் நினைவுகளாக மலர்ந்தது.

இந்த முயற்சி எடுத்த கல்லூரி நிர்வாகத்தினையும், இப்படி ஒரு ஐடியா கொடுத்த ஆசிரியர்களுக்கும், அதை செயல்படுத்த உதவியாக இருந்த மாணவர்களையும் வெகுவாக பாரட்டினார்கள்.

இதிலும் சில குழு விளையாட்டுகள், வேறு சில திறமைகள் எல்லாம் சொல்லப்பட , அதில் எல்லா ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் கலந்து கொண்டு தங்கள் திரமைகள வெளிக் கொணர்ந்தனர்.

ஒவ்வொரு பிரிவாக ஆர்மபித்து அனைதும் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் தான் ஆண்டுவிழாவின் முக்கிய நிகழ்ச்சி.. . நேசம் அடுத்த கட்டததை நோக்கி நகர்ந்ததா .. என்று பார்க்கலாம்.

ஹாய் பிரெண்ட்ஸ்..

கொஞ்சம் health ப்ரோன்லம்.. அதோடு வீட்டிலே guest.. சோ இந்த வாரம் ஒரு பக்க அப்டேட்தான் கொடுத்து இருக்கிறேன்.. ப்ளீஸ் அடஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க. நெக்ஸ்ட் வீக் பெரிய அப்டேட் கொடுக்க முயற்சி செய்கிறேன். நன்றி

 

தொடரும்!

Episode # 29

Episode # 31

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.