Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.50 (2 Votes)
கடலோடு முகில் பிரியும் - பகுதி 04 (கதையை தொடரவும்) - 4.5 out of 5 based on 2 votes
Pin It

கடலோடு முகில் பிரியும் - பகுதி 4 (கதையை தொடரவும்)

 

பகுதி - 4

ல்லா பகுதியையும் கண்டு முடித்தப் பின் மாலதியும் மற்ற மாணவியரும் மேலும் சில போடோக்களும் குறிப்புகளும் எடுக்க விரும்பினர். அவர்களை அனுப்பி விட்டு சுமதி அந்த பூங்காவின் வெளியில் ஒரு மரத்தின் நிழலில் இருந்த ஒரு சிறிய பெஞ்சில் அமர்ந்தாள். வழக்கம் போல் தேவை இல்லாத நினைவுகள் வர தொடங்கின. இதே ஊரில் ஆறு மாதங்கள் வாழ்ந்த போதும், அப்போது அவள் இந்த பூங்காவிற்கு வந்தது இல்லை. அவளின் கணவனின் தங்கை கவிதாவிற்கு இந்த பூங்கா மிகவும் பிடிக்கும். என்றுமே கவிதாவோ ஸ்வர்ணாவோ அவளுடன் நெருங்கி பழகியதில்லை. அவர்கள் இருவரும் அவளை வெறுத்தனர் என்பது ஒன்றும் அறிய முடியாத ரகசியம் அல்ல. அவர்களின் அந்த வெறுப்பிற்கான காரணத்தை அறிந்திருந்ததால், சுமதி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணவனின் உதவியோடு அவர்கள் இருவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாம் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அவளின் ஆசைகள் எல்லாமே மணல் கோபுரம் போல் கலைந்து தான் போனது.. அவளின் கணவனுக்கே அவள் மீது உண்மையான அன்பு இல்லை.. அருண் மீது சுமதி முழு நம்பிக்கை வைத்திருந்தாள் ஆனால் அவன் அவளை ஏமாற்றிவிட்டான்...

அருண் ஏன் இன்னும் அந்த சுபாஷினியை திருமணம் செய்துக் கொள்ளவில்லை? ஒருவேளை விவாகரத்துக்காக காத்திருக்கிறார்களோ? ஒருவேளை அது தான் இந்த பயணமே அதற்கு தானோ? ஆனால் இதற்கு நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது அவள் இங்கே வர வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏன் வந்தது? இதற்கு பதில் அவர்கள் யாரேனும் சென்னை வந்து வேண்டிய கையெழுத்தை வாங்கி சென்றிருக்கலாமே? ஒருவேளை அவர்களுக்கு இன்னமும் அவள் மீது நம்பிக்கை இல்லை போலும்... அவள் பெயரளவில் கூட அவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதை அவர்கள் யாரும் விரும்ப வில்லை போலும்... அருணுக்காக எந்த இடத்திலும் கையெழுத்து போட அவள் தயாராக இருந்தாள். அவளுக்கு அருண் மீதிருந்த அன்பு அப்படியே தான் இருந்தது... அவன் மகிழ்ச்சியோட வாழ வேண்டும் என்பதே அவளின் விருப்பமும்.

ருண் சுமதியை பார்த்த போது அவள் மரத்தடியில் அமர்ந்தபடி ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை பார்க்கையில் அவனுக்கு திருவிழாவில் பெற்றவரை தொலைத்து தேடும் குழந்தை போல் தோன்றியது.. அவளை முதல் முதல் பார்த்த போது இருந்த அதே தோற்றம்.... அவனின் மனதில் வலித்தது. அவளுக்கு பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டான்.... அணிந்திருந்த மெல்லிய சிவப்பு சேலையில் சுமதி அவன் கண்களுக்கு எப்போதும் போல் தேவதையாக தோன்றினாள். மோனாலிஸா புன்னகை போல், சுமதியின் முகத்தில் படிந்திருந்த மெல்லிய கவலை ரேகையும் கூட அவளுக்கு அழகையே சேர்த்தது. அன்று மட்டும் அல்ல... இன்றும் கூட அவள் தான் அவன் மனதில் குடி கொண்டிருப்பவள்... இதை அவள் நம்புவது கடினம் தான். காற்றில் சுமதியின் நெற்றியில் ஒரு சிறிய கற்றை மூடி வந்து விழுந்தது.. ஆனால் அதை அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் நெற்றியில் விழுந்த கற்றையை விலக்கி விட வேண்டும் என்று எழுந்த ஆவலை கட்டுபடுத்த அவன் மிகுந்த பாடு பட வேண்டி இருந்தது. தன்னை தானே கட்டு படுத்துபவன் போல் தன கைகளை பேன்ட் பாக்கெட் உள் விட்டுக் கொண்டான். ஆனாலும் அவன் கண்களை அவளிடம் இருந்து... அவனின் மனைவியிடம் இருந்து.... அவனால் அகற்ற முடியவில்லை...

கார்த்திக் சுமதியிடம் பேசி மாலதி பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினான். மாலதி அவனை கவனித்ததாக கூட தெரியவில்லை. அவளின் கண்களுக்கு அங்கே இருந்த பூக்களும் செடிகளும் மட்டுமே தெரிந்தன. அவனும் சில மணி நேரங்களுக்கு முன்பு வரை அதே போல் தான் இருந்தான்! அவனுக்கு மாலதியை பற்றி அறிந்து கொள்ள மேலும் ஆவல் உண்டானது. சுமதி தான் தனக்கு உதவ முடியும் என்று முடிவு செய்தவனாய், மாலதி மற்றும் அவளின் மாணவிகளிடம், தான் அலுவலகத்தில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். பூங்காவின் வெளியில் சுமதி அமர்ந்திருப்பதை கண்டவன், அவள் அருகில் சென்று,

"ஹலோ" என்றான்.

திடீரென்று அருகில் கேட்ட குரலில் சற்று திடுக்கிட்ட சுமதி, கார்த்திக்கை காணவும், சமாளித்து புன்னகை புரிந்தாள்.

"சாரி... திடீர்னு வந்து பேசி உங்களை பயமுறுத்திட்டேனோ....." என்று அவள் பெயர் நினைவில் வராது சற்று தடுமாறினான்.

"ஹலோ கார்த்திக்.. என் பெயரை அதுக்குள்ள மறந்திட்டிங்களா? என் பெயர் சுமதி..."

"சாரிங்க... நான் இந்த் பெயரை எல்லாம் ஞாபகம் வச்சுக்கிற விஷயத்தில ரொம்ப மோசம்..."

"ம்ம்ம்ம் அப்படியா... ஆமாம் மத்தவங்க எல்லாம் எங்கே??"

"ஒ! மாலதியும் அவங்க ஸ்டுடென்ட்ஸ்சையும் கேட்கிறீங்களா? அவங்க இன்னும் பார்க்கை சுத்தி பார்த்துட்டு இருக்காங்க..."

"பரவாயில்லையே... தேவையான பெயரை எல்லாம் நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..." என்றால் சுமதி கேலி இழையோடிய குரலில்.

வெட்க சிரிப்பு சிரித்த கார்த்திக், தான் கேட்க வந்ததை எப்படி கேட்பது என்று புரியாது தயங்கினான். அவனுக்கு இது போன்ற அனுபவம் புதிது...

"என்கிட்டே ஏதாவது கேட்க வந்தீங்களா???" என்று அவனுக்கு உதவ முயன்றாள் சுமதி.

"ஆமாம்..." என்று இழுத்தான் கார்த்திக்.

கார்த்திக் கேட்க வந்ததை கேட்க தயங்குவதை கண்டு சுமதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. மாலதிக்கு இவன் மிகவும் ஏற்றவனாக இருப்பான் என்று அவளுக்கு தோன்றியது. அவனை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள விரும்பினாள்.

"ஏன் கார்த்திக்... நீங்க இங்க என்ன வேலை செய்றீங்க? இந்த கைடு வேலை மட்டும் இல்லைன்னு நினைக்கிறேன்..."

"இல்லைங்க... நான் கைடு எல்லாம் இல்லை.. சுந்தர் உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொன்னார். அதுக்காக தான் வந்தேன்... நானும் என்னோட டீமும் இங்க கிடைக்கிற சில அறிய மூலிகைகளை கொண்டு உயிர் காக்கிற மருந்து கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியில் ஈடு பட்டிருக்கிறோம்....அதோ இருக்கே அந்த பில்டிங்ல தான் நாங்க எங்க ஆராய்ச்சியை செய்துட்டு இருக்கோம்..." என்று அருகில் இருந்த ஒரு கட்டிடத்தை சுட்டி காட்டினான் கார்த்திக்.

தன் வேலையை பற்றி பேசும் போது அவன் வெகு இயல்பாக பேசுவதை கவனித்த படி அவன் சுட்டி காட்டிய திசையில் இருந்த கட்டிடத்தை பார்த்தாள் சுமதி. பின் தனிச்சை செயலாக பின் புறம் திரும்பி பார்த்தாள். வெகு நேரமாக யாரோ கவனிப்பதை போன்ற உணர்வு அவளுள் இருந்துக் கொண்டே இருந்தது. அங்கே சற்று தொலைவில் அருண் இருப்பதை கண்டாள்... அவன் முகத்தில் கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது. அருனின் கோபம் பொங்கும் முகம் அவளை திகைக்க வைத்தது. அவளின் முக மாற்றத்தை கவனித்து திரும்பிய கார்த்திக், அருணை கண்டு உற்சாகமாக கை அசைத்தான். அருணை கண்டதில் கார்த்திக்கின் முகம் மகிழ்ச்சியை காட்டியது.

"ஹலோ அருண்! என்ன அதிசயமா இந்த பக்கம்?"" என்றான் கார்த்திக், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த அருணை பார்த்து.

"ஹலோ கார்த்திக்" என்றான் அருண், தன்னை கட்டுபடுத்த முயன்ற படி. சுமதி வேறொருவனுடன் சுமுகமாக பேசுவதை அவனால் தாங்க முடியவில்லை. அவர்கள் பேசியது அவனுக்கு கேட்கவில்லை என்ற போதும், அவளின் முக மாற்றங்களை கண்டே கார்த்திகை அங்கு சந்தித்து பேசுவதில் அவளுக்கு மகிழ்ச்சியே என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனின் மனதில் இருந்த காதல், பொறாமை தீயாக உருமாறி எரிய தொடங்கியது!

ஆனால், கார்த்திக்கிற்கு அருணிடம் எந்த மாற்றமும் தெரிய வில்லை. அவன் மனம் முழுவதும் மாலதியை சுற்றி கொண்டிருந்ததால், அருணின் மாறுபட்ட முக பாவம் அவன் கண்களுக்கு படவில்லை போலும்.

"என்ன கார்த்திக், இந்த நேரத்தில் இங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?" என்றா அருண், சமனப் பட்டு விட்ட குரலில்.

"சுந்தர் இங்க சுத்தி பார்க்க வந்திருக்கிற ஸ்டுடென்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்ண சொன்னார்.. அதுக்காக தான் வந்தேன்... ம்ம்ம்... அப்புறம் இவங்க சுமதி... இவங்களும் அவங்க கூட தான் வந்திருக்காங்க...."

"ஓஹோ... ஆனால் மத்தவங்க எல்லாம் எங்க?"

"மீதி எல்லோரும் உள்ளே பார்க்ல இருக்காங்க... பசங்க எல்லாம் அவங்க மேடம் போலவே ரொம்ப படிப்புல ஆர்வம் உள்ளவங்க போல..."

"அது சரி அப்போ இந்த மேடம் இங்கே தனியா என்ன செஞ்சுட்டு இருக்காங்க? நான் ஒன்னும் உங்க ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்ணலையே?" என்றான் அருண். சிறிது அழுத்தத்தோடு இருவரையும் குறிபிட்டது மட்டும் அல்லாது, சுமதியின் பக்கம் கண்டிப்பது போல் ஒரு மின்னல் பார்வையும் செலுத்தினான் அருண்.

அருணின் கோபத்திற்கான காரணம் புரியாவிட்டாலும், அவனுக்கு தன மீது தான் கோபம் என்பதை சுமதி புரிந்துக் கொண்டாள். அவனின் கோபம் அவளை மிகவும் பாதித்தது. அவனை இவ்வளவு கோபமாக அவள் பார்த்ததே இல்லை. அவளின் குழப்பத்தை அதிகரிப்பது போல் அவன் பேசியது மட்டும் அல்லாது, அவளை கண்டிக்கும் பார்வை வேறு அவளை கலக்கியது!

அவள் தனக்குள் குழம்பி கொண்டிருந்த போது, கார்த்திக் அருணிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தான். அருணின் பார்வை அவள் பக்கம் திரும்பியது... கார்த்திக் என்ன சொன்னான்? அவள் காதுகளில் ஒரு வார்த்தையும் விழ வில்லையே... அவள் மேலும் குழம்பி தவிக்கையில், அருணின் பார்வை அவளை மேலும் பாதித்தது. அவளை ஏதோ கண்களாலே விழுங்கி விட விரும்புவன் போல் அவன் பார்த்த பார்வை அவள் நான்கு ஆண்டுகளாக முயன்று சமனப் படுத்தியிருந்த மனதை கட்டுப்பாடு இழக்க செய்தது. பெரு முயற்சி செய்து, கார்த்திக் பக்கம் திரும்பியவள்,

"சரி கார்த்திக்... உங்க ரெண்டு பேருக்கு பேச நிறைய விஷயம் இருக்கும்.. நான் போய் மாலதியை பார்க்க போறேன்..."

"சரி... ஆனால்.. இங்கேயிருந்து வேற எந்த இடம் பார்க்க போறீங்க?" என்றான் கர்ர்த்திக் சற்று அவசரமாக.

"இன்னைக்கு வேற எந்த பிளானும் இல்லை.. நாளைக்கு காலையிலே ஒரு மணி மாதிரி, பக்கத்தில இருக்கிற மலை அடிவாரம் போகலாம்னு இருக்கோம்.." என்றாள் சுமதி சிறு புன்னகையோடு.

"ஓ... ஓகே.. சரி பை..." என்றான் கார்த்திக் நன்றியோடு. அவன் விரும்பிய சிறு தகவல் கிடைத்த மகிழ்ச்சி அவனுக்கு.

ஆனால் அருகில் நின்ற அருணுக்கு இது எதுவும் ரசிக்க வில்லை. நாளை அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று கார்த்திக்கிற்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன? அதை சுமதி அவனுக்கு சொல்ல வேண்டிய அவசியமும் என்ன... அதுவும் இப்படி இளித்துக் கொண்டு.... அது மட்டும் அல்லாது சுமதி அவனை திரும்பியும் பாராது சென்றது அவனை மிகவும் பாதித்தது.. ஒரு 'பை' சொல்ல வில்லையே... மனதில் எதோ எரிவது போல் இருந்தது. அவள் அருகில் இருக்கும் போது சாதாரணமாக நடந்துக் கொள்ள அவன் மிகவும் பாடு பட வேண்டி இருந்தது....மனம் கட்டுக்கடங்காமல் அலை பாய்ந்தது... என்ன இருந்தாலும் அவள் இன்னும் என் மனைவி தானே......

வர்கள் அனைவரும் மீண்டும் பங்களாவை அடைந்த போது வனஜா அவர்களை அன்புடன் வரவேற்றாள். வனஜாவை தவிர அவர்களுக்கு உதவ என்று ஸ்வர்ணா மேலும் இருவரை அங்கே அனுப்பி இருந்தார்கள். சமையல் அறையில் இருந்து வந்த வாசம் மூக்கை துளைத்தது. முகம் கழுவி, உடை மாற்றி வந்து, அன்றைய சிற்றுண்டியான பக்கோடாவை உண்டனர். பின் மாணவிகள் தங்களுக்குள் விளையாட தொடங்க, மாலதியும், சுமதியும், தங்கள் அறைக்கு வந்தார்கள். மாலதி அன்று பூங்காவில் தான் கிறுக்கலாக எடுத்திருந்த குறிப்புகளை, வேறொரு நோட் புக்கில் அழகாக எழுத தொடங்கினாள். தோழியை தொந்தரவு செய்யாது, சுமதி அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த போதும், அருண் பார்த்த பார்வை மீண்டும் மீண்டும் அவளுக்கு நினைவில் வந்தது. அருணை மீண்டும் தனிமையில் சந்திப்பதை பற்றி எண்ணவே அவளுக்கு இப்போது கலக்கமாக இருந்தது. ஏன் பைத்தியக்காரதனமாக இந்த டூருக்கு வர சம்மதித்தேன் என்று அவள் மீதே அவளுக்கு கோபமாக வந்தது. உண்மையில் அவள் இங்கு வந்தது அருணை மீண்டும் பார்க்கும் ஆவலில் தான் என்பது அவள் அடி மனதில் புதைந்து இருக்கும் மற்றும் ஒரு உண்மை. ஆனால் அவனுக்கு தான் இந்த நாலு வருடங்களில் அவளை பற்றி அக்கறை எதுவும் இருக்க வில்லை. இவ்வளவு பணம் இருக்கும் போது, இந்த உலகில் ஒருவரை தேடி கண்டு பிடிப்பது அவ்வளவு கடினமா என்ன? அதுவும் அவள் ஒன்று எங்கேயோ சென்று ஒளிந்து வாழவும் இல்லை.. அவள் இன்றும் அருணை தான் மனதார விரும்பினாள்... அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை... அருணை பொறுத்த வரை அது போன்ற உணர்வுகள் எதுவும் இல்லை போலும்... ஆனால் அவன் ஏன் காலையில் அப்படி தலைதெறிக்க ஓடி வர வேண்டும்? தன் எண்ண ஓட்டத்தில் இருந்து தன்னை தானே விடுவிப்பவள் போல் தலையை சிலுப்பி கொண்டாள் சுமதி!

நிமிர்ந்து பார்த்தவள், மாலதி மும்முரமாக தன் வேலையில் ஈடுபட்டிருப்பதை கண்டாள். புன்சிரிப்போடு, தோழியின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளை நோக்கி திரும்பி பார்த்த மாலதியின் முகத்தில் கேள்வி இருந்தது.

"மாலு இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே எழுதிட்டு இருக்க போற? நீ ஸ்டுடென்ட்ட்டா லெக்சரரான்னு எனக்கே அப்போ அப்போ மறந்து போகுது..."

"சுமி, ஸ்டுடென்ட்ட்டா இருக்கிறது ஈசி ...லெக்சரரா வேலை செய்றது தான் கஷ்டம்... அவங்க அவங்க துறையில எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கனும்... அது மட்டும் இல்லை... பொதுவா அறிவை வளர்த்துக்குறதுக்கு எல்லை எல்லாம் எதுவும் கிடையாது...." என்றாள் மாலதி தன் வழக்கமான புன்னகையோடு.

புன்னகை ததும்பும் தோழியின் முகத்தை பார்த்தவள்,
"மாலு இப்படி சிரிக்கும் போது நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?" என்றாள் சுமதி.

"சுமி... இப்போ இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்... எனக்கு நிறைய வேலை இருக்கு...." என்றபடி மீண்டும் தன் குறிப்புகள் பக்கம் திரும்பினாள் மாலதி.

சுமதி மாலதியின் கையில் இருந்த குறிப்புகளையும், நோட் புக்கையும் வாங்கி மூடினாள்.

"ஹே சுமி... ப்ளீஸ்... உனக்கு என்ன ஆச்சு? அதை என்கிட்டே கொடு...."

"இல்லை மேடம்.. நான் இப்போ உங்ககிட்ட பேசனும்.. சோ அதனால இதுக்கு மேல இந்த எழுதுற வேலை எல்லாம் இல்லை சரியா?"

"அது என்ன அப்படி பட்ட முக்கியமான விஷயம்???" என்றாள் மாலதி சிறிது ஆர்வத்துடன்.

"ஏன் மாலு நீ கார்த்திக் பத்தி என்ன நினைக்குற? " என்றாள் சுமதி, மாலதியின் முகத்தையே நோக்கிய படி.

"கார்த்திக்??? யார் அது???" என்றாள் மாலதி சற்று குழப்பத்துடன்.

மாலதியின் இந்த கேள்வியில் சுமதி பெரிதாய் அதிர்சியாகிவிடவில்லை. அவளுக்கு மாலதியை பற்றி நன்கு தெரியும். ஆனால் மாலதி கார்த்திக் பற்றி அறிந்துக் கொள்வது முக்கியம் என்று எண்ணியவளாய்,
"கார்த்திக்... மாலு... இன்னைக்கு அந்த பார்க்கில எல்லாம் எக்ஸ்ப்ளைன் செஞ்சாரே...."

"ஓ! அவர் பெயர் கார்த்திக் இல்லை... எனக்கு மறந்தே போச்சு... ஆனால் அவருக்கு என்ன???"

"பெரிசா ஒன்னும் இல்லை... அவர் இங்கே எதோ செடி கொடில ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்காராம் உனக்கு தெரியுமா?"

மாலதியின் முகத்தில் சற்று ஆர்வம் தோன்றியது.

"நிஜமாகவா? நீ ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை? எனக்கு தெரியவே தெரியாதுப்பா..அவர்கிட்ட அதை பத்தி பேசி இன்னும் நிறைய தகவல் வாங்கி இருக்கலாமே...."

"எனக்கே லேட்டா தான் தெரியும் மேடம்... இப்போ மட்டும் என்ன? நாம எப்போ வேணா அவரை பார்த்து பேசலாம்.. ஆமாம் மாலு உனக்கும் இந்த ரிசெர்ச்ல இன்டிரெஸ்ட் இருக்கு தானே?"

"ஆமாம் சுமி... நாம இந்த கார்திக்க முடிஞ்சா நாளைக்கு மீட் பண்ணலாமா?"

"கட்டாயமா...." என்றாள் சுமதி மகிழ்ச்சியுடன்.

"அது இருக்கட்டும் மாலு... இப்போ ரொம்ப போர் அடிக்குது... வா நாம ரெண்டு பெரும் தோட்டத்தில ஒரு 30 நிமிஷம் அப்படியே நடந்துட்டு வரலாம்..."

"சுமி... சுமி... ப்ளீஸ் டா... இன்னைக்கு ஒரு நாள் நீ மட்டும் போ... நான் இந்த நோட்ஸ் எல்லாம் முடிச்சுடுவேன்... நாளைல இருந்து நானும் வரேன்... ப்ளீஸ் டா...."

செல்லமாக கெஞ்சிய, தோழியின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு தனியாக தோட்டத்திற்கு சென்றாள் சுமதி.

தோட்டத்திற்கு வந்த பின் தான் இப்படி தனியே அங்கே வந்தது பெரிய பிசகு என்று சுமதிக்கு தோன்றியது. மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வந்து அவளை திக்குமுக்காட செய்தன. வழக்கம் போல் தன் பழைய நினைவுகளில் இருந்து மீள மாலதியை பற்றி எண்ண தொடங்கினாள் சுமதி. கார்த்திக் மாலதிக்கு ஏற்ற துணையாக இருப்பான் என்று அவளுக்கு தோன்றியது. அவர்கள் இருவருக்கும் பொதுவாக தாவரவியல் துறையில் ஆர்வமும் இருந்தது... ஆனால் கார்த்திக் குறித்து தனக்கே எதுவும் தெரியாது என்பது சுமதிக்கு நினைவில் வந்தது.... எப்படி அவனை குறித்து விபரங்கள் அறிவது?

இதற்கிடையில் மற்றுமொரு எண்ணம் தோன்றி அவளை கலங்கடித்தது. ஒருவேளை அவளின் எண்ணம் போல் எல்லாம் நடந்து மாலதியும் கார்த்திக்கும் திருமணம் செய்துக் கொண்டால்... அவர்கள் இங்கே தானே வசிப்பார்கள்... அப்படி என்றால் அவள் அவளின் உயிர் தோழியை விருப்பம் போல் வந்து சந்திக்க முடியாது... மாலதிக்காக கூட, அருணை அவனின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்திக்க அவளால் முடியாது...

அருகில் கேட்ட காலடி சத்தம் கேட்டு, கலைந்து, திரும்பி பார்த்தவள், கவிதா தன்னை நோக்கி நடந்து வருவதை கண்டாள். கவிதா அவளை கண்டு புன்னகைத்தாள். சற்று திகைத்த போதும் பதிலுக்கு புன்னகைத்தாள் சுமதி. அவளுக்கு அருண் மீது தான் வருத்தமே அல்லாது கவிதாவின் மீது எந்த கோபமும் இல்லை.

"எப்படி இருக்கீங்க அண்ணி...." என்றாள் கவிதா அவளின் இனிமையான குரலில்.

சுமதி மீண்டும் திடுக்கிட்டு தான் போனாள். இன்றைய அதிர்ச்சிகளுக்கு முடிவே இல்லை போலும்! அவள் இங்கே கவிதாவின் அண்ணனின் மனைவியாக வாழ்ந்த காலத்தில் கூட கவிதா அவளை இப்படி உறவு முறை கொண்டு அழைத்ததே இல்லை.. இப்போது என்ன? கேள்வியாக கவிதாவை நோக்கினாள் சுமதி.

சுமதியின் எண்ண ஓட்டத்தை அறிந்துக் கொண்டவள் போல் சற்று முகம் கன்றிய போதும், சுமதியிடம் விளக்க முயன்றாள் கவிதா.

"சாரி அண்ணி... நாலு வருஷம் முன்னாடி நான் சின்ன பொண்ணு தானே...இந்த கணவன் மனைவி உறவு பத்தி எல்லாம் அவ்வளவா புரியலை... இப்போ எனக்கு கல்யாணம் ஆன பிறகு தான் எனக்கு எல்லாம் புரியுது... நாலு வருஷம் முன்னாடி நடந்ததிலே இருக்கிற என்னோட பங்குக்கு என்னை மன்னிச்சுக்கோங்க அண்ணி..."

மன்னிப்பு... இந்த ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்ற முடியுமா? இந்த வார்த்தை அவள் வாழ்க்கையை பின்னோக்கி கொண்டு சென்று... நடந்தவை அனைத்தையும் மாற்ற முடியுமா? ஆனால் சுமதிக்கு கவிதாவை நோகடிக்க மனம் வரவில்லை. கவிதா சொல்வதும் உண்மையே... கவிதாவிற்கு அப்போது 19 வயது தான்... மேலும் அவளுக்கு கவிதா மீது பெரிதாக கோபமும் இல்லை.... எனவே அமைதியான குரலில்,

"பழைய விஷயங்களை பேச வேண்டாமே..." என்றாள் சுமதி.

அவள் வாக்கியத்தின் முடிவில் இருந்த தயக்கத்தை கவனித்த கவிதா,
"என்னை கவிதான்னு கூப்பிடுங்க இல்லை கவின்னு கூப்பிடுங்க அண்ணி...." என்றாள்.

"இல்லை அது நல்லா இருக்காது... நான் இங்கே ஒரு டூரிஸ்ட்டா தான் வந்து இருக்கேன்... பெயர் எல்லாம் சொல்லி பேசினால் நல்லா இருக்காது.... நீ.. நீங்களும் என்னை இப்படி அண்ணின்னு அடுத்தவங்க முன்னாடி கூப்பிடாமால் இருப்பது நல்லது..."

"சரி அண்ணி... எனக்கு புரியுது... ஆனால் ப்ளீஸ் என்னை இப்படி நீங்க வாங்கன்னு கூப்பிடாதீங்க.... நானும் உங்களை மத்தவங்க முன்னாடி சுமதின்னு கூப்பிடவா? நீங்க என்னை விட ரெண்டு வருஷம் தானே பெரியவங்க??? மத்தவங்க நாம இப்போ பிரெண்ட்ஸ் ஆகி விட்டதா நினைச்சுப்பாங்க..."

சுமதி சரி என்று ஒத்துக் கொண்டாள்.

கவிதா அவளிடம் கடந்த நான்கு வருடங்களை குறித்து கேள்விகளாய் கேட்டு துளைத்து எடுத்தாள். மறைக்க எதுவும் இல்லாததால் சுமதியும் பொறுமையாக பதில் சொன்னாள்.

"உங்களை காப்பாத்தி பத்திரமா பார்த்துக் கிட்டதுக்கு உங்க பிரெண்ட் மாலதிக்கு நாம எல்லோரும் கடமை பட்டிருக்கோம் அண்ணி..."

மாலதி பெயர் கேட்டதும், சுமதிக்கு கார்த்திக் நினைவு வந்தது. கார்த்திக் குறித்து கவிதாவிடம் கேட்டு அறிந்து கொள்ள விரும்பினாள் சுமதி.

"கவிதா.. இங்கே கார்த்திக்கின் ஒருத்தர் ரிசர்ச் செஞ்சுட்டு இருக்காரே அவரை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"கார்த்திக்???" என்றாள் கவிதா சிறிது அதிர்ச்சியாக.

"ஆமாம் கவிதா... எனக்கு அவரை பத்தி கொஞ்சம் விபரம் தெரியனும்... ஆனால் உனக்கு ஏன் இந்த ஷாக்?"

"அண்ணி உங்களுக்கு நிஜமாகவே தெரியலையா? இல்லை மறந்திட்டீங்களா?"

"என்ன?"

"ஓ! உங்களுக்கு தெரியாதோ... கொஞ்சம் நாளுக்கு முன்னாடி வரை இந்த கார்த்திக்கை தான் நான் கல்யாணம் செஞ்சுக்குறதா இருந்தது... உங்களுக்கு அது பத்தி தெரியும் தானே?"

இப்போது அதிர்ச்சியாவது சுமதியின் முறையானது. அப்படி என்றால் கார்த்திக் சுபாஷினியின் அண்ணனா?

அன்று சுபாஷினி அவளிடம் சொன்னது மீண்டும் காதில் ஒலித்தது.
"எத்தனையோ வருஷம் முன்னாடியே என் அண்ணன் கவியை கல்யாணம் செஞ்சுக்குறதுன்னும், அருண் என்னை கல்யாணாம் செஞ்சுக்குறதுன்னும் பெரியவங்க முடிவு செஞ்சு வச்சிருந்தாங்க...ஆனால் இப்போ எங்கேயோ இருந்து நடுவில வந்து நீ எல்லா திட்டத்தையும் கெடுத்துட்ட... அது மட்டும் இல்லாமல் அருணோட காதலையும், வாழ்க்கையையும் குழி தோண்டி புதைச்சுட்ட...."

அப்படி என்றால் கார்த்திக் சுபாஷினியின் சகோதரன்... கவிதாவை மணப்பதாக இருந்தவன்.... அப்படி என்றால் சுந்தர் யார்? கவிதா ஏன் கார்த்திக்கை மணக்க வில்லை?

தொடரும் 

Check out the last part Part 3 here 

Check out the next part Episode 5 here 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# niceKiruthika 2016-06-03 17:41
(y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top