Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.25 (8 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 08 - 4.3 out of 5 based on 8 votes

8. மனம் விரும்புதே உன்னை...

Manam Virumbuthey unnai

"ன்ன வீணா இது..." என்று ஏதோ சொல்ல தொடங்கிய இந்து, காரின் ஜன்னல் தட்ட படும் ஒலி கேட்டு திரும்பினாள். அங்கே நந்தினி ஒரு புன்னகையோடு நின்றிருந்தாள். நந்தினியை அங்கே பார்த்ததில் இந்து சிறிது திகைத்து தான் போனாள். இருப்பினும், கார் கதவை திறந்து என்ன என்பதை போல் பார்த்தாள். நந்தினியிடம் பேச அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. அதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக நந்தினியின் விழிகளில் ஒரு மின்னல் வெட்டி மறைந்த போதும், சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது என்று எண்ணியவள் போல்,

"என்ன எம்டி மேடம்... இந்த நேரத்தில இங்கே??? ஆபீஸ் வேலையெல்லாம் ரொம்ப மும்முரமா நடக்குது போல.... நீங்க ரொம்ப பிஸின்னு கேள்வி பட்டேன்... இப்போ தானே தெரியுது...." என்று சஞ்சீவ் சென்ற திசையை குறிப்பாய் கண்களில் காட்டிய படி கேட்டாள்.

அந்த குரலில் இருந்த கேலியோ ஏளனமோ கோபத்தை தூண்டிய போதும், அதை வெளிக் காட்டாது,

"இப்போ உங்களுக்கு என்ன வேணும்? நான் எங்கே போனாலும் ஆபீஸ்ல சொல்லிட்டு போகனும்ன்னு அவசியம் இல்லை... மத்த படி நான் லேட்டா வருவேன்னு ஆபீஸ்ல தெரிய வேண்டியவங்களுக்கு தெரியும்...." என்றாள் இந்து.

"ஹ்ம்ம்ம் அது சரி உங்களோட இந்த ரகசிய மீட்டிங் பத்தி உங்க அம்மாவுக்கு தெரியுமா????" என்று விடாது கேட்டாள் நந்தினி. மீண்டும் அதே தோணியில்!

அருகில் ஏற்பட்ட வேக அசைவில், வீணாவின் கோபத்தை புரிந்தவளாய், அவள் எதுவும் சொல்லும் முன் வீணாவின் இட கரத்தை அழுந்த பற்றி விட்டு,
"அதனால என்ன நந்தினி மேடம்... நீங்க தான் இப்போ பார்த்தாச்சு இல்லை... விஷயம் ஆட்டோமேட்டிக்கா எல்லோருக்கும் ஸ்ப்ரெட் ஆயிடும் தானே.." என்றாள்  இந்து அதே தோணியில்.

நந்தினி பதில் சொல்லும் முன் அவளே தொடர்ந்து,
"எனக்கு நிறைய வேலை இருக்கு மேடம்... நான் கிளம்புறேன்...." என்றபடி அவள் பதிலுக்கு காத்திராது கார் கதவை அறைந்து மூடினாள்.

அதற்காகவே காத்திருந்தது போல் வீணாவும் உடனே காரை கிளப்பினாள்.

ன்று அதன் பின் மற்ற விஷயங்களை நினைக்க இந்துவிற்கு நேரம் இருக்கவில்லை. அலுவலக வேலைகளில் மற்றவற்றை மறந்து போனாள். போர்டு மீட்டிங்கிற்கு நந்தினி வர போவதை அறிந்திருந்ததால் இன்னும் சற்று சிரத்தையுடனே தேவையான குறிப்புகளை நிலாவின் உதவியுடன் எடுத்து வைத்தாள். மறுநாள் காலையில் சஞ்சீவின் குறுஞ் செய்திக்கு பதில் அளிக்கவும் அவளுக்கு நேரம் இருக்கவில்லை. புதிதாக கிடைத்திருந்த டீல் குறித்து இருந்த சில சந்தேகங்களை அவள் அவர்களின் சட்ட பிரிவில் கேட்டு தீர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. நிலாவும் காலையில் முன்பாகவே வந்து விடுவதாக சொல்லி இருந்தாள். எனவே அவசர அவசரமாக கிளம்பி, அலுவலகம் வந்தடைந்தாள். அலுவலக நேரத்திற்கு முன்பே வந்து விட்டதால், வரவேற்ப்பறை வெறிச்சோடி இருந்தது. கண்களால் அதை பார்த்தபடி நடந்தவள், அங்கே சஞ்சீவை காணவும் திடுக்கிட்டு நின்றாள்.

"சாரி... ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்.. உங்க அதிர்ச்சியை பார்த்தால் உங்களுக்கு ஷாக் போல இருக்கு...."

"இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை... நான் உங்களை எதிர்பார்க்கலை..." என்றாள் இந்து சுதாரித்துக் கொண்டு.

"தெரியும்... உங்களுக்கு இன்னைக்கு போர்டு மீட்டிங்... உங்களை டிஸ்டர்ப் பண்ண ஆசை இல்லை... சும்மா பார்த்து விஷ் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்..." என்றான் அவன புன்சிரிப்போடு.

இந்துவின் மனதில் இருந்த பதற்றம், அழுத்தம் எல்லாம் மறைந்து போனது!

"தேங்க்ஸ்... ஆனால்... நான் சீக்கிரம் கிளம்பினது உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அது.... நீங்க ரிப்ளை அனுப்பலையா... என்னன்னு தெரியலை... உங்க செல்லுக்கு தானே போன் பண்ண மாட்டேன்னு சொன்னேன்... உங்க லேன்ட் லைன் நம்பருக்கு போன் போட்டேன்... உங்க கனகா தான் சொன்னாங்க நீங்க இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டீங்கன்னு.... சரி உங்களை நேரா பார்த்து ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்ன்னு தோணிச்சு..."

இந்துவிற்கு நிஜமாகவே மகிழ்ச்சியாக இருந்தது... அகத்தை முகம் காட்டிய போதும், என்ன பதில் சொல்வது என்று அவள் சற்று தடுமாறினாள். அவளின் முக மலர்ச்சியிலே புரிந்துக் கொண்டவனாய்,

"சரி இதுக்கு மேல உங்க டைம வேஸ்ட் பண்ண விரும்பலை... யூ கேரி ஆன்... நானும் வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு ஹாஸ்பிட்டல் போகனும்...."

"ரொம்ப தேங்க்ஸ் சஞ்சீவ்....."

அவளை முகத்தை உற்று நோக்கி, அவள் முகத்தை சிவக்க வைத்தவன்,
"ம்ம்ம்ம்.. அப்புறம் நாளைக்கு ஒரு நாலு மணிக்கு நான் உங்களை உங்க வீட்டில பிக் அப் பண்ணவா???" என்றான் பட்டு போன்ற மிருதுவான குரலில்.

சரி என தலை அசைத்தவள்,
"ஆனால்....." என்று கேட்க வந்ததை முடிக்க முடியாது தயங்கினாள்.

"இல்லை நான் கார் தான் எடுத்துட்டு வருவேன் கவலை படாதீங்க...."

அவள் கேட்காமாலே புரிந்து கொண்டு அவன் பதில் சொன்னதில் மனம் பூரித்த போதும், இவன் முன் ஏன் இப்படி தடுமாறுகிறோம் என்று அவளுக்கே வியப்பாக இருந்தது.

"அப்புறம் கடைசியா ஒரே ஒரு கேள்வி...." என்றான் சஞ்சீவ்.

"சொல்லுங்க...."

"என்னோட நிக் நேம் எல்லாம் தெரிஞ்சுக்கிடீங்க... உங்க நிக் நேம் என்னன்னு எனக்கு சொல்லலாம் தானே???"

"ம்ம்... ரஞ்சனி கிட்ட தான் எல்லா ரகசியத்தையும் சொல்லனும்னு தெரியுது.... ஆனால் என்ன பண்றது சஞ்சீவ்... யாரும் எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் எனக்கு அப்படி நேம் எல்லாம் வச்சது இல்லை...." என்றாள் அவள் சிறிது தெளிந்து விட்ட குரலில்.

"சும்மா சொல்லாதீங்க...."

"இல்லை நிஜமாகவே தான்...."

"சரி அப்போ நானே உங்களுக்கு ஒரு நிக் நேம் வைக்கிறேன்..."

"என்ன????"

"நானும் யோசிக்கனும்... பேர் செலக்ட் பண்ணிட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்றேன்... சரி நான் கிளம்புறேன்... உங்க டைம இதுக்கு மேல வேஸ்ட் பண்ண கூடாது.... பை... ஆல் தி பெஸ்ட்... சி யூ டுமார்ரோ............."

"பை...."

அவன் கிளம்பி சென்ற பின்னும் மனம் லேசாகவே இருந்தது... நேற்று முதல் இருந்த டென்ஷன் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது. முகத்தில் புன்சிரிப்பு ஒன்று கோந்து போட்டது போல் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போது மட்டும் அல்லாது அன்று முழுவதுமே அவள் முகம் மலர்ச்சியுடனே தான் இருந்தது.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# SuperKiruthika 2016-08-08 17:24
Nice Update ..
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 08Thenmozhi 2012-05-01 01:38
Guys, there is a small delay in posting the next episode... Will try to post it by tomorrow evening...

Apologies for the delay...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 08Manjula 2012-04-16 10:26
Hey Aadhi, One ques. Why is that Veena and Indhu hiding their textile shop visit to Geetha? I can't understand that part.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 08Thenmozhi 2012-04-17 04:43
Hi Manjula,
They both went to buy gift for Geetha and that's why they are hiding it from her :-)
I thought it's obvious, that's why didn't mention it explicitly... Sorry :sad:

Quoting Manjula:
Hey Aadhi, One ques. Why is that Veena and Indhu hiding their textile shop visit to Geetha? I can't understand that part.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 08Kamal 2012-04-16 00:48
Good one Aadhi
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 08Nanthini 2012-04-13 19:51
I like this one a lot Aadhi. So is Sanjeev really going to propose in the next episode????

And is Kanchana by some way aware of the happenings?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 08Admin 2012-04-13 01:52
Super situation song Aadhi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top