(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 07 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

Hello chillzee-mates.... I'm very sorry for the short update.. seven and half saturn effect-uh enna nu therila... last 10 days uh udambu romba paduthudhu... adhan... next update enjoyable uh tharen for sure :) thanks for your support.. Take care...

லோ மிஸ்... எவ்வளோ முறை கேட்கறேன்.. உன் பேரை சொல்லிட்டு போகறது..! எல்லாம் திமிரு... அழகா இருக்கற திமிரு... ஒரு அழகான பையன் நம்ப பின்னாடியே வரானேங்கற திமிரு...”

விடாது காவ்யாவை துரத்தியவாறே உதய் புலம்ப... திரும்பி பார்த்து உதய்யை முறைத்துக்கொண்டே சென்றாள் காவ்யா, முகத்தில் முளைத்த கடுப்புடன்.

முதலில் அவன் அவளை தான் பின்தொடர்வதாக நினைத்தவள், தனது கோபமான பேச்சால் அவனை எட்ட நிருத்த முயற்சித்தாள். பின், அவனும் நிஜமாகவே கேக் வாங்க தான் வந்தான் என்றவுடன், கோபம் கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் அவன் விடாது அவளை துரத்துவது கண்டு எரிச்சல் பயங்கரமாக கிளம்பியது...

‘இங்கேர்ந்து போகறதுக்குள்ள இவனை ஏதாவது பண்ணனும்.. என்ன பண்ணலாம்..?!’ என்ற யோசனைக்குள் புகுந்து விட்ட காவ்யா, கேக்குடன் தாரா அருகில் உதய்யை முறைத்துக்கொண்டே தன்னை மறந்து நிற்க, அவளை கடந்து செல்லும் நொடிகளில் உதய் காவ்யாவின் காதருகில், “உன் பேர் கேட்க ஆசைதான்...”என்று பாடிவிட்டு சென்றான்.

திடுக்கிட்ட காவ்யா நினைவுக்கு வர, இசைக்குழு ஒலிக்கவிட்ட பிறந்தநாள் பாடலும் கேட்க, தாராவின் கவனம் இவள் பக்கம் திரும்பியது. காவ்யாவும் கொண்டாட்டத்தில் மூழ்கிவிட்டாள்.

இதில் ‘காவ்யா’என்று தாரா அழைத்ததை காவ்யா கவனிக்காமல் விட, உதய்யின் கவனத்தில் விழுந்து, ஏனோ மனத்திலும் பதிந்துவிட்டது.!!

ந்த ப்ரௌன் நிறக் கண்களையும், மாதுளை மொட்டு நிற இதழ்களையும் கொண்ட, தாரா என்னும் நட்சத்திரத்தை தேடிக்கொண்டே இருந்தான் ககன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது அவளைக் கண்டு. இந்த ஹாலிலேயே தான் இருக்கிறாள் என்று உணர முடிகிறது. ஆனாலும் பார்வையில் படவில்லை. உதய்யிடம் கேட்டிருந்தால் அவளும் காவ்யாவும் இருக்கும் இடத்தை சரியாக கூறி இருப்பான். குறைந்தது, உதய்யின் பார்வையை கவனித்திருந்தாலாவது ககனுக்கே தெரிந்திருக்கும். ஆனால் ககனின் எண்ணமும் செயலும் அவனுக்கே கட்டுப்படாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இதில் உதய்யை எங்கே கவனிப்பது..! அவனிடம் கூறினால் சிக்னலில் பார்த்த பெண்ணையும் இந்தப் பெண்ணையும் பற்றி கிண்டல் அடித்தே கொன்றுவிடுவான். அதோடு, இவனுக்கே வெளியே கூற ஒரு மாதிரி இருந்தது.

முகம் காணவில்லை என்றாலும், சிக்னல் பெண்ணும் இவனை கவர்ந்தாள்... இப்பொழுது இந்த பெண்ணும் இவனின் நினைவுகளில் நிற்கிறாள் என்றால்... அவனை பற்றிய எண்ணம் அவனுக்கே குறையும் பொழுது, உதய்யை பற்றி கேட்கவா வேண்டும் என்ற எண்ணம்.! இதில் உதய்யும் அமைதியாக இருந்தது, ககனின் கருத்தில் படவில்லை.

நண்பர்கள் இருவரும் அவர்களின் ஹோட்டலில் நடந்து கொண்டிருந்த மிகப் பெரிய விருந்தை, முக்கியாமாக அவர்களுக்காக ஏற்பாடாகியிருந்த விருந்தை பிறந்தநாள் கொண்டாட்டத்தை காரணம் காட்டி மறுத்துவிட்டு, இங்கே வந்து உணர்வு சுழலில் சிக்கி, உணவை கொறித்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு வழியாக ககனின் எண்ணப்போக்கு அவனுக்கே சலித்துவிட,  உதய்யின் தோளில் தட்டி, “வாடா உதி, போய் மாக்டைல் ஆர்டர் பண்ணிட்டு வரலாம்...”என்று அழைத்தான்.

“ஆமாம் டியுட்... எனக்கே இங்க போர் அடிக்கிது.. வா போய் ஆர்டர் பண்ணிட்டு அப்படியே கொஞ்சம் சைட் அடிச்சிட்டு வரலாம்...” என்று கிளம்பினான்.

ஒருவர் அறியாமல் மற்றொருவர் அவர்களின் எண்ணப் போக்கை அடக்கும் பொருட்டு அங்கும் இங்கும் சுற்ற ஆரம்பித்தனர், அந்த உணவகத்தினுல்லேயே..

ஒருவழியாக அலுத்து, சலித்து, கிண்டலடித்து ஓய்ந்து அங்கிருந்த மாக்டைல்(பலவகை ஜூஸ்களின் கலவை) கவுண்ட்டருக்கு சென்று வேண்டியதை ஆடர் அளித்துவிட்டு திரும்ப, அங்கு கண்ட காட்சியில் உதய் ஷாக் அடித்தாற்போல நின்றுவிட்டான்... அந்த நேரம் பார்த்து ககனுக்கு ஏதோ போன் வந்ததால் அவனும் கவனிக்காமல் நகர்ந்து சென்றுவிட்டான்.

 உதையின் கவனம் மொத்தமாக ஒரே இடத்தில் குவிய, அவன் தானாக அந்த இடத்திற்கு சென்றான்.

அங்கு... அவனை முறைத்து முறைத்து பார்த்த அந்தப் பெண், காவ்யா மற்றொரு பெண்ணுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தாள்.!

அதுவும் என்ன போட்டி..!? இருவரில் யார் அதிகமாக ஷாட்ஸ் (shots) எடுக்கிறார்கள் என்ற போட்டி..! சின்ன கண்ணாடி கோப்பையில்.. மிகவும் கொஞ்சமாக மது ஊற்றி அடுக்கி வைத்திருப்பார்கள். இருவரில் யார் துரிதமாக கோப்பைகளை காலி செய்கிறார்களோ அவரே வெற்றியாளர்..!

இப்பொழுது காவ்யாவும் மற்றொரு பெண்ணும் போட்டி போட்டுக்கொண்டிருக்க, முடிவில் காவ்யாவே வென்றாள்..!!

இதை எல்லாம் அருகினில் நின்று பார்த்துக்கொண்டிருந்த உதய், வாய் மேல் கை வைத்து நின்றுவிட்டான். ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்த காவ்யாவை, வேக வேகமாக பின் தொடர்ந்தான் உதய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.