(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 05 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மிர்தாவும் விக்ரமும் ஒன்றாக வருவதை பார்த்துக்கொண்டு இருந்த குடும்பத்தினர் ஐயா எனும் குரலை கேட்டு திரும்பினர்..

“ஐயா  உங்களை சங்கரஐயா குடும்பத்தோடு அவர் குடிலுக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.. வரீங்களா!.. போகலாம்” என ஒருவர் வந்து கூற, தாத்தாவோ

ம்ம்.. போகலாம்.. என்றவர்.. மித்ராவை அழைத்து,

“நீ அமிர்தாவையும் விக்ரமையும் அழைத்துக் கொண்டு வந்துடும்மா.. நாங்க முன்னால் போகிறோம்..”

“சரிங்க தாத்தா..”

“தாத்தா.. நானும் விக்ரம கூட்டிக்கிட்டு வரேன்” என புகழ் சொல்லவும் சரி என்று தன் குடும்பத்தினரை கூட்டிக்கொண்டு குடிலை நோக்கி விரைந்தார் தாத்தா..

மித்ரா அமிர்தாவை தேட, புகழ் மித்ராவிடம் அமிர்தா அமர்ந்திருந்த இடத்தை காட்டினான்.. அவள் காலில் அடி பட்டிருந்ததை கண்டு விரைவாக அவ்விடத்திற்கு சென்றவள்,

“அம்மு.. எப்படிடீ அடி பட்டுச்சி., கவனமா இருக்க மாட்டியா.. அறிவில்ல உனக்கு.. பார்த்து நடக்க தெரியாதா.. எப்ப பாத்தாலும் எதாவது காயம் பண்ணிக்கிட்டு அழுவறது..” என திட்டிக்கொண்டே போக அமிர்தாவோ அவள் திட்டுவதை ரசித்துக் கொண்டிருந்தாள்..

“சோ, அமிர்தா தான் உன் உயிர்தோழி அம்மு அப்படிதான மித்து..” என புகழ் கேட்க,

ஆமாம் என தலையசைத்தாள். அதைக்கண்டு அவன் பலவாறு யோசித்தான்..

“சங்கு இன்னும் என்மேல கோபமா?..” என அமிர்தா கேட்டாள்..

“ஆமான்டி லூசே.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னை விட்டுட்டு வந்துருப்ப.. நான் ஆஸ்பிட்டல்ல கண் விழித்து பார்க்கும்போது நீ இல்லை என்றதும் எனக்கு எப்படி இருந்துருக்கும்.. கொஞ்சமாவது என்ன பத்தி கவலைப்பட்டியா.. அவன் சொன்னான் என்பதற்காக நீ விட்டுட்டு போயிடுவயா.., என்ன இருந்தாலும் என்னை விட அவன்தான உனக்கு முக்கியம்..”

“அப்படி எல்லாம் இல்லை சங்கு.. அவர் உன்னை பார்க்க விடமாட்டேனு சொல்லிட்டாரு” என அமிர்தா அழவும், மித்ரா அவளை அணைத்துக்கொண்டாள்..

அப்போது அங்கு வந்த விக்ரமை பார்த்த மித்ரா புகழிடம்,

“நீ மிஸ்டர் விக்ரம்-அ குடிலுக்கு அழைச்சிட்டு போ” என்றவள் விக்கி கையில் இருந்த பர்ஸ்ட் எய்ட்பாக்சை வாங்கிக்கொண்டு அமிர்தாவுக்கு உதவி செய்தாள்..

“மித்ரா. நானே நிலா-க்கு..”

“புகழ் நீ இன்னும் என்ன பண்ற.. கூட்டிக்கொண்டு போ..” என மித்ரா  கோபமாக கூறவும் அவர்கள்   அங்கிருந்து சென்றனர்.. பின் அம்முவிடம்,

“அவன் சொன்னான் என்பதற்காக என்னை பார்க்க வரமாட்டியா அம்மு.. நான் என்ன தப்பு பண்ணினேன்?..”

“இல்லை சங்கு ஒரு விதத்தில் நான் தானே உனக்கு ஆக்சிடெண்ட் ஆக காரணம்.. நான் அன்னிக்கு அப்படி கார் ஓட்டி ஆக்சிடெண்ட் பண்ணாம இருந்திருந்தால் நீ நல்லா இருந்துருப்ப.. எனக்கு தெரியும், நீ ஆஸ்பிட்டல்ல 6 மாசம் இருந்து கஷ்டப்பட்டது.. என்ன மன்னிச்சிடு சங்கு..”

“அடிச்சனா பாரு.. நீ என்னடி பண்ணுவ.. மன்னிப்பு கேக்கறாளாம்..  எனக்கு நீ மன்னிப்பு கேக்கறது பிடிக்காதுனு உனக்கு தெரியாது?.. சரி இந்த விசயத்த விடு. நான் உன் காயத்துக்கு மருந்து போடனும்..” என்ற மித்ரா, கட்டு போட்டவள் அவளை குடிலுக்கு அழைத்து சென்றாள்..

“என்னவோ.. நான் உன்னை இங்கு பார்த்ததுல ரொம்ப ஹாப்பி.. நீ இப்போது என்கிட்ட பேசறதுல ரொம்ப ரொம்ப ஹாப்பி.. உன் உடம்பு இப்போ பரவாயில்லையா?..”

“நான் எல்லாம் நல்லாதான் இருக்கேன்.ஆனா நீதான் என கவலையுடன் கூறிய மித்ரா நான் உன் பேமலிக்கு நடந்த ஆக்சிடெண்ட் பத்தி அப்பா மூலமா கேள்வி பட்டேன்.. சாரிடி. முக்கியமான டைம்ல உன் கூட இருக்க முடியல.. நீ ரொம்ப தவிச்சிருப்ப.. எனவும் அமிர்தா லேசாக கண் கலங்க, உடனே அவளை கட்டிக்கொண்ட மித்ரா, பேச்சை மாற்ற விரும்பியவள், எனக்கு அப்பவே டவுட், நீ அப்படியே என் நந்துஅத்தை மாதிரியே இருக்கியேனு.. ஆனா இந்த தாயம்மாதான் நம்மை குழப்பி விட்டுடுச்சி.. எங்க அந்த தாயம்மா?..” என மித்ரா கேட்க, அவள் பேச்சை மாற்றுவதை உணர்ந்த அமிர்தா அவளும் அதற்கேற்றவாறு பதிலளித்தாள்..

“ஏதோ முக்கியமான வேலைனு வெளியூர் போகிடுச்சு.. போன் பண்ணா எடுக்க மாட்டிங்கறாங்க..”

“ஓ.. எனிவே நீ என் பேமலியானதுல எனக்கு ரொம்ப ஹாப்பி..”

“எனக்கும் தான்.. அதுசரி இப்போ நாம யார பார்க்க போறோம்?..”

“சங்கரஐயா..”

“யார் அவர்..”

“அவர் நம் கோவில் அம்பாளின் தீவர பக்தர்..”

ஓ.. சாமியாரா? என ஒரு மாதிரி குரலில் அமிர்தா வினவ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.