(Reading time: 17 - 34 minutes)

“ஹேய்.. இவர் மற்ற சாமியார் மாதிரி இல்லைடி.. இன்பேக்ட் இவரை சாமியார்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது.. அதுதான் அவரை எல்லோரும் ஐயானு கூப்பிடறாங்க.. இதுவரைக்கும் அவர் ஒரு ரூபாய் கூட தட்சணை வாங்கியது இல்லையாம்.. அவர் நம் பிரச்சினைகளுக்கு ஆலோசனை சொல்லுவார்.. எப்போவாவது சோதிடம் பார்ப்பார் அவ்வளவுதான்..”

ஓ..

“ம்ம்.. ஓ..தான்..”

“அப்போது அவருக்கு வருமானம்..”

“விவசாயம் பண்றதா கேள்வி..”

“என்ன?..”

“ஆமா..காலை மாலை இரண்டு நேரமும் கோவிலில் இருப்பார்.. கிடைக்கும் நேரத்தில் விவசாயம் செய்வாராம்.. சோதிடம் பார்க்க பணம் வாங்கறதுஇல்லைனு கேள்வி..”

ஓ..

“நீ முதலில் இந்த ஓ போடறது நிறுத்து.. குடிலுக்கு வந்துட்டோம்..”

அமிர்தா குடிலை கவனித்தாள்.. எளிமையாய் அதேசமயம் நேர்த்தியாய் இருந்தது அக்குடில்..

இவர்கள் வருவதற்கு முன் குடிலில் என்ன நடந்ததுனு பார்க்கலாம்..

ஆறுமுகவேல் குடும்பம் குடிலினுள் நுழைய.. சங்கரஐயா அவர்களை பார்த்து புன்னகைத்தார்.. அனைவரையும் நலம் விசாரித்து அமர வைத்தவர் அமிர்தாவை பற்றி கேட்க, இப்போது வந்து விடுவாள் என தாத்தா பதிலளித்தார்..

“ம்ம்.. ஜாதகம் இருக்கிறதா..”

“பிறந்த நேரம் கொண்டு வந்துருக்கோம்..”

தாங்க..என்று அதை ஆராய்ந்தவர் குடில்வாசலில் நிழலாட நிமிர்ந்து யாறென்று பார்த்தவர் விக்ரமை கண்டு அம்பாளின் முகத்தை பார்த்து புன்னகைத்தார்.. பின் விக்ரமையும் புகழையும் நலம் விசாரித்து அமர வைத்தவர் மீண்டும் ஜாதகத்தை ஆராய துவங்கினார்..

சிறிது நேரம் சென்றிருக்கும்.. யமுனா சந்திரனின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்..பின் சந்திரனிடம்,

“மாமா, இங்கு என்ன நடக்குது?..”

“ஸ்ஸ்.. அமைதியா பேசு..”

“சரி மாமா.. இங்கு என்ன நடக்குது..” என மெல்லிய குரலில் கேட்டாள்..

“உனக்கு சொன்னால் புரியாதுடா..”

“உனக்கு மட்டும் இங்கு நடக்குறது புரியுதா? அதனால தான என்கிட்ட சொல்ல பதில் தெரியல” என கிண்டல் செய்தவளை முறைத்தவன்..

“ஹேய் வாலு.. நீ நாலு வயசு பொண்ணு மாதிரியா பேசுற.. சரியான அறுந்தவாலு..”

சரி அது யாரு? என்றவள் சங்கர ஐயாவையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தாள்..

“எதுக்கு அவரை இப்போ குறுகுறுவென பாக்குற..”

“இல்லை!..அழகா இருக்கில்ல..”

“எது?..”

“அதான் வெள்ளையா புசுபுசுவென..”

“ஏய் வாலு நீ சொல்றத பார்த்தா ஏதோ வில்லங்கமா யோசிச்சிருப்ப போல.. என்ன பண்ண போற..” என சந்திரன் பயத்துடன் கேட்க..

;அது ஒன்னுமில்ல மாமா, அங்க பாரேன்.. அந்த தாத்தாவோட தாடி எவ்வளவு நீளமா இருக்கு.. அத புடிச்சு தொங்குனா எப்படி இருக்கும்..”

ஆகா.. இவ நம்மல வில்லங்கத்துல மாட்டிவிட பாக்குறாளே.. என புலம்பிக்கொண்டிருந்தவன் யமுனா அடுத்து செய்த செயலைக்கண்டு திகைத்தான்..

யமுனா அவன் மடியில் இருந்து இறங்கி நேராக சங்கரஐயாவிடம் சென்றவள் அவரிடம்,

“தாத்தா..”

“சொல்லுங்க குழந்தை.. என்ன வேணும் உங்களுக்கு..”

“நான் உங்க மடியில உட்கார்ந்துகிறேன்” என்றவள் சட்டென அவர் மடியில் அமர்ந்து சந்திரனிடம் பழிப்பு காட்டிவிட்டு அவர் தாடியுடன் விளையாட ஆரம்பித்துவிட்டாள்.. அதைக்கண்ட சந்திரன் என் அக்கா ஒரு குட்டிபிசாச குழந்தைனு தெரியாம வளர்த்துக்கிட்டு இருக்கு.. ம்ம் பாவம் சங்கரஐயா நிலமை இப்படியா ஆகணும் என பரிதாபப்பட்டான்..

இதையெல்லாம் கண்டும் காணாமல் கவனித்த சங்கரஐயா மெல்லிதாய் புன்னகைத்தார்.. அவருக்கு தெரியாதா.. யமுனாவால் தான் அமிர்தா ஒரு தடவை உயிர்தப்பினாள் என்று.. இல்லைஎனில் அன்று நடந்த ஆக்சிடெண்ட்டில் வளர்ப்பு குடும்பத்துடன் சேர்ந்து இவளும் இறந்திருப்பாள் என நினைத்தவாறு ஜாதகத்தில் கவனம் பதித்தார்..

பின் தாத்தாவிடம் திரும்பியவர்,

“உங்க பேத்தியின் ஜாதகம் அருமையாக இருக்கு.. குணம்,பண்பிற்கு குறைவில்லை, படிப்பிலும் சிறந்தவள், குறும்பு தான் அதிகம்.. எல்லோருக்கும் தெரிந்த விசயம் இவள் பிறந்தகுடும்பத்தை பிரிய அமைந்தது இவள் விதி.. இனி இவளுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்க்கை அமையும்.. ஆனால்..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.