(Reading time: 18 - 35 minutes)

19. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

முற்களாலும் புற்களாலும் சூழப்பட்டிருந்த இடிபட்டிருந்த ஒரு வீட்டின் மூலையில் மயக்கத்தின் பிடியில் நாற்காலியில் கைகால்கள் கட்டப்பட்டவண்ணம் சுயநினைவில்லாமல் மயங்கிக் கிடந்தார் வேணு..

மயான மயக்கம்..ஆம்..தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள் புரியா புதிரான ஒரு மயக்கம்..

அவரது மயக்கம் தெளியத் தெளிய மயக்க மருந்தையும் போதை மருந்தையும் மாற்றி மாற்றி ஏற்றிக்கொண்டிருந்தது கயவர் கூட்டம்..

“பணத்திற்காக உடன் பிறந்த அண்ணனை கொன்று விட்டு தலைமறைவான தம்பி..”,தலைப்புச் செய்திகளில் இவ்வாசகம் அச்சிடிக்கப் படும் வரை வேணுவின் மயக்கம் தெளிவிக்கப் படவில்லை..

தன்னை சுற்றி நடந்து கொண்டிருக்கும் சூழ்ச்சிகள் தெரியாமலே பேப்பரில் செய்தி வந்த அடுத்த நாள் சிறையில் தள்ளப்பட்டார் வேணு..

தனது அண்ணனும் அண்ணியும் இறந்த சோகம் ஒரு புறம் செய்யாத தவறுக்கு சிறை வாசம் ஒரு புறம் என அல்லாடினார் வேணு..

நரக வேதனை என்பதை நரகம் போகாமலே அனுபவித்தார்..

நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சிலர் அவரைத் தூற்றியபோதும் தனது சுற்றத்தார் தன்னை நம்புவார்கள் என மனதை சமன்படுதிக்கொண்டு மற்றவர்களின் பேச்சை பெரிதாக காதில் வாங்காமல் அமைதியாக இருந்தார் தனது நினைப்பு பொய்த்துவிடும் என்பதறியாமல்..

தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமான சில நண்பர்களின் உதவியை நாடியவர் நடுக்கும் சம்பவங்களுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் காரணம் யாரென அறிய முயன்றார்..

ஆனால் அதன் பலன் என்பது அங்கு பூஜ்யமே..

வேணு சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு வார காலத்திற்குப் பின் ஒரு காலைப் பொழுது..

தன்னை மூவர் காண வந்துள்ளனர் என்று ஜெயிலர் வந்து கூறியதும் அது யாராக இருக்கும் என யூகிக்க முடியாமல் அவர் சொன்ன இடத்திற்கு சென்றார் வேணு..

அங்கு தனது மாமனாரை கண்டு மனம் சற்று லேசுபட்டுது என்றால் அவரது அருகில் நின்றிருந்த தனது அண்ணனின் மக்கள் தியாவையும் க்ரியாவையும் கண்டு முகம் மலர்ந்து போனார்..

ஆனால் எதிரிலிருந்தவர்கள் நிலையோ முற்றிலும் மாறுபட்டிருந்தது..

பிரணதீசனுக்கு வேணுவைக் கொல்லும் அளவு கோபமும் தியாவிற்கும் க்ரியாவிற்கும் அவர் மேல் வெறுப்பு..வெறுப்பு..வெறுப்பு மட்டுமே..

“தியூம்மா..ரியூம்மா..”,என்றபடி அவர்களை நோக்கி முன்னாறிய வேணுவை தியா மற்றும் க்ரியாவின் வெறுப்பான பார்வை தள்ளி நிறுத்தியது..

“பாப்பா..நான் உங்க சித்தப்பா டா..”,என்றார் வேணு பரிதாபமாக..

“இல்லை இல்லை..நீ என் சித்தப்பா இல்லை..”,என்று கத்திய தியா வந்த வழியே அழுதபடியே சென்றுவிட்டாள் க்ரியாவின் கைபிடித்து இழுத்தபடியே..

கண்கள் கலங்கிய போதும் பிரணதீசனை நோக்கி,”மாமா..”,என்று தழுதழுத்த குரலில் அழைத்தார் வேணு..

“மாமான்னு கூப்பிடற தகுதியை நீ இழந்து விட்டாய்..உன்னைப் பார்க்கும் ஆசையில் ஒன்றும் நான் இங்கு வரவில்லை..என் பேத்திகள் இருவரும் அடம்பிடித்ததால் அவர்களை இங்கு அழைத்து வந்தேன்..”,என்றார் காரமாக..

பின்பு வேணு எதையோ பேச வருவது கண்டு,”நீ எதுவும் என்னிடம் பேச வேண்டாம்..எனக்கு உன்னிடம் எதுவும் பேச விருப்பமில்லை..”,என்ற பிரணதீசன் அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு தளர்வாய் அவ்விடத்தை காலி செய்தார்..

இவர்கள் மூவரும் போகும் திசையையே வெறித்துக் கொண்டிருந்த வேணுவின் மனதில் தான் ஒரு நிரபராதி என நிரூபக்கும் வைராக்கியம்..

நான்கு மாதங்களுக்குப் பின் வந்த செய்தித்தாளில்,”தொல்பொருள் ஆய்வாளர்களின் விபத்தில் திடீர் திருப்பம்”,என்ற தலைப்பின் கீழ்,”அவர்களின் இறப்புக்கு காரணம் நாங்கள் தான் என நால்வர் காவல் துறையிடம் சரணடைந்துள்ளனர்..”,என இசக்கி மற்றும் அவனின் சகாக்களின் புகைப்படங்கள் வெளிவந்தது..

அடுத்த செய்தியாக,”தவறுதலாக கைது செய்யப்பட்ட வேணு விடுதலை..”,என்றும் மற்றொரு செய்தி..

வேணுவை நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் ஏனோ ப்ரணதீசனாலும் தியாவாலும் க்ரியாவாலும் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

காலம் ஒரு போதும் எவருக்காவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை..அதன் வேலையை செவ்வனே ஆற்றும்..

கார்காலம் பனிக்காலம் மழைகாலம் வெயில்காலம் என மாறி மாறி பல வருடங்கள்  விரைந்தோடி மறைந்தது..

பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரி பருவத்திற்குள் அடியெடுத்து வைத்தனர் தியாவும் க்ரியாவும்..

தங்களது தந்தையைப் பின்பற்றி இருவரும் தொல்லியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தனர் வெவ்வேறு கல்லூரியில்..

அங்கு தியாவிற்கு கிடைத்த நண்பர்கள் தான் எழிலும் மயாவும்..அதே போல் க்ரியாவிற்கு வ்ருதுஷ்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.