(Reading time: 18 - 35 minutes)

“மிஸ்டர்.ராமகிருஷ்ண ஆச்சார்யாவுக்கு கீழ வர்க் பண்ணப் போறோம்..இந்த சான்ஸ் கிடைக்கறதே பெருசு..இந்த யாராவது நழுவ விடுவாங்களா சொல்லு பார்க்கலாம்..??”,என்று கேட்டாள் மயா..

“நழுவ விட மாட்டாங்க தான்..பட் இந்த ப்ராஜெக்ட் பற்றி நம்ம கிளாஸ் ட்யூட்டர் சொன்னதை சொல்லிடறேன் அப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம்..”,என்றான் சீரியஸாக..

“ஹ்ம்..என்ன விஷயம்னு சொல்லு எழில்..”,என்றாள் தியா அவனது பேச்சைக் கேட்டு  கொஞ்சம் கொஞ்சம் சீரியஸாக..

“அவர் பண்ணபோற ப்ராஜெக்ட்டோட இனிஷியல் வர்க் முடிக்கறதுக்கே ஒரு ஆறு மாசம் எடுத்துக்கும் போல.. ப்ராஜெக்ட் முடியறதுக்கு கண்டிப்பா ரெண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம்..அது வரைக்கும் அவர்க்கிட்ட நாம் வர்க் பண்ணுவோம்னு பாண்ட் சைன் பண்ணிட்டுத் தான் அவருக்கடியில் ஜாயின் பண்ண முடியும்..”

“பரவாயில்லை எழில்..வர்க் பண்ணலாமே..”,என்றாள் மயா எழிலைப் பேசவிடாமல் இடையிட்டபடி..

“ப்ச்..மயா..நான் பேசி முடிச்சடறேன் முதலில்..”

“சரி சரி..நீ முடிக்கற வரை நான் பேசமாட்டேன்..சொல்லு சொல்லு..”,இது மயா நல்லபிள்ளையாக..

“தாட்ஸ் குட்.. நம்ம மூன்று பேருக்குமே பி ஜி பண்ணனும்னு ஐடியா இருக்கு..இவர்கிட்ட ஜாயின் பண்ணா அந்தப் ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் கண்டிப்பா நாம் பி ஜி பண்றதுக்கு பாசிபிள் இல்லை.. பட் இவர்க்கிட்ட சேர்ந்தா நெறையா கத்துக்கலாம்.. முக்கியமா சின்னச் சின்ன நுணுக்கங்களை.. அது நம்ம பி ஜி பண்றதுக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்..”

“.....................................”

“பட் இவர்க்கிட்ட வேலை பார்க்கறதும் மிக்ஸிக்குள்ள கைய விடறதும் ஒன்னு..எப்போ கடிப்பாருனே தெரியாதாமா.. லீவ் எதிர்பார்க்க முடியாது..சலுகைகள் சுத்தமா எதிர்பார்க்க கூடாது.. செம டெரர்..பட் ஹீ இஸ் செம நாலேட்ஜபிள்.. அண்ட் ஆல்சோ அவர்கடியில் ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வேலை பார்த்தோம்னா எங்க வேணாலும் போலசுக்கலாம்..”

“எனக்கு ஓ கே தான் எழில்.. எனக்கு அவருக்கு கீழே வேலைப் பாக்கறதுங்கற விஷயம் ரொம்ப இம்பார்டன்ட்..அவர் எவ்ளோ டெரரா இருந்தாலும் பரவாயில்லை..ஐ கேன் மேனேஜ்..”,என்ற தியா,”மயா..நீ என்ன சொல்ற..??”,என்று கேட்டாள்..

“எனக்கும் ஓ கே தான்..ஒன்னும் பிரச்சனை இல்லை..அப்பா எப்படி இருந்தாலும் ஒத்துப்பார்ன்னு நினைக்கறேன்..”,என்றாள்..

“ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நாங்க பேசறோம் மயா..”,என்ற எழில்,”தியா நீ தாத்தா பாட்டிகிட்ட கேட்டுட்டு சொல்லு..”,என்றான் எழில்..

“தாத்தா பாட்டீ கண்டிப்பா பெர்மிஷன் கொடுப்பாங்க..எனக்கு அவருக்கடியில் வேலைக்கு போறது கனவுன்னு தெரிஞ்சா அவர்கள் கண்டிப்பாக எந்த ஒப்ஜக்ஷனும் சொல்லமாட்டாங்க..”,என்றாள் உறுதியுடன்..

“சரி தியா.. நீ அவங்களை கன்சல்ட் பண்ணிட்டு சொல்லு..அதுக்கப்புறமா நம்ம ட்யூட்டர் கிட்ட சொல்லலாம்..”

“ஓ கே டா..அப்போ நான் வெச்சிடறேன்..பை எலி..பை மயா..”,என்று போனை கட் செய்துவிட்டு ஏதோ யோசனையில் மூழ்கினாள் தியா..

கார்கால மேகமொன்று கார்முகில் வண்ணம் கொண்டு வருணனுடன் கைகோர்த்து மழையாய் சாரலடிக்கத் துவங்கினார் மலையரசி மீது..

“தாத்தா..நான் பேசிக்கிடே இருக்கேன்..நீங்க என்னடான்னா மழையையே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..??”,இது தியா..

“என்ன பப்பு கேட்ட..??”,என்றார் ப்ரணதீசன் தனது யோசனையிலிருந்து வெளிவந்து..

“ப்ச்..அதான் சொன்னேனே தாத்தா ப்ரபசர் ராமகிருஷ்ண ஆச்சார்யாகிட்ட வேலை பார்க்கறதை பற்றி..”,என்றாள் சலிப்பாக..

“நமக்கே இவ்ளோ சொத்து இருக்கும் போது நீ ஏன்டா வேலைக்கு போகணும்னு அடம்பிடிக்கற..??”

“தாத்தா..நான் கொஞ்ச நாள் என் துறையில் வர்க் பண்ணி ஏதாவது பெருசா அச்சீவ் பண்ணனும்னு ஆசைப் படறேன்..”

”பப்பு..எனக்கொரு இரண்டு நாள் அவகாசம் கொடு..சொல்றேன்..”,என்றார் அத்தோடு பேச்சை முடிப்பது போல்..

அவர் ராமகிருஷ்ண ஆச்சர்யாவை பற்றி விசாரித்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்பதை அவரது பேச்சால் உணர்ந்து கொண்டவள் தாத்தா தனக்கு சாதகமாக முடிவு சொல்வார் என கற்பனை செய்து கொண்டு உற்சாகமாக தனது அறைக்குச் சென்றாள்..

ரவு நேர இருளை போக்க நிலவு மகள் அங்கு ஆஜராக அவளை சைட் அடிக்கறேன் பேர்வழியென நட்சத்திர கூட்டம் ஒன்று கூடி அவளை நோக்கி நொடிக்கொருமுறை கண்ணடித்துக் கொண்டிருந்தன..

போர்டிக்கோவில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து எலியுடன் போனில் பேசிக்கொண்டிருந்த தியா மாடியில் கீச் கீச் என்ற ஒலி எழுந்ததில் கவரப்பட்டு வேகமேக ஓடத் துவங்கினாள் ஓசை வரும் திசை நோக்கி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.