(Reading time: 18 - 35 minutes)

தியாவும் க்ரியாவிற்கும் அது கல்லூரியின் மூன்றாம் வருடம்..செமெஸ்டர் லீவிற்காக இருவரும் ஊட்டி வந்திருந்தனர்..

“நம்ம வீட்டை ரெனோவேட் பண்ணலாம்னு பாட்டி நேத்து என்கிட்டே சொன்னாங்க தியூ..உனக்குத் தெரியுமா..??”,என்று கேட்டாள் க்ரியா..

“தெரியும் ரியூ..தாத்தா என்ன கூட்டிட்டு வரும் போது சொன்னார்..நம்மளுக்கு பிடிச்ச மாதிரி ஆல்ட்டர் பண்ணலாம்னும் சொன்னார்.. இதைப் பற்றி உன்கிட்ட பேசணும்னு நெனச்சேன்..”,என்றாள் தியா..

“சொல்லு தியூ..”

“நம்ம வீட்டு அஸ்திவாரம் ஸ்ட்ராங்னு தாத்தூ சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்..சோ பெருசா எதையும் இடிக்கத் தேவையிருக்காது..ஜஸ்ட் டிங்கரிங் வேலை பண்ணா போதும்..கொஞ்சம் பழமையாவும் புதுமையாவும் பார்க்க நல்லா இருக்கும்..உன் ஒப்பீனியன் என்ன..??”

“நானும் அதையே தான் நினைத்தேன் தியூ..தாத்தா கிட்ட இதைப் பற்றி பேசுவோம்..நம்ம லீவ் முடியருதுக்குள்ள வர்க் ஸ்டார்ட் பண்ணி முடிச்சா நம்மளும் இவங்களுக்கு ஹெல்ப்பா இருக்கலாம்..”

ஒரு வாரத்திற்கு பிறகு..

ந்த இடத்தில் ஒரு ஊஞ்சல் போட்டா நல்லா இருக்கும்ல..??”,என மனதில் நினைத்தபடி ஊட்டியின் அழகை ரசித்தவண்ணம் பால்கனியின் திண்டில் சாய்ந்து  நின்றுகொண்டிருந்தாள் தியா..

அவளது ஏகாந்த நிலையை கலைப்பது போல் ஒலித்தது அவளது தொலை பேசி..அழைப்பதும் தொல்லை தான்..அதாங்க நம்ம எழில் ஸ்..ஸ்.. எலி..

“சொல்லு எழில்..எப்படி இருக்க..??”

“மீ..ரொம்ப நல்லா இருக்கேன்..நீ..??”

“ம்..நல்லா இருக்கேன்.. என்ன விஷயம் சார்..?? அதிசயமா எனக்கு போன் எல்லாம் பண்ணியிருக்கீங்க..??”

“தாயே..ஆரம்பிக்காதே..நான் நம்ம இன்டர்ன்ஷிப் விஷயமா பேசக் கூப்பிட்டேன்..”,என்றான்..

“ஓ..நான் அதைப் பத்திக் கேக்கணும் நெனச்சேன் எலி..பட் இங்க வீட்டு வேலை நடக்குதுல..?? அத பார்த்துட்டு இதை மறந்துவிட்டேன்..”

“அதனால் என்ன தியா..பரவாயில்லை..”

“சரி..நீ சொல்லு..நம்மள்ள யாருக்கடியில் வர்க் பண்ண போட்டிருக்காங்க..??”

“மிஸ்டர்.ராமகிருஷ்ண ஆச்சார்யா..”,என்றான் உற்சாகமாக..

“வாட்..உண்மையாலுமேவா..?? என்னால நம்பவே முடியல..”,எழிலின் உற்சாகம் இப்பொழுது தியாவிடமும்..

“பறக்காம நிலத்திற்கு வா தியா..அவர்கிட்டாயேதான்..உன் மென்டர்கிட்டாயேதான்..”,கடித்தான் எலி..

லேசாக சிரித்த தியா,“ஐ ஆம் சோ ஹேப்பி எலி..”,என்றவள் நினைவு வந்தாற்போல்,”ஹே..அவர்க்கடியில் இன்டர்ன்ஷிப் எல்லாம் பண்ணமுடியாதே..?”

“நானும் அதைதான் நம்ம ட்யூட்டர் கிட்ட கேட்டேன்..அவர் யாரையும் இன்டர்ன்ஷிப்க்கு எடுத்துக்க மாட்டாரே நம்மல எப்படி செலக்ட் பண்ணாருன்னு..அதுக்கு அவங்க நம்ம சீனியர் தனு சுஜன் உங்களை ரெக்கமென்ட் பண்ணதா சொன்னார்..”

“................................”

“ஆச்சார்யா சார் புது ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணப் போறார் அதுல தான் நாம் வேலை செய்யப் போறோம்..”

“ஓ..மாவுக்குத் தெரியுமா இதைப் பற்றி..??”

“தெரியாது..உன்கிட்ட தான் முதலில் சொல்றேன்..”

“ஓ கே..ஓ கே..நீ சொல்லிறாதே..நானே சொல்லிக்கறேன்..”,என்றுவிட்டு மாயாவிற்கு காணப்ரென்ஸ் கால் போட்டாள்..

போன் எடுக்கப்பட்டவுடன்,“உனக்கு மிஸ்டர் ராமகிருஷ்ண ஆச்சார்யா தெரியுமா..??”என்று கேட்டாள் தியா மயா போனை எடுத்த எடுப்பிலேயே..

“யா..தெரியுமே..தி பேமஸ் ஆர்கியாலஜிஸ்ட்..நம்ம காலேஜ் டேக்கு லாஸ்ட் இயர் சீப் கெஸ்ட்டா வந்திருந்தாரே..அவர் கிட்ட வேலை பார்க்கனும்னு உன்னோட ரொம்ப நாள் கனவு தானே..”

“எஸ் அவரே தான்..அவரோட கைடன்ஸ்ல இன்டர்ன்ஷிப் பண்றதுக்கு நம்ம கிளாஸ்ல இருந்து நம்ம மூன்று பேரையும் (தியா,மயா,எழில்) செலெக்ட் பண்ணியிருக்காங்க..அவர்கிட்ட வர்க் பண்ண ரெடியா..??”,என்று கேட்டாள் தியா உற்சாகமாக..

“வாவ்.. ரியல்லி..?? கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டா..ஐ ஆம் ரெடி..”,என்று குதித்தாள் மயா..

“வெயிட் கரோ மயா..ப்ராஜெக்ட் பற்றி எதுவும் தெரிஞ்சுக்காம ஓ கே சொல்றீங்க இரண்டு பேரும்..??”,என்றான் கேள்வியாக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.