(Reading time: 18 - 35 minutes)

சுனாமி அரக்கன் ஒன்று தன்னை சுழற்றி சுழற்றி அடித்துவிட்டுச் சென்ற உணர்வு தியாவிற்கு..

எப்படி தனது அறைக்கு வந்தாள் என்று எப்பொழுது அவளிடம் கேள்வி எழுப்பினால் அவள் குழந்தை போல் முழிப்பது உறுதி..

ஒரு தட்டில் சம அளவு பிரியாணியும் பாவற்காய் கூட்டும் வைத்தால் எப்படி ஒரு மனிதனின் உணர்வு எப்படி இருக்குமே அவ்வாறு உணர்ந்தாள் அவள்..

ஆம்.. ஞ்சு முட்ட சந்தோஷமும் துக்கமும்..எது அதிகமென தியாவிடம் இப்பொழுது கேட்டால் தெரியாது என்ற பதிலே பதிலாய்..

தன் தாய் தந்தை இருவரும் உயிருடன்..உலகில் எங்கோ ஏதோ ஒரு மூலையில் இப்பொழுது உயிருடன்..

பதினோரு வருடங்களாக ஒருவரின் பிடியில்.. கேவலம் பணம் என்னும் நிலையில்லா காகிதத்திற்காக..

அவர்களை மறைத்து வைக்கப்பட்டனோ அவள் நெஞ்சில் கோட்டை கட்டி அதன் சிம்மாசனத்தில் அமர்த்தப் பட்டிருக்கும் ஒருவர்...

மாட்ரிட் ராயல் கோட்டை..உலகில் மிகப் பெரிய கோட்டை.. தியா அந்நபரை வைத்து கட்டியதோ வானைத் தொடும் ஒன்று..

கனவிலும் அது கானல் நீராகுமென எதிர்பார்த்ததில்லை அவள்..தகர்ந்த தனது மனக் கோட்டை தரும் வலி நெஞ்சை அடைகும் உணர்வு..

அவளது ஆசான் மென்டர் எல்லாம் அந்த மனிதர் தான்..ஒரு சில சமயம் அவரை அவள் கடவுள் என்று கூட அழைப்பதுண்டு..

ஒருவரைப் பற்றிய மனிதனது அபிப்பிராயம்..காலங்களுக்கு ஏற்றவாறு அவைகள் மாறப்படுமோ..அல்லது சூழ்நிலைகள் ஒருவரைப் பற்றிய எண்ணங்களை மாற்றிவிடுமோ..?? யார் அறிவர்..

ஏன் அவர் பொய்த்துப் போனார் என்ற பெரும் கேள்வி மட்டும் புயலாய்..

அவரிடம் வேலை பார்க்க செல்வதா அல்லது அவரை பழி தீர்க்க செல்வதா என்ற குழப்பம் வேறு..

நீரில் தத்தளுக்கும் படகாய் அவள் மனம் போராடிக் கொண்டிருந்தது முடிவெடுக்க முடியாமல்..

அகிலன் பொய் சொல்லியிருக்கலாம் என ஒரு மனம் சொல்ல..அவன் உன்னிடம் பொய் சொல்லி என்ன பலன் அடையப் போகிறான் என கேள்வி கேட்டது அவளது அறிவுக்களஞ்சிய மூளை..

மொத்தத்தில் குழப்பம் மட்டுமே மிஞ்சியது..

கைகள் நடுங்க அன்றொரு நாள் தனது கல்லூரிக்கு தன்னைக் காண வந்த தனது சிற்றப்பாவின் போன் நம்பரை தேடி எடுத்தவள் அர்த்த ஜாமம் அது என உணராமல் அவருக்கு விளித்தாள்..

முதல் முறை முழு ரிங் போனது..ஆனால் யாரும் அதனை எடுக்கவில்லை..

மனது முழுதும் பதற்றம் ஏறியது தியாவிற்கு..

மீண்டும் ஒரு முறை முயன்றாள் பெண்ணவள்..

இம்முறை நான்காவது ரிங்கில் போனை எடுத்தவர்,”ஹெலோ..”,என்றார் நைந்த குரலில்..

“நா..நான்..தியா..”,என்றாள் திக்கியபடியே..

“தியூம்மா..”,என்று தழுதழுத்தது மருமுனையும்..

“நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்..”

“கேளு டா தங்கம்..”

“அம்மா அப்பாவின் விபத்துக்கு காரணம் யாரு..??”

“அது எதுக்கு டா உனக்கு..?? வேணாமே..”

“இல்லை எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்..”,பிடிவாதம்..

“........................”

“சொல்லுங்க..ஏன் அமைதியா இருக்கீங்க..?? யார் அது..??”,என்று கேட்டாள் சற்று சத்தமாக..

“ராமக்ரிஷண ஆச்சார்யா..”

இப்பொழுது அமைதி அடைவது தியாவின் முறையானது..

“பாப்பு..”

“சாரி சித்தப்பா..என்னை மன்னித்து விடுங்கள்..”,அவரைப் பேச விடாது தனது செல்லை அணைத்தாள் தியா..

மெத்தையில் தன் யோசனைகளுடனும் சஞ்சலங்களுடனும் புரண்டு புரண்டு  படுத்தவள் இறுதியாக ராமக்ரிஷண ஆச்சார்யாவைப் பழிவாங்க முடிவு செய்தாள் தன் தாய் தந்தையரின் விபத்திற்காகவும் அவர்களை காப்பாற்றுவதற்காகவும்..

தாத்தா யோசிவிட்டு சொல்வதாக தியாவிடம் கூறி நாட்கள் மூன்றைக் கடந்து நான்கை தொட்டு விட்டது..இந்த நாட்களுக்குள் தியாவின் பொறுமை அளவு கடந்துவிட்டது..

அதிகாலையே அவரைத் தேடிச் சென்றவள் அவரிடம்,”தாத்தா..நான் அவர்கிட்ட வேலைக்கு போறேன்..”,என்றாள்..

“வேண்டாம் தியா..”,என்றார் ப்ரணதீசன் அமைதியாக..

“ஏன் தாத்தா..??”,கொஞ்சம் காரமாகவே வெளிவந்தது அவளது குரல்..

“நான் வேண்டாம் சொன்னா அதுல ஏதாவது காரணம் இருக்கும் பப்பு..அவர்க்கிட்ட வேண்டாம் டா..”,என்றவர் மனதில்,”இவளது தந்தையுடன் வேலை செய்தவரிடம் இவள் வேலைக்குப் போகக்கூடாது..”,என்ற எண்ணம் மட்டுமே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.