(Reading time: 18 - 35 minutes)

பாதி படிகளைக் கடந்த போது ஏதோ ஒரு கை அவளை ஒரு அறைக்குள் வேகமாக தள்ளி கதவை சாத்தியது..

அது தள்ளிய வேகத்தில் கீழே விழுந்த தியா தூசியை தட்டயபடியே எழுந்து அந்த ரூமின் விளக்குகளை ஒளிரவிட்டாள்..

அந்த அறையை ஒரு முறை பார்வையிட்டவள்,”இது சின்ன வயசுல நான் வந்த இடம் மாதிரி இருக்கே..”,என்று முனுமுனுத்தாள்..

உள்ளுணர்வு எதையோ உணர்த்த,”அகிலா..அன்னம்..”,என்று சத்தமாக அழைத்தாள்..

மறைவில் நின்றிருந்த அகிலனும் அன்னமும் அவளைப் பார்த்து என்னவோ கண்களால் பேசிக்கொண்டனர்..

பதிலொன்றும் அவளுக்கு கிடைக்காததால் மீண்டும்,”இப்போ இரண்டு பேரும் வரப்போறீங்களா இல்ல நான் இங்கிருந்து போகவா..??”

மீண்டும் அமைதி மட்டுமே பதிலாய்..

கோபம் கொண்ட தியா கால்களை தரையில் உதைத்துவிட்டு,”நான் போறேன்..”,என்று திரும்பி சில அடிகள் வைத்தாள்..

அந்தோ பரிதாபம் ஏதோ ஒரு பொருள் அவள் காலில் பட கால்கள் சற்று இடறி மீண்டும் கீழே விழுந்தாள்..

மறைந்திருந்த இருவருக்கும் சிரிப்பு வந்தாலும் அதைக் கட்டுப்படித்தி அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்..

இடறப்பட்ட கால் வலித்தாலும் வீம்பாக எழுந்து நின்றவள் அவளை இடறிவிட்ட பெட்டியை கையில் எடுத்தாள்..

என்னதிது என்பது போல் அதனை இப்படியும் அப்படியும் அதனைத் திருப்பிப் பார்த்துவிட்டு அதனைத் திறந்தாள்..

ஒரு துணியில் சுற்றப்பட்டு ஒரு ஓலைச் சுவடி அதனுள் கிடந்தது..

சுவடியை விளக்கு வெளிச்சத்தில் உயர்த்தி பிடித்துப் பார்த்தவள்,”ஒன்னும் எழுதாத இந்தச் சுவடியை எதுக்கு இந்தப் பெட்டியில் போட்டு வெச்சிருக்காங்க..”,என்று முனுமுனுத்தவள் சில நொடிகளுக்குப் பின் அதை முகர்ந்து பார்த்தவள்,”இதை பற்றி நம்ம எலிக்கிட்டையும் மயாக்கிட்டையும் டிஸ்கஸ் பண்ணனும்..”,என நினைத்துக்கொண்டாள் மனதில்..

நினைத்த காரியம் நடந்து விட்ட திருப்தியில் அன்னம் அகிலனிடம் சைகை காட்டிவிட்டு பறந்து சென்றது..

அகிலன் அன்னம் சென்றவுடன் தியாவின் தோளில் வந்தமர்ந்தது..

அகிலனைக் கண்ட தியா,”எருமை..எத்தனை தடவை உன்னை கூப்பிட்டேன்..பதில் சொல்லாம என்ன பண்ணிட்டு இருந்த..??”,என்று கேட்டாள்..

“சும்மா உன்னை பயப்படுத்தலாம்னு..”,என்று அசடு வழிந்தது அகிலன்..

“ஆமா..இந்த அன்னம் எங்க அகிலா..??”

“அன்னம் வரல தியா..அது க்ரியாவை பார்க்கப் போயிருக்கு..”

“ஓ..சரி சரி..இங்க பாரேன் இந்த சுவடியை..?? இதுல ஒண்ணுமே எழுதாத மாதிரி இருக்கு..ஆனா இதுல இருந்து வரும் ஸ்மெல்லை பார்த்தா இதில் இருந்த எழுத்துக்களை ஏதோ ஒரு மூலிகையை உபயோகித்து மறைத்து வைத்தது போல் இருக்கு..”

“நீ சொல்வது சரி தான்.. மறைத்து தான் வைத்திருக்கிறார்கள்..”

“இந்த என்ன மூலிகைன்னு உன்னால் சொல்லமுடியுமா அகிலா உன் மேஜிக் யூஸ் பண்ணி..??”,என்று கேட்டாள் ஆர்வமாக..

“இதுக்கு நீ மெனக்கெடனும்னு அவசியம் இல்லை தியா..சுவடியே இதில் என்ன உள்ளது என்பதை உனக்கு நேரம் வரும் பொழுது காட்டிக்கொடுக்கும்..”

அவனை ஒரு ஆச்சர்ய பார்வை பார்த்தவள்,”இந்த சுவடியைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி சொல்ற..??”,சற்று வியப்பாக..

“இந்த ஓலைச்சுவடி உனக்கு தெரிந்தது தான்..உங்க அம்மா அப்பாவுக்கு விபத்து நடப்பதற்கு முன் உங்க அப்பாவும் அவரோட சகாக்களும் கண்டெடுத்த சுவடி இது தியா..”,என்றது அகிலன்..

“என்னடா சொல்ற..?? எங்கப்பாவா..??”

“உங்கப்பவே தான்.. சில வருடங்களுக்கு முன் இதை கண்டெடுத்தார்..”

“எங்க அப்பா கண்டெடுத்த இந்த சுவடி இங்க எப்படி..??”,சற்று யோசனையாக கூறியவள்,”இது உன் வேலையா..??”,என்று கேட்டாள்..

மென்மையாக சிரித்தவன்,“அப்படீன்னு வெச்சுக்கலாம்..”,என்று விட்டு,”இந்தச் சுவடியை கையில் எடுத்ததால் தான் அவருக்கு விபத்து நடந்தது..”,என்றது தியாவின் கண்களைப் பார்த்தவண்ணம்..

“எ..என்..என்னடா சொல்ற..??”,திக்கினாள் தியா..

ஆமா..என்பது போல் தலையசைத்தவன் தியாவிற்கு அந்த விபத்தின் பின்னணி பற்றி சொன்னது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.