(Reading time: 17 - 34 minutes)

என்ன ஐயா.. என நந்தினி கேட்க,

“பொண்ணுக்கு இன்னும் 3 மாதத்திற்கு நேரம் சரியில்லை.. உயிருக்கு ஆபத்து” என வாசுதேவனை பார்த்து கூற, அவரும் புரிந்து கொண்டார்..

உயிருக்கு ஆபத்து எனவும் குடும்பமே பயப்பட்டது.. அதிகமாக அதிர்ந்தது விக்ரம் தான்..

“என்ன சொல்றீங்க ஐயா” என பதட்டதுடன் நந்தினி வினவ,

“இதற்கு தீர்வு இருக்குமா.. பதட்டபடாத..”

“என்ன தீர்வு?..”

“அமிர்ததரங்கிணிக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணம் நடந்தாகனும்.. அது அவளுக்கு ஒரு பாதுகாப்பா அமையும்”

;ஆனா அவளுக்கு 20 வயசுதான் ஆகுது.. ஒருமாதத்திற்குள் எப்படி மாப்பிள்ளை பார்க்கிறது?..”

“அவள் கண்டிப்பாக திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டா. ஆனா அவ உயிருக்கு ஆபத்து என்பதை மறந்துடாதிங்க.. எப்படி யாவது நீங்கதான் ஒத்துக்க வைக்கனும்.. மாப்பிள்ளை பற்றி சொல்லனும்னா வீட்டிலே மாப்பிள்ளையை வைத்து கொண்டு வெளியே அலைவானேன்..”

“யாரை சொல்றீங்க..”

விக்ரம் தான்.. என்றவர், “வாசுதேவன் பையன அமிர்தாவுக்கு கட்டி வைச்சிடுங்க.. இது இப்போது அமிர்தாவுக்கு தெரியவேண்டாம்.. வீட்டுக்கு போய் இதப்பத்தி அவளுக்கு சொல்லிடுங்க.. என்ன ஆனாலும் அமிர்தாவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடந்தாகனும்..” என்றார்..

“நாங்களும் அமிர்தாவை விக்ரமுக்கு தரலாம்னு நினைத்தோம்.. ஆனா அவர்களுக்கு ஒருவரையொருவர் பிடித்திருக்கனுமே” என தாத்தா கூற..

“அவர்கள் 2 பேரும் 3 வருடமா லவ் பண்றாங்க.. இப்போது சின்ன சண்டை அப்படி தான விக்ரம்” எனவும்..  ஐயா கூறுவதை கேட்ட அனைவரும் விக்ரமை திகைப்புடன் பார்க்க, சங்கரஐயா, “இவங்க காதலை பத்தி நீங்க அவங்கிட்ட கேட்க வேண்டாம்.. அவங்க பிரச்சினையை அவங்களே பார்த்து கொள்ளடும்” என்றார்

“சைலண்டா இருந்த பயலே.. எப்படா இது நடந்தது” என அபியும், தமிழும் கேட்க அதை உணரும் நிலையில் நம் ஹீரோ இல்லை.. அவர்தான் தன் நிலாவுடன் திருமணம் எனும்போதே கனவுலகில் டூயட் பாட போயிட்டாரே..

“ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.. இது அமிர்தாவின் உயிர் சம்பந்தப்பட்ட விசயம்.. என்ன தடங்கல் நடந்தாலும் திருமணம் நடந்தே ஆகணும்” என சங்கரஐயா எச்சரிக்க, தாத்தாதான், “எங்கள் வீட்டின் முதல் விசேசம் நல்லபடியா நடத்திடலாம் ஐயா” என்றார்..

“அப்போ சரி.. என்றவர்.. இப்போது எல்லோரும் கிளம்புங்க ஆத்துல தண்ணீர் தீர்த்தம் எடுத்துட்டு வந்து அம்பாளுக்கு அபிஷேகம் பண்ணணும்..”

சரிங்க ஐயா.. என்ற தாத்தா அனைவரும் வெளியே வந்தனர்..

இங்கு மித்ராவோ அம்முவை கூட்டிக்கொண்டு குடிலுக்கு வர அதைக்கண்ட தாத்தா ;உள்ளே போய் ஐயாவிடம் ஆசி வாங்கிடுமா நாங்க கோவிலில் இருப்போம்” என்றவர் அனைவரையும் கூட்டிக்கொண்டு சென்றார்..

சரி என இருவரும் உள்ளே நுழைந்தனர். அதைக்கண்ட சங்கர ஐயா,

“வாங்க.. உயிர்தோழிங்க இருவரும் ஒன்று சேர்ந்தாச்சா” எனவும் இருவரும் ஆச்சரியத்துடன் அவரை பார்த்து பின் ஆசி பெற்றனர்.. அவரும் இருவரையும் அமர செய்து,

“இருவரையும் ஒன்றாக பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு.. இப்படியே இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்கனும்..”

“கண்டிப்பாக ஐயா, இனி நாங்க பிரிய மாட்டோம்.”

“மகிழ்ச்சி.. சரி அமிர்தா உன் மனதில் உள்ள கவலையை என்னிடம் பகிர்ந்து கொள் மகளே.. உனக்கு மன நிம்மதி கிடைக்கும்.. எனக்கு தெரியும், உன் மனதில் உள்ள கவலைபற்றி.. ஆனா அதை உன் வாயாலே சொல்றது உனக்கு நல்லது..”

“20 வருடம் என்னை மகளாய் வளர்த்தவர்கள் இல்லை எனுபோதுதான் என் மனதை அந்தபாரம் அழுத்துகிறது.. அவர்களை நான் மிஸ் பண்றேன்..”

“பிறப்பு, இறப்பு என்பது உடலுக்கு தானே அம்மா, மனதிற்கு இல்லையே..” என்றவர் சில நேரம் அவள் மனதிலிருப்பதை தெளிய வைத்தார்.. அதை புரிந்துகொண்ட அமிர்தா சிறிது தெளிந்தாள்..

“இனி உனக்கு நடந்த கடந்தகால கசப்புகளை மறந்துவிட்டு இனி நிகழ்கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்க பழகிக்கொள் மகளே.. உனக்காக உன் குடும்பம் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.. சரியா..”

“ரொம்ப நன்றி ஐயா..”

“நன்றி வேண்டாம் மகளே எனக்கு பழைய குறும்புகார அம்மு திரும்பி வந்தால் போதும்.. உன் குடும்பத்திற்காக..”

“சரிங்க ஐயா.. நான் பார்த்துகொள்கிறேன்.. இவளை பழைய அம்முவாக மாறுவதற்கு நான் பொறுப்பு” என மித்ரா கூறி விடைபெற்றாள்.. அமிர்தாவும் நன்றி கூறி வெளியேறி சென்றால் அங்கு விக்ரம் நின்று கொண்டிருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.