(Reading time: 17 - 34 minutes)

அவன், நிலா என மெல்லிய குரலில் அழைக்க, அதைகேட்ட அமிர்தாவுக்கு உயிர்வரை சில்லிட்டது.. ஒருகாலத்தில் இந்த அழைப்பிற்காக தவமாய் காத்திருப்பாள்.. ஆனால்.. இப்போது இல்லையே.. எனவே அதை காதில் வாங்காமல் அவனை கடந்து போக..

உடனே அவளின் கைப்பிடித்து தன்புறம் இழுத்து நிற்க வைத்தவன்..

“நான் சொல்றதை ஒருதடவை கேளுடா..”

“எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல கை வைப்பிங்க.. என்ன விடுங்க.. இல்லைனா கத்தி ஊரைக்கூட்டுவேன்..”

“அதுக்கெல்லாம் நான் பயப்படுற ஆளா? நீ என் அத்தைப் பொண்ணுடீ.. நான் உன்ன லவ் பண்ணவன். என்ன எவன் கேள்வி கேட்பான்?..”

“லவ்வா.. அதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை லவ் னு சொல்லாதிங்க.. உங்கள சுத்தி சுத்தி வந்ததுனால தான நான் உங்களுக்கு இளக்காரமா போயிட்டேன்.. என அழுதவள்.. அவன் சட்டைகாலரை பிடித்து கொண்டு என் வாழ்க்கையில ஏன்டா நீ வந்த.. நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன்.. இப்பவும் உன்னை என்னால முழுசா வெறுக்கமுடியலையே” என உளறியவள் சட்டென பேச்சை நிறுத்தினாள்.. அதை கேட்டு நிம்மதி அடைந்த விக்ரம்.. சட்டென முழங்கால் முட்டியிட்டு,

“என்னை மன்னிச்சிடு நிலா.. ஐயம் வெரி சாரி.. இனி அப்படி பண்ணமாட்டேன்.. என்னை மன்னிக்க என்ன தண்டனை வேணாலும் கொடு.. ஆனா என்னை விட்டுட்டு போயிடாதடீ.. நான் உன்னை என் உயிரா நினைக்கிறேன்.. நீ இல்லாம இந்த விக்ரம் இல்லடீ.. ஐ லவ் யூ நிலா.. ப்ளீஸ் எனக்கு எதாவது ஒரு தண்டனை கொடுத்து என்னை மன்னிச்சிடுடீ.. ப்ளிஸ்” என அவன் கெஞ்ச, அவள் எதும் பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாக ஓடினாள்..

உன்னை எப்படியாவது நான் பழைய நிலாவா மாத்திடுவேன் என மனதில் கூறிக்கொண்டவன் அங்கிருந்து சென்றான்..

இங்கு அமிர்தாவோ ஆச்சரியத்தில் கோவிலுக்கு செல்ல நடந்துக்கொண்டு இருந்தாள்.. அவளைப் பொறுத்தவரை விக்ரம் மன்னிப்பு கேட்டது ஆச்சரியம் தான்.. அவன் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை.. அதுவும் இவ்வளவு பணிவாக.. அவளைப்பொறுத்தவரை அவள் விக்ரம் சரியான Rude Person.. சரியாக பேசக்கூட மாட்டான்.. கனிவாக பேசுவது என்றால் என்ன என்று கேட்பவன் எனவாறு யோசித்துக்கொண்டு வந்தவள் மித்ராவை கண்டு அவளருகே சென்றாள்..

“இவ்வளவு நேரம் எங்கடி போன லூசு.. உன்னை எங்கெல்லாம் தேடறது?..”

சாரிடி என சமாதானம் செய்தவள் நடந்ததை கூற..

“அம்மு. இதைபத்தி இங்க பேசவேண்டாம்.. வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளலாம்.. அமைதியா இரு.. நான் உன் கூட இருக்கேன்.. ஒரு கை பார்த்துடலாம்..” என மித்ரா கூறியதைக்கேட்டதும் நிம்மதி அடைந்தாள் அமிர்தா..

“சரி.. இதையெல்லாம் மறந்துட்டு வந்த வேலைய பார்க்கலாமா?..” என மித்ரா கூற,

“என்ன வேலை..”

“வேற என்ன? நீதான் சரியான சாப்பாட்டு ராமி.. ஸ்வீட் பைத்தியம்.. லட்டு வாசம் வரல உனக்கு..”

“ஹே.. ஆமா சங்கு.. ம்ம்.. ஆ.. என வாசனை பிடித்தவள், வாவ்.. நெய்,முந்திரிப்பருப்பு வாசனை.. எனக்கு இப்பவே வேணும்.. வா காலி பண்ணலாம்..”

“ஹேய் லூசு.. சாமிக்கு படைச்சிட்டு ஈவ்னிங் தான் தருவாங்க.. இப்போது ஆத்துல தீர்த்தம் எடுத்துட்டு வரணும்.. வா.. போலாம்..”

“எல்லாம் சரி.. ஆனா உனக்கு வர லட்டு பங்கு எனக்குதான்.. வழக்கம் போல யம்முக்கு கொடுத்த.. நான் உன்னை கொன்றுவேன்..”

“பார்க்கலாம்.. பார்க்கலாம்.. இப்போது வா..” என குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள்..

விக்ரமும் அவள் கண்ணில் படாமல் இருந்தான்.. எனவே அவள் அதை மறந்து கலகலப்பாக இருந்தாள்.. பின்னே அவள் தோழி சங்கு தான் அவளிடம் பழையபடி பேச ஆரம்பித்துவிட்டாளே.. அவளை பொருத்தவரை இப்போது மித்ராதான் அவளுக்கு எல்லாமே..

அனைத்து பெண்களும் கோவிலின் அருகிலிருக்கும் ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து ஐயரிடம் தர அவர் அதை வைத்து அபிஷேகம் செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்.. அம்மனை அனைவரும் மனதார வேண்டினர்.. அமிர்தாவுக்கும் அம்மனை தரிசித்ததில் மன நிம்மதி கிட்டியது.. அனைவரும் வரிசையாக அமர்ந்து குத்துவிளக்கு பூஜைக்கு தேவையானதை எடுத்து வைத்து தயாராக இருக்க, ஐயர் சொன்னதும் விளக்கு பூஜை சங்கரஐயா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.