வெண்ணிலவின் ஒளியில், குத்துவிளக்குகள் பிரகாசிக்க, பட்டுதாவணி அணிந்து வைரநகைகள் மின்ன, அளவான ஒப்பனையுடன் அமர்ந்திருந்த அமிர்தாவை பார்த்த விக்ரம், அந்த நிலவின் தேவதைதான் வானுலகிலிருந்து இறங்கிவந்து இங்கு அமர்ந்திருக்கிறதோ என அவனுக்கு தோன்றியது.. அவன் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்த அமிர்தாவுக்கு சிறிது வெட்கம் தோன்ற அதை மறைக்க பாடுபட்டு தன் மனதினை திட்டினாள்.. பின் மனதிற்குள், “இல்லை அமிர்தா.. நீ இப்போது அவர்மீது கோபம்தான் படணும் அவர் அவமானப்படுத்துனதை மறந்துட்டியா” என்றவள்.. கோபத்தில் அவனை முறைக்க, அவனோ கண்சிமிட்டினான்.. “ஐயோ செல்லம் கோபத்துல தான்டா நீ அழகு” என மனதிற்குள் கூறிக்கொண்டான்.. சிலமணிநேரம் நடைபெற்ற பூஜை முடிவடைந்து அமிர்தா எதிர்பார்த்த வேளையும் வந்தது.. அதாங்க.. பக்தர்களுக்கு பிரசாதம் தர வேளை.. அனைவருக்கும் பொங்கல்,லட்டு தரப்பட்டது.. அதை வாங்கியவள் மித்ரா, யமுனாவுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்..
பின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்மனை வணங்கி விட்டு இங்கு இருக்கும் பங்களாவில் இரவு தங்கிவிட்டு காலை நந்தவனம் செல்வதாக முடிவு செய்து சங்கரஐயாவிடம் விடைபெற.. “அவர் வாசுதேவனை பார்த்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்” என கூற, அவரும் தலை அசைத்து விடைபெற்றார்...
பின் அனைவரும் பங்களாவிற்கு சென்று இரவு தூங்கி காலை புறப்பட்டனர்..
அனைவரும் வண்டியில் ஏறி அமர, பஸ் புறப்பட்டது.. இப்போது விக்ரமும் வண்டியில் ஏறிக்கொள்ள.. அமிர்தா அமர்ந்த நேர் பக்கவாட்டு சீட்டில் அமர்ந்து கொண்டு அவளைப்பார்த்து புன்னகைக்க, அவளோ அவனுக்கு முறைப்பை பரிசாக தந்தாள்.. சிறிதுநேரம் சென்ற உடன் சந்திரன்,
“எனக்கு போர் அடிக்கிது மறுபடியும் விளையாடலாம்..” என்றவன்.. “இப்போ பாட்டி நீங்க எடுங்க..” எனவும், அவர் எடுத்த சீட்டில் சந்திரன் பேரே வரவும், “நானே என் வாயக்கொடுத்து மாட்டிக்கிட்டேனே..” என அவன் புலம்ப, அனைவரும் சிரித்தனர்..
“சரி, இப்போ சொல்லு பேராண்டி, இதுவரைக்கும் நீ எந்த பெரிய பொய் சொல்லி இன்னும் வீட்டில் இருக்கவங்ககிட்ட மறைச்சிருக்க?..”
“பாட்டி.. என் செல்ல பாட்டி.. ஈசியா வேற கேளு பாட்டி.. ப்ளீஸ்..”
“அதெல்லாம் முடியாது.. சொல்லு..”
“ம்ம்.. ஒருதடவை கூட படிக்கறவன அடிச்சு பெரிய பிரச்சினை ஆகி டீசி தர, வாசுமாமா தான் காப்பாற்றினார்” என அவன் கூற.. அனைவரும் அதிர்ச்சியாய் வாசுதேவனை பார்க்க, ;அடப்பாவி என்னை மாட்டி விட்டுடானே” என புலம்பியவர்.. “ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. நடந்து முடிந்ததை எதுக்கு கிளறனும்.. அடுத்து யாரு?..” என்றவர் “மித்ரா நீ எடுமா” எனவும், அவள் எடுக்க அதில் சங்கரிதேவி பெயர் இருந்தது.
“சரி சின்னஅத்தை.. மாமா உங்ககிட்ட முதன்முதலில் எப்போ ப்ரப்போஸ் பண்ணாரு?..”
“என் பர்த்டே அப்போ..” என்ற சங்கரி, “நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாச்சு, ஒரு கேள்விதான் கேட்கனும்..ஆள விடு..” என கூறி தப்பித்து கொண்டார்..
அடுத்து தமிழ் பேப்பர் எடுக்க அதில் மீன்விழி பேர் வந்தது..
“சரி.. நீதான் டான்ஸ் நல்லா பண்ணுவ.. இந்த அத்தானுக்காக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடு..” என்றவன் முறைதானா முகுந்தா சாங் போட அதற்கு அழகாக நடனமாடினாள் மீனு..
அடுத்து ஆதினி சீட் எடுத்து மித்ராவின் பெயர் படித்தவள்,
“அக்கா, நீங்க உங்க புகழ் அத்தானை பார்த்து லவ்சாங் பாடணும்” எனவும் மித்ரா மறுத்தாள்.. பின் அமிர்தா சமாதானபடுத்த, என்ன பாட்டு என மித்ரா கேட்டாள்..
“அது உங்க அத்தானை கேளுங்க” என ஆதினி கூற, அவனோ “செந்தூரா பாடு” என கேட்க.. மித்ரா அவனை முறைத்துக்கொண்டு அழகாய் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்..
நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்
நீ தான் மனம் தேடும் மான்பாலன்
பூவாய் எனையேந்தும் பூபாலன்..
என் மடியின் மணவாளன் என தோன்றுதே
செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா.. என அழகாய் பாடி முடித்தாள்.. அனைவரும் அவளின் பாடலுக்கு கைத்தட்டினர்..
அதன் பிறகு புகழ் பேப்பர் எடுக்க மின்விழி பெயர் வந்தது..
“நான் கேள்வி கேட்கிறேன்.. யாரையாவது லவ் பண்றயா?..” என அவளை மாட்டி விட்டான்..
“ஐ.. நான் யாரையும் லவ் பண்ணலையே” என பதில் கூறி அவன் தலையில் கொட்டிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள்..
அடுத்து சந்திரன் நந்தினியிடம் சென்று பேப்பரை எடுக்க சொல்ல, அதில் விக்ரம் பெயர் வரவும், அவர் அவனிடம் “உனக்கு இப்போ என்ன பாட்டு பாட தோனுதோ அதை பாடு” என்றார்..
அவன் அமிர்தாவை பார்த்தவன்.. பின் பாட ஆரம்பித்தான்..