(Reading time: 7 - 13 minutes)

23. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

நிச்சயத்தை வேறு விமர்சையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் இணைந்தே செய்தனர் கவியும்-அஸ்வினும்....

அதனால் அவர்களுக்கு  நிறைய தனிமை கிடைக்க,அவர்களுக்கு இடையே இருந்த  இடைவேளையும் குறைந்துக் கொண்டே இருந்தது.அதை பார்த்த பெரியவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது.

இதற்கு இடையே அவர்களது பட்டாளமும் வந்து சேர்ந்தது...அதனால் அந்த வீட்டின் கலகலப்பு கூடிப்போனது

யாமினி நேரிடையாகவே கவியிடம் கேட்டுவிட வேண்டும் என்று அவளை கேட்க அதற்கு கவி நீ என்னோட பேசிக்கிட்டு இருந்தா உன்னோட அத்தைக்கு புடிக்காது அது தேவை இல்லாமா உனக்கு பிரச்சனையை தான் ஏற்ப்படுத்தும் அதனால் வேண்டாம்..நீ என்ன விட்டு தள்ளியே இரு அதுக்கப்புறம் நீயும் என்கூட பழகுனது தப்புன்னு பின்னடி கவலை படகூடாது  அதான் சொல்லுறேன் என்று மறைமுகமாக விஷ்வா கூறியதை அவளிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அதை கேட்டுக் கொண்டிருந்த விஷ்வாவிற்கு மனது முழுவதும் வேதனை அலை சூழ்ந்தது.

இருந்தும் அவன் சொன்ன வார்த்தையின் விரியத்தால் வந்த விளைவுகளை அவன் அனுபவித்து தானே ஆகவேண்டும்.

நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம்மை நன்கு புரிந்துக் கொண்டவர்கள் என்று நினைப்பவர்களே நம் மனதை புண்படுத்தும் என்று தெரிந்த வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது வரும் வேதனை தான் இந்த உலகில் மிகவும் கொடுமையான வலி....அந்த வலி தான் அவளை  அப்படி பேச வைத்தது என்று புரிந்துக் கொண்டான் விஷ்வா..

தனது தோழியை பற்றி தெரிந்தவன் அவளது மனது  மாறும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தான்...,அதை யாமினியிடமும் கூறி அவளையும் அமைதியாக கவலை  இன்றி இருக்க சொன்னான். 

அழகான  நிச்சய நாளும் வந்தது.அனைவரும் மகிழ்ச்சியுடன் காத்திருந்த அந்த நாள் அழகாக வந்திறங்கினான் சூரியன். தனது  கதிர்களால் இந்த உலகத்திற்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்தான்.

அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.அனைத்து வேலைகளும் தடல் புடலாக நடந்துக் கொண்டிருந்தது\.

தோட்டத்தில் அனைத்து வேலைகளும் நடந்து..நிச்சயம் நட போகும் இடமும் அனைத்து அலங்காரங்க வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது.

அனைத்து உறவுகளும் வர ஆரம்பித்திருந்தனர்.அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்தனர்.

அனைத்து ஜோடிகளும் அவளுடன் எதிர் பார்த்த பொன்மாலை நேரமும் வந்தது.அனைவரும் அந்த விழாவிற்கு தயாராக ஆரம்பித்தனர்.

அஸ்வினும்-கவியும் கிளம்பாமல் இன்னும் அங்கே சுற்றி அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க..,ஜனார்த்தனன் தாத்தாவும்,நாராயண தாத்தாவும் இனி இருக்கும் ஏற்பாடுகளை தாங்கள் மேற்பார்வை பார்த்துக் கொள்வதாக கூறி அவ்ரகளை கிளம்பி வருமாறு கூறி அனுப்பிவைத்தனர்.

தங்கள் அறைக்கு வந்த கவி படுத்துக் கொள்ள,அஸ்வின் புன்னகையுடன் குளியல் அறைக்கு சென்றான்.

குளித்துவிட்டு அவன் வரும்பொழுது அவள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.குழந்தை போல் அவள் உறங்குவதை பார்த்தவன் அவளது அருகில் சென்று  தனது தலையில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் படுமாறு தன் தலையை ஆட்டினான்.

அவனது முடியில் இருந்த நீர் துளிகள் அவளது முகத்தில் தெறித்தன.ஆனால் அதையும் துடைத்துவிட்டு கண் திறக்காமல் மீண்டும் தூங்க ஆரம்பித்தாள் கவி.

அவளது அந்த செயலை பார்த்து  மீண்டும் சிரித்தவன்.அவளது பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

தனது வலது கையால் அவளது இடையை அவன் அணைக்க அப்பொழுது தான் அவன் குளித்து வந்திருந்தால் அவனது கைகளில் இருந்த குளிர்ச்சி அவளுக்கு பாய அவன்புறம் திரும்பி அவன் மார்பினுள் அவள் புதைய அவள் மர்ப்புமுடி கொடுத்த குறுகுறுப்பில் இவ்வளவு நேரம் இருந்த தலையணை இதம் மறைந்து போக மீண்டும்  அவள் நெஞ்சினுள் ஆழ்ந்து புதைய அது இன்னும் குறுகுறுப்பையும் இதத்தையும் தர அதன் மாறுபாட்டை உணர்ந்தவள் தன் தூக்கம் களையாதவாறு தனது இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணை லேசாக திறந்து பாக்க,ஏற்கனவே அவளது ஒவ்வொரு செயலிலும் தொலைந்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது முழுவதுமாக தன்னை அவளிடம் தொலைத்தான் கண்ணிமைக்கவும் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலில் தனது ஒரு கண்ணை திறந்து பார்த்தவள் தனது அருகில் அவனை பார்த்தவுடன் தனது இருவிழியையும் விழிக்க அதையும் அவன் கண்ணிமைக்காமல் பார்க்க அவனது கண்களில் தொலைய இருந்தவள் அப்பொழுது தான் அவனுள் அவள் இருந்த நிலையையும் அவளது நிலையையும் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.