குளித்து விட்டு வந்ததால் இடையில் கட்டிய துண்டுடன் இருக்க அவனது பரந்த விரிந்த மார்பை முதன் முதலாக பார்த்ததால் அவள் நிலைமை அவஸ்தையாக முதல் முறை அவனை இப்படி பார்ப்பதால் அவளது முகம் வெட்கத்தை பூசிக்கொள்ள அதை பார்த்துக் கொண்டிருந்த அவளது மன்னவனின் மனமோ அவளுக்குள் தொலைய துடித்துக் கொண்டிருந்தது.
அவளது உயிர்வரை அவனது பார்வை ஊடுருவி செல்ல அவனது லேசர் போன்ற அவனது பார்வையை பார்க்க முடியாமல் திரும்பியவளின் கண்களில் பட்ட கடிகாரத்தில் காட்டிய மணியை பார்த்து தன்னை திட்டிக் கொண்டவள்
அவனிடம் இருந்து எப்படி விடு படுவது என்று நினைத்தவள்,"அஷு மாமா மணி ஆறுக்கு மேல ஆகிடுச்சு இதுக்கு மேல நீங்க இங்க..."என்று அவள் கூறுவதற்குள்ளேயே கடிகாரத்தை பார்க்க அவன் தன் பிடியை தளர்த்த அந்த நேரத்தை பயன் படுத்திக் கொண்டவள் அவனிடமிருந்து விடுபட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொள்ள தான் ஏமாற்ற பட்டிருப்பதை உணர்ந்தவனுக்கு இதழில் சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.
தனது உடையில் கிளம்பியவன் கீழ சென்று விட வெளியில் வந்த கவிக்கு கட்டிலில் மீது இருந்த பொருட்களைப் பார்க்கும் பொழுது தனது கணவனின் மீது இருந்த அன்பு இன்னும் கூட தான் செய்தது.
அவளிடம் அணிய நகை இல்லை என்பதை புரிந்துக் கொண்டவன் அவளுக்காகவே அந்த சேலைக்கு ஏற்றவாறு அனைத்து அணிகலனையும் வாங்கி வைத்திருந்தான்.
அதை பார்த்து புன்னகைத்தவள் சேலையை கட்டி முடித்துவிட்டு கண்ணாடி முன் நின்று நகைகளை அணிந்துக் கொண்டிருக்க உள்ளே வந்த அஸ்வின் அவளை பார்த்துக் கொண்டே அருகில் வந்தான்.
அவன் வரவை கவனிக்காமல் கைகளில் அவள் வளையல் அணிந்துக் கொண்டிருக்க அவளை பின்னிருந்து அணைத்தான் அஸ்வின்.
அவனது அணைப்பை உணர்ந்தவள் கண்ணாடியைப் பார்க்க பட்டு வேஷ்டி சட்டையில் அழகனாய் நின்றிருந்தான் அவளது கணவன்.
அந்த கண்ணாடியை அவனும் பார்க்க கண்ணாடியில் இருவரது விழிகளும் கட்டுண்டு இருந்தது.
அவளை கண்ணாடியில் பார்த்தவாறே அவளது முடியை அவளது முன்புறம் எடுத்துப் போட்டவன். அவளது தோல்பட்டையில் தனது கீழ்தாடையை வைத்து அவளது கன்னதுடன் தனது கன்னத்தை இழைக்க அது தந்த குறுகுறுப்பில் அவள் கண்மூட அவளது வெற்று முதுகில் பதிந்தது அவனது சூடான இதழ்கள்.
அது பெண்ணவளை இன்னும் மயக்கம் தர தளர்ந்து இன்னும் அவன் மீதே சாய தன் புறம் அவளை திருப்பியவன் கீழ் நோக்கி இருந்த அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்த மூடிய கண்களுள் ஓடிய அவளது கருவிழிகள் அவனை ஈர்க்க அதற்கு முத்தம் கொடுத்தவன்,
துடித்துக் கொண்டிருந்த அவளது இதழ்களை நோக்கி தனது இதழ்களை கொண்டு செல்லும் நேரம் கதவு வேகமாக தட்டப்பட அவசரமாக அவளை விட்டு விலகினான் அஷ்வின்.
sry friends,next epi longa tharaen…konjam work athaan ennala long epi thara mudiyala next epi kandippa periya epiyaa tharaen…once again sry friends…..

தொடரும்
{kunena_discuss:1099}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.