(Reading time: 24 - 48 minutes)

24. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

தழ் என்னும் மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தரும் முன்பே

கனவாகி களைந்தாய்

தன் இதழ் கொண்டு அவள் இதழை அவன் முட  முயற்சிக்க அந்த சமயம் கதவு தட்டப்பட அவளை விட்டு விலகியவன் அவளை தள்ளி நிறுத்திவிட்டு கதவை திறக்க அங்கே கவிஸ்ரீ நின்றுக் கொண்டிருந்தாள்..

அவன் கதவை திறந்ததும் “மாமா எல்லாரும் உங்கள கீழே வர சொன்னாங்க…”என்று சொல்ல,

”சரி கவி  வரோம்...” என்று அவன் சொல்ல

“மாமா..,என்னை கரடினு சொல்லாதீங்க..,நான் என்ன பண்ண..,தாத்தா தான் கூப்பிட்டு வர சொன்னாங்க,அதான்...” என்று அவள் சொல்ல

“ஏய்...உன்னை...” என்று அவன் முடிப்பதற்குள் அவள் சிட்டாக பறந்திருந்தாள்.

அவன் வருவதற்குள் நகையெல்லாம் அணிந்து முழவதுமாக  தயாராகி நின்றிருந்தால் கவிமலர்.

அவளை அவன் வைத்த கண் வாங்காமல் பார்க்க அவனது பார்வையை உணர்ந்தவள் அவனை பார்க்காதவாறு வெளியில் செல்ல எதன்னிக்க..,அவளது கைகளை தனது வலுவான கைகளால்  பிடித்தான் அவன்.

அவன் என்ன செய்யபோகிறான் என்று தெரியாமல் அவள் படபப்புடன் இருக்க..

அவளது கைகளுடன் தனது கைகளை கோர்த்தான்.

அவளது கைகளின் மென்மை அவனது கைகளின் வன்மையை உணர அவனது கைகள் அவள் கைகளது மென்மையை உணர்ந்தது.

அவளது கைபிடித்து அவளது அருகில் வந்தவன் அவளுடன் சேர்ந்து கீழே சென்றான்.

அவர்களது அந்த  வருகையை பார்த்த அனைவரின் கண்களும் நிறைந்திருந்தது.

தனது மருமகள்-மகனின் ஜோடி பொருத்தத்தை பார்த்து ஆனந்தியே மகிழ்ந்துபோனார்..

அவரும் இப்பொழுது கவிமலரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தார்..

கீழே அவர்கள் வர ஜானகி அவர்களுக்கு திருஷ்டி கழித்தார்...

“கவிம்மா ரொம்ப அழகா இருக்கட..”என்று கூறி அவளது மஞ்சு அத்தை அவளது கன்னத்தை தடவி திருஷ்டிக் கழிக்க...

“கவி இன்னைக்கி எங்களுக்கு தான நிச்சயம்...”என்று அமர் கேட்க

“ஏன்டா  அப்படி கேக்குற...”என்று கவி கேட்க

“இல்ல எங்க எல்லார் ஜோடிய விட உங்க மேல தான் எல்லார் கண்ணும் இருக்க போது...,அதான் கேட்டேன்...”என்று அமர் கூற

“ஏன்டா அப்படி சொல்லுற எல்லாரும் நல்லா தான இருக்காங்க...,எவ்வளவு அழகா இருக்காங்க..”என்று கவி கூற

“நீ வேற அவங்க  எவ்வளவு மேக்அப்..,போட்டுருக்காங்க தெரியுமா...,பாவம் அந்த அக்கா எவ்வளவு பீல் பண்ணாங்க தெரியுமா..” என்று  சதீஷ்  கூற

அவனை அனைத்து கதாநாயகிகளும்  முறைத்துப் பார்க்க அதைப் புரிந்துக் கொண்ட அமரும்,சதிஷும் எங்களோட பிரண்ட்ஸ்  வந்திருக்காங்க என்று கூறி அங்கிருந்து தப்பிக்க முயல அதை பார்த்த அனைவரும் குப் என்று சிரிக்க  அந்த வீடு முழுவதும் சிரிப்பொலியில் நிறைந்தது..

பல வருடங்களுக்கு பிறகு அந்த குடும்பம் முழுவதும் சந்தோசத்தில் திளைத்திருந்தது.

ஒரு வழியாக அனைத்துக் கூத்தும் முடிந்து அனைவரும் விழா நடைபெறும் மேடைக்கு சென்றனர்.

 கவிமலர்-அஸ்வின் நடுவில் நின்று அந்த வைபோகத்திற்கு  தேவையான மோதிரங்களை ஜோடிகளுக்கு ஏற்றவாறு தட்டில் வைத்துக் கொண்டிருக்க அவர்களது இருபுறமும் இரண்டு இரண்டு ஜோடிகளாக நான்கு ஜோடிகளும் நிற்க பெரியவர்கள் அவர்களுக்கு முன்னால் நின்றனர்.

அவர்கள் அவர்களது மோதிரங்கள் அடங்கிய தட்டை தாதாக்களிடம் ஒன்று ஒன்றாக கொடுக்க  ஒவ்வொரு ஜோடியாக மோதிரம் மட்டுமல்லாமல் தங்களது மனதையும் இன்னொரு  முறை மாற்றி தங்களுக்கான துணை இனி இவர்கள்தான் என்று மீண்டும் ஒரு முறை  உறுதி செய்துக் கொண்டனர் கண்களில் வழிந்த காதலுடன்...,அங்கு இருந்தவர்களின் கரகோஷத்திற்கு இடையே...

அதன் பிறகு வந்தவர்கள் அனைவரையும் பெரியவர்களுடன் சேர்ந்து இவர்கள் கவனிக்க ஆடை மாற்றி வந்த நான்கு ஜோடிகளும் நடனத்தில் குதித்தனர்..

“பகலிலும் நான் கண்ட கனவுகள்

நினைவாக  உனதானேன்

நான் உனதானேன்....

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும்

என் நாட்கள் சுகமான

ஒரு சுமை ஆனேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.