(Reading time: 24 - 48 minutes)

அவளை இவ்வளவு நாளும் மனதுக்குள்ளே மருகிக் கொண்டு  இருக்க செய்கிறது..,அதுதான் அவளுக்கு அவன் மீது அளவு கடந்த நேசம் இருந்தும் அவளை இதுவரை அவனிடம் காதலை சொல்லாமல் இருக்க வைக்கிறது.அந்த பயம் அவளை விட்டு இன்னுமும் அகலவில்லை.

ஆனால் இன்று அவனது காதலை பார்த்த அவளால் அவன் செய்தவற்றை உதாசீனம் செய்து விட்டு போக முடியவில்லை..

அவள் தனது கண்ணீரால் அவனின் நெஞ்சை நனைத்துக் கொண்டிருக்க அவனது  அணைப்பும் இறுகிக் கொண்டிருந்தது..

பெரியவர்களின் அனைவரது கண்களிலும் கூட நீர்...

அவளது நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நிம்மதி தங்களது தோழிக்கு சரியான வாழ்க்கை துணை கிடைத்துள்ளது என்று....

அனைவரின் மோன நிலையையும் கலைத்தது எப்பொழுதும் போல நமது அமர் தாங்க....

அஸ்வின் அருகில் சென்றவன் அவனது தோளில் தட்டி “மாமா..,மாமா...” என்று அழைக்க அஸ்வின் கண்டுக் கொள்ளாமல் இருக்க

அவனின் முதுகில் நன்கு ஒரு அடி அடிக்க அதில் தன்னிலை பெற்ற அஸ்வின் அவனை பார்க்க அமர் அவனிடம் ,”டேய் மாமு...,இன்னைக்கி எங்களுக்கு தான்டா நிச்சயம் நீ பண்ற வேலைய பார்த்து அங்க பார் எங்களோட ஆளுங்களாம் எங்கள   முறைக்குது பார்..,அது எதுக்குனு புரியுதா..,டேய் மரமண்டைகளா உங்களுக்கு இது மாதிரி ஏதாவது சர்ப்ரைஸ் தரணும்னு தோணுச்சா அப்படினு..,எதுக்கு இப்படி எங்க வாழ்க்கையில விளையாடுற...”என்று அவன் கூற

கவியை தனது கைகளில் பிடித்துக் கொண்டே  அவனை பார்த்து அவன் சிரிக்க அவனது சிரித்த முகத்தை அன்று எவ்வாறு பார்த்தாலோ அதே போல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்

“வார்த்தை தேவை இல்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி பேசுமே

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி போதுமே...”

“என்ன செல்லம் அன்னிக்கி இருந்த மாதிரியே என்னோட சிரிப்பு இருக்கா இல்லை மாறிடுச்ச..”,என்று கண்ணடித்து அவன் கேட்க

அவளுக்கு புரிந்தது முதல் நாள் அவள் அவன் சிரிப்பை பார்த்து ரசித்ததை பார்த்திருக்கிறான் என்று அதை புரிந்துக் கொண்டவளது முகத்தில் வெட்கம் வந்து குடிக் கொள்ள

அதை அவனது மன்னவன் ரசிக்க செய்தான்...

அதன் பிறகு சதீஷும் அவனுடன் சேர்ந்து அவர்களை ஓட்ட ஆரம்பிக்க அனன்யா,மித்ரா என அனைவரும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள கவி மொத்தமாய் வெட்கத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாள்.

அதன் பின் அனைவரும்  வந்த விருந்தினர்களை வழி அனுப்பி விட்டு..,அனைவரும் சேர்ந்து அமர்ந்து இரவு உணவை உண்டுவிட்டு  தங்கள் அறைக்கு செல்ல ஆரம்பித்தனர்.

இன்றைய நாளையின் தேவதைகள் தங்களது மேக்அப்பை கலைத்து தங்கள் இயல்பு நிலை வரதுக்கு சென்றுவிட...

நான்கு நாயகர்களும் மீதி உள்ள வேலைகளை செய்ய வர அதை வேண்டாம் என்று தடுத்த அஸ்வின் தான் பார்த்துக் கொள்வதாக கூற அவர்களும்  ரெஸ்ட்  எடுக்க சென்று விட,கவி அங்கிருந்த மீதி உள்ள வேலைகளை பார்க்க செல்ல அவளை தடுத்தவன் அவளை ஓய்வு எடுக்க அனுப்ப

அவள் தனது தோழிகளுக்கு உதவி செய்துவிட்டு தங்களது அறைக்கு சென்றாள்.

மீதி இருந்த வேலைகளை  முடித்துவிட்டு அனைத்து ஆட்களையும் அனுப்பி விட்டு தங்களது அறைக்கு அவன் செல்ல

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்

தறிகெட்டு தளும்போது நெஞ்சம்

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

அப்பொழுது தான் தங்களது அறைக்கு வந்தவள் அரைகுறை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தனது நகைகள் அனைத்தையும் கழட்டிவிட்டு உடை மாற்ற தயாராகினாள்.

தனது சேலையில் போட்டிருந்த பின்னை கழட்ட அவள் முயல அது வராமல் அடம்பிடித்தது அது கிழியாமல் எடுக்க அவள் முயற்சி செய்தால் அது அவள் கணவன் தேர்ந்தெடுத்த சேலை அல்லவா...

திருமணமாகி எண்ணிகையில் வருடங்கள் ஆகி இருக்கலாம்...அவன் அவளுக்கு என்று பார்த்து எடுத்து தந்த முதல் சேலை.

ரத்தம் கொதிகொதிக்கும்  உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓரிலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.