(Reading time: 24 - 48 minutes)

அவனுக்கு அர்னவ் கூறியதுதான் நியாபகம் வந்தது அவள் பாசத்திற்க்காகதான் ஏங்குகிறாள் என்பது.

நாட்கள் அதன் போக்கில் செல்ல கல்யாண வேலைகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது.

மலர்கண்ணிற்கு மட்டும் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போய் கொண்டிருந்தது.ஆனால் அவர் அதை மற்றவர்களிடம் கூறாமல் மறைத்தார்.

அஸ்வின்-கவிமலர் இருவர் செய்யும் ரோமன்சை பார்த்து அங்க இருந்த இளசுகள் அனைவரது மனமும் தங்களை விட அவர்கள் மிஞ்சிவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டனர்.

இப்படியே நாட்கள் போக..,கல்யாண பத்திரிக்கை  வைத்து குலதெய்வ கோவிலில் வைத்து படைப்பதற்காக அனைவரும் செல்ல மலர்க்கண்ணனிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மலர்கண்ணன் மற்றவர்களை வற்புறுத்தி போக சொல்ல அஸ்வின் மாமாவுடன் இருப்பதாக கூறி தங்கிக் கொள்ள கவியும் அவன் வராததால் தங்கிக் கொண்டாள்.

அவர்கள் மூவரை தவிர மற்ற அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.

மலர்கண்ணன் மீது கவிக்கு கோபம் இருந்தபோதிலும் தனது கணவன் அவருக்காக கேட்ட அனைத்தையும் செய்துக் கொடுத்தாள்.

மதியம் மூன்று மணி அளவில் உறங்கியவள் மீண்டும் ஐந்து மணிக்கு எழுந்திருக்க  அஸ்வினை ரூமில் காணவில்லை.

ரெபிரஷ் ஆகி வந்து அவனை தேட அவன் மலர்கண்ணன் அறையில் இருந்தான்.

அவள் அவரது அறைக்கு சென்றது இல்லை.அதனால் அவள் போகமல் டீ போட போகலாம் என்று சமையலறை நோக்கி செல்ல அவள் அடி எடுத்து வைக்கும் பொழுது மலர்கண்ணன் அவளை பத்தி  பேச ஆரம்பித்தார்.

“அஸ்வின் நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் அதற்கு மறைக்காம  பதில் சொல்லணும்..”என்று அவர் கேட்க

“என்ன மாமா,கேளுங்க கண்டிப்பா பதில் சொல்லுறேன்..” என்று அஸ்வின் கூற

“இந்த கலயாணம் முடிஞ்ச பிறகு கவி திரும்பவும் ஊருக்கு போய்டுவாளா...”என்று கேட்க

“அப்படியெல்லாம் போக மாட்ட மாமா..,உங்க கிட்ட தான் நான் சொல்லி இருக்கேன்ல அவள எப்படியாவது இங்க இருக்க வைப்பேன்.உங்க கண்ணு முன்னாடி அவ இருப்பானு..அது கண்டிப்பா நடக்கும் உங்க பொண்ணு என்ன விட்டு எங்கையும்  போக மாட்டா..,கூடிய சீக்கிரம் உங்களுக்கு பேரனோ பேத்தியோ வந்து தாத்தானு கூப்பிட போறாங்க..,உங்க மக வளரத பாக்க முடியலனு சொன்னீங்களா..,எங்களுக்கு பிறக்க போகிற குழந்தைகள எல்லாம் நீங்க தான் வளர்க்க போறீங்க..,பீல் பண்ணாம தூங்குங்க மாமா..”என்று தனது மாமாவிடம் கூறிக் கொண்டிருந்தான் அஸ்வின்.

அதை கேட்டுக் கொண்டிருந்த கவிக்கு அவனது ஒரு வாக்கியமே அவளது காதில் விழுந்துக் கொண்டிருந்தது.

அவர்களது பிரச்சனைக்கு அதுவே காரணமாக அமைய போகிறது என்று அவளுக்கு தெரியவில்லை.

டீ போட நினைத்தவள் அதை  விடுத்துவிட்டு தங்களது அறைக்கு சென்றுவிட்டாள்.

அறைக்கு சென்றவளது மனம் குழப்பத்தின் இருப்பிடமாய் மாறிவிட்டது.

அவன் தன்னை தனக்கு என்று ஏற்றுக் கொள்ளவில்லையோ என்று நினைத்தாள் கவி.

அதை நினைத்தே அவளது மனம் பல குழப்பங்களை அவளுக்கு கொடுத்ததுஅந்த எண்ணங்கள் அவளிற்கு ஒரு தீர்வை தரவில்லை.

சிறிது நேரம் கழித்து வந்த அஸ்வின் அவள் அமைதியாய் அமர்ந்திருப்பதை பார்த்து அவளது அருகில் வந்தவன் அவளது தலையை தடவி விட  பல எண்ணங்கள் அவளது தலையை வலிக்க செய்தது.

அவளது குழம்பிய மனம் அவளை யோசிக்காமல் பேச வைத்தது.

“எதுக்கு இப்படி நடிக்குற அஸ்வின்..,என் மேல  பாசம் காட்டுற மாதிரி எதுக்கு நடிக்குறீங்க...”என்று அவனை உலுக்கி கவி கேட்க அவன்  எதற்கு இந்த திடீர் தாக்குதல் என்று புரியாமல் நின்றிருந்தான்.

அவள் திரும்ப அதே கேள்வியை கேட்க அதற்கு பதில் அளிக்க ஆரம்பித்தான்.

“லூசாடி ..,நீ...எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்க..”என்று அவன் கேட்க

“ஆமாம் நான் லூசு தான்.., எல்லாத்தையும் நம்பினேன் பாரு நான் லூசு தான்..”என்று அவள் கூற

“இப்ப உனக்கு என்னடி பிரச்சனை...”என்று கேட்டான் அவனுக்கு எங்கு தனது மாமா வந்துவிடுவாரோ என்ற கவலை.

“அந்த ஆளுக்கிட்ட என்ன சொல்லி இருந்த..,என்னை இங்க இருக்க வைக்குறதுக்கு என்ன வேணாலும் செஞ்சி இங்க இருக்க வைப்பேனு சொன்னியா..”என்று கேட்க

அஸ்வின் எதுக்கு அவள் சாமி ஆடுகிறாள் என்றே தெரியாமல் அவன் ஆம் என்பது போல் தலையசைக்க

அவளோ  முற்றிலும் உடைந்து போனாள்.

“அப்ப என்ன நீ நமக்காக  ஏத்துகலயா...”என்று அவள் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.