(Reading time: 8 - 16 minutes)

15. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

சில வருடங்களுக்கு முன்,

சந்தா தன் கல்லூரியில் அடி எடுத்து வைத்த வருடம் அது… கவலையே தெரியாத பட்டாம்பூச்சியாக சிறகடித்து வானில் பறந்து கொண்டிருந்த அழகு மங்கை அவள்… அவளது அப்பாவும் சரி, தம்பிகளும் சரி, அக்கா, மாமாவும் சரி, அவள் மேல் அளவு கடந்த பாசத்தினை வைத்திருந்தனர்…

அவளுக்கோ அன்பாக இருப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது… பிறர் மனம் நோகும்படி பேச தெரியாது, நடக்கவும் தெரியாது… இது அத்தனைக்கும் மேல் அவளுக்கு உலகமாகவே இருந்தது அவளின் அக்கா குழந்தைகள் ஜெகன் மற்றும் ரேணு தான்… ஜெகனுக்கு அப்போது மூன்று வயது… ரேணு பிறந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது…

கல்லூரி முடிந்து வந்ததும் இருவரையும் கொஞ்சிடவே அவளுக்கு நேரம் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்… அந்த அளவுக்கு குழந்தைகளின் மேல் பிரியம் வைத்திருந்தாள் சந்தா…

ஒருநாள் வழக்கம் போல் கல்லூரி முடிந்து வந்து கொண்டிருந்தவள், திடீரென நினைவு வந்தவளாக சாலையில் நின்று புத்தகத்தினுள் எதையோ தேடினாள் வேகமாக… அவள் தேடியது கைக்கு அகப்படாது போகவே, எங்கே தொலைத்தோம் என்ற எண்ணத்தில், வந்த வழியே திரும்பி சென்று சாலையின் இருமருங்கிலும் பார்த்துக்கொண்டே போனாள் அவள்…

அப்போது, கை நிறைய ஏதோ பைகளுடன் தனது பைக்கினை ஒருவன் நெருங்க, பைகளை பைக்கில் கோர்த்துவிட்டு, ஸ்டார்ட் செய்ய முனைகையில், அவன் கால்களில் வந்து தொட்டது ஒரு காகிதம்..

இது என்ன பேப்பர்?... யோசனையுடன் அதனை குனிந்து எடுத்து பார்த்திட

“சந்தோஷிதா…” பிபிஏ ஃபர்ஸ்ட் இயர் என்ற குறிப்புடன் இருந்தது அந்த எக்ஸாம் ஹால் டிக்கெட்…

சந்தோஷிதா… அந்த பெயரில் அவன் கண்கள் ஏனோ நிலைத்திருக்க, அதிலிருந்த அவளது புகைப்படத்தை பார்த்திட்டான்…

பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போனது அவனுக்கு… பார்க்கவே அமைதியாக குழந்தைத்தனமும், அன்பும் பொங்கி வழியும் அழகு முகமாக இருந்த அந்த வதனத்தில் இருந்து அவன் தன் கண்களை எடுக்க மறுத்தான்…

“சார்… அது என் ஹால் டிக்கெட்….” என்ற குரலில் நிமிர்ந்தான் அவன் பைக்கில் இருந்தபடியே…

புகைப்படத்தில் பார்த்தவள், கண் முன்னே வந்து நிற்க, அவனுக்கு ஒருநிமிடம் எதுவும் புரியவில்லை…

“தவறுதலா கீழே விழுந்துட்டு… என்னோடது தான் அது… என் போட்டோ கூட அதுல இருக்கும்…”

அவள் அவனிடம் தன்மையாக கூறிட, அவன் சட்டென அவளிடத்தில் அதனை நீட்டினான்…

அவன் தந்திடவும், “தேங்க்ஸ்…” என்ற பதிலோடு அவள் புன்னகைத்திட, ஏனோ அதனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது அவனுக்கு…

அவளின் புன்னகை அவனுக்கு புதிதோர் உலகத்தை காண்பிக்க, அவன் அதில் லயித்து மூழ்கி திளைத்து மீண்டு வந்து பார்த்தபோது அவள் அங்கே இல்லை…

பதட்ட்த்துடன் பைக்கை விட்டு கீழே இறங்கி, சாலையின் நாலாபுறமும் அவன் தேடிட, அவள் எங்கேயும் இல்லை… பைக்கை விட்டு விட்டு சற்று தூரம் பைத்தியம் போல் ஓடி தேடினான் அவன் அவள் தென்படுகிறாளா என….

அவள் அங்கே இருக்கும் சுவடே இல்லை என அறிந்த்தும் “ஷிட்…” என்ற சத்தத்துடன் ஓங்கி கால்களை தரையில் மிதித்து தன் விரக்தியை வெளிப்படுத்தினான் அவன்…

பின், அவன் எண்ணம் தானாக அவள் முகத்தினை நினைத்திட, புன்னகை எட்டிப்பார்த்த்து அவனுக்கு…

தலையை விரல்களால் லேசாக கோதிய வண்ணம் இதழ் மாறா புன்னகையுடன் வந்து பைக்கில் ஏறி வீட்டினை அடைந்தான் அவன்…

உற்சாகமும், கலகலப்புமாய் அவன் வீட்டுக்கு வந்திட, ஏனோ வீடே அமைதியாய் இருந்தது…

தாய் ஒரு பக்கம், தகப்பன் ஒரு பக்கம் என இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் நின்றிட, அவனின் பார்வை கூர்மையாகியது…

“அம்மா….”

அவனது குரல் கேட்டு ஓடிவந்து மகனை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் அவனது தாய்…

“அம்மா…. என்னாச்சும்மா?...........” பதட்டமும், பயமுமாய் அவன் கேட்டிட, அவர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…

“என்னாச்சு சொல்லும்மா?... ஏன்ம்மா அழுற?...”

தாய் அழுவதும் பொறுக்காமல், என்ன ஏது என்றும் தெரியாமல் அவன் குழம்பி போய் நின்ற வேளை,

“அண்ணா…” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு, தாயின் அழுகைக்கான காரணம் நொடிப்பொழுதில் விளங்கியது…

“ரஞ்சித்…. என்னடா இது?...” குரலில் அதிர்ச்சி அப்பட்டமாக பிரதிபலிக்க, தாயை விலக்கி விட்டு அவன் தன் தமையனை பார்த்திட,

“சாரிண்ணா…” என்றான் இளையவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.