தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 11 - மீரா ராம்

அவன் காதல் சொல்லிடுவான் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் கொண்டு அவள் காத்திருந்த தருணங்கள் ஏராளம்…
ஆனால் இன்று இந்நொடி அவன் காதல் சொல்லிவிட, அவளுக்கோ அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரிந்திடவில்லை…
அதைவிட, அதனை அவள் உள்வாங்குவது தான் மனதிற்கும், அவளுக்கும் வேறுபாட்டினை ஏற்படுத்தியது…
மனமானது அவனது காதலை ஏற்க தயாராக, மறுபுறம் அவளுக்கோ அதை ஏற்பதற்கு ஏனோ சில நெருடல் ஏற்பட்டது…
அவள் அதில் திணறிக்கொண்டிருந்த வேளை, அவன் குரல் மீண்டும் ஒலித்திட்டது…
“அனிதா… நான் உன்னை நிஜமாவே விரும்புறேன்...
அவள் பதிலே பேசாது இருந்திட,
“எனக்குப் புரியுது அனிதா… நீ சொன்னப்போ எனக்கு எந்த உணர்வுகளும் இல்லை… ஆனா அதுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமா நீ எனக்குள்ள வர ஆரம்பிச்சிட்ட… நீ எனக்குள்ள வந்துட்டன்னு நான் முழுசா உணர ஆரம்பிச்சப்போ தான், கரணையும் உன்னையும் சேர்த்து வச்சு சில செய்தி வந்துச்சு… என்னால அதை தாங்கிக்க முடியலை…” என்றான் அவன் அவளின் முகம் பார்த்தபடி…
அவன் காதல் சொல்லியதும், அவன் பக்கம் சாய இருந்த மனது, இப்போது சற்று சினம் கொண்டிட, அவள் அவனை முறைத்தாள்…
“அப்போ என்னை சந்தேகப்படுறீயா விக்கி?...”
“இல்ல அனிதா… மத்தவங்க பேசுறதுக்கு நீ இடம் கொடுக்காதன்னு தான் சொல்லுறேன்…”
“இரண்டும் ஒன்னு தான விக்கி…” என்றாள் அவள் விரக்தி மிக…
“அனிதா… நான் என்ன சொல்லுறேன்னு கேளு முதல்ல… அந்த கரண் கிட்ட நீ…”
அவன் பேசி முடிப்பதற்குள், “போதும் விக்கி… உன்னை என்னவோ நினைச்சேன்… ஆனா நீயும் கடைசியில எல்லார் மாதிரி தான்னு ப்ரூஃப் பண்ணிட்டல்ல…”
அவள் கோபம் ஆதங்கமாய் மாறிட, அவன் நிலைமையை விளக்கிட முனைந்தான்…
“மாடலிங்க் தான் என் ப்ரொபஷன்… பட் நீ அதுக்காக என்னை இவ்வளவு தரக்குறைவா எடை போடுவேன்னு நான் நினைக்கவே இல்லை…”
“அய்யோ அனிதா… இப்பவும் நீ என்னை தப்பாவே புரிஞ்சிக்கிற… அந்த கரண் நீ நினைக்குற மாதிரி…”
அவன் சொல்லி முடிப்பதற்குள், “ஆமா நான் நினைச்ச மாதிரி இல்லதான்… எங்கிட்ட காதலையும் சொல்லிட்டு, அது நான் நிராகரிச்சும், எங்கிட்ட எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம பழகுறான்…. அதுவும் இல்லாம, நான் வந்ததும் போன்ல பேசிட்டிருக்கேன்னு கோபப்பட்டியே, அது வேற யாருமில்லை கரண் தான்…” என அவள் கோபத்தோடு சொல்லிட, சுர்ரென்று கோபம் எழுந்தது அவனுக்கு…
“இனி அவன் கிட்ட பேசாத அனிதா…”
அவன் குரலில் உரிமையையும் தாண்டி ஒரு கட்டளை தென்பட, அது அவளுக்கு பிடித்தமாயில்லை…
“நான் பேசுவேன் விக்கி…”
அவளும் பிடிவாதமாய் சொல்லிட,
“அப்போ என் பேச்சை கேட்கமாட்ட?... அப்படித்தான?...”
“இந்த விஷயத்துல கேட்கமாட்டேன்…”
“அப்போ என்னைவிட அவன் தான் உனக்கு முக்கியமா?...”
அவனும் வார்த்தைகளை சிதறவிட, அவளும் அவ்வாறே பதிலளித்தாள்…
“ஆமா….”
“அனிதா……….”
அவன் கிட்டத்தட்ட கத்த, அவளுக்கே ஒருநிமிடம் வியர்த்துவிட்டது…
“புரிஞ்சிக்காம கத்தாத விக்கி… அவன் கிட்ட பேசினது ஒன்னும் நேரம் போகுறதுக்கு இல்லை… என்னை விட உன்னை இண்டஸ்ட்ரீக்குள்ள கொண்டு வர அவன் தான் ரொம்ப ட்ரை பண்ணிட்டிருக்குறான் தெரியுமா?...”
“தேவை இல்லை… அவன் மூலமா இண்டஸ்ட்ரீக்குள்ள வர்றதுக்கு நான் வராமலே இருந்துட்டு போயிடுவேன்…”
“முட்டாள்தனமா பேசாத விக்கி… அவன் நமக்கு ஹெல்ப் பண்ண தான் நினைக்குறான்…”
“வேண்டாம்னு சொல்லுறேன்ல…”
“நீயும் ட்ரை பண்ண மாட்ட… பண்ணுறவங்களையும் வேண்டாம்னு சொல்லுவ… உனக்கெல்லாம் எதுக்கு விக்கி இந்த வெட்டி கௌரவம்?...”
“அனிதா திஸ் இஸ் த லிமிட்…”
அவன் கோபம் கரையை கடந்திட,
“என்ன விக்கி லிமிட்?... அவன் ரேஞ்சுக்கு அவன் நமக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுறதே பெரிய விஷயம்… அது ஏன் உனக்கு புரிய மாட்டிக்குது?... நானும் உனக்கு இப்போ சான்ஸ் கிடைச்சுடாதா?.. அப்புறம் கிடைச்சுடாதான்னு ஏங்கிட்டிருக்கேன்… நீ என்னடான்னா கரணை தப்பா நினைச்சுகிட்டு வர்ற சான்ஸ் அ எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்குற…”
“என் திறமை மேல நம்பிக்கை வச்சு எனக்கு சான்ஸ் கிடைச்சா போதும்... அவன் சொல்லி எனக்கு சான்ஸ் கிடைக்க வேண்டிய அவசியமே இல்லை… புரியுதா?...”
“ஏன் புரியலை நல்லாவே புரியுது…”
“இன்னொன்னும் புரிஞ்சிக்கோ அனிதா… அவன் எனக்கு எதுக்கு சான்ஸ் கொடுக்க நினைக்குறான்னு உனக்கு தெரியாது…”
“அவன் என் ஃப்ரெண்ஷிப்பை மதிக்குறான் விக்கி… அதுக்காகத்தான் உனக்கு சான்ஸ் கொடுக்க நினைக்குறான்…”
“மண்ணாங்கட்டி…. இதை நீ வெளிய சொல்லிப்பாரு சிரிப்பாங்க…”
“அதான் இப்பவே சிரிக்குறாங்களே விக்கி… இன்னுமா புதுசா சிரிக்கணும் சொல்லு…”
அவள் சொல்லிட, அவன் அக்கம் பக்கம் திரும்பி பார்க்கையில் அத்தனை பேரின் கண்களும் அவர்கள் இருவரிடத்திலும் தான் இருந்தது…
“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”
{kunena_discuss:1162}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.