(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 03 - சகி

Nenchil thunivirunthaal

திகாலை கண்ட அந்தச் சொப்பனம்,உண்மையில் சிம்ம சொப்பனம் தான் அவளுக்கு!!மனம் போகும் போக்கில் என்றும் துள்ளிச்செல்லும் அக்காரிகை அன்றோ கட்டுண்டிருந்தாள்.எதற்காக??ஒரு சொப்பனம்!ஒரே ஒரு சொப்பனம் மட்டுமே!யாரவன்??ஊரார் முன்னிலையில் என் கரம் பற்றி அழைத்துச் செல்லும் அந்த ஒருவன்??யாரவன்??உலகமாய் நான் எண்ணும் இப்புனித பூமியில்,நான் வணங்கும் இறைவன் காவல் புரியும் இப்புவனத்தில் எங்குமே அவனைக் கண்டதில்லை.பின்,யார் அந்த யுவன்??அதிகாரமாய்,ஆரவாரமாய் நின்று சொடுக்கிட்டு என் கரம் பற்ற ஆணையிட்ட அவ்வளை கரம் எவருடையது??அக்கம்பீர குரலையும் இன்றுவரை நான் கேட்டதில்லை.அனைவரும் தலைகுனிந்த அந்நொடி என் சிரம் மட்டும்,கர்வத்தால் நிமிர்ந்து,கண்கள் பனிக்க காரணம் என்ன???உண்மையில் குழம்பி தான் போனால் அக்கன்னிகை.என்ன நடக்கிறது???ஏதோ தவறு நடக்க இருப்பதாக உள்ளம் பதைக்க காரணம் என்ன?எதற்காக மனம் குழம்ப வேண்டும்?ஏன் என்னை இந்த இக்கட்டில் தள்ளினாய்??அவள் கருமை தீட்டிய எழில்மிகு விழியினில் துளி கண்ணீர் ஒய்யாரமாய் வீற்றிருந்த அந்த சிவலிங்கத்தின் முன் விழுந்தது.

ஆலயம் இல்லை,கோபுரம் இல்லை!!வெண்கொற்ற குடையாய் வில்வ மரம்,தன் மன்னவனுக்காக விரிந்து நிழல் தந்தது.நினைவு தெரிந்தவரை அவளுக்கான ஒரே சொந்தம் அந்தத் தர்மபுரீஸ்வரர் தான்!!அவருக்கு அதுதான் நாமமாம்!!பலர் கூற கேட்டிருக்கிறாள்.இன்றுவரை வரலாறு மட்டும் தெரியவில்லை.பக்தி ஒழுக்கம் மிகுந்த பூமியில் அந்த இறைவனுக்கு ஆலயம் எழுப்பாத காரணமும் புதிராகவே இருந்தது.இருப்பினும்,அவர் வெறும் சிலை மட்டுமல்ல என்பது உண்மை!!நினைவு தெரிந்த நாள் முதலாய்,அந்தப் பிறைசூடனுக்கு ஆராதனை இவள் கரங்களால் மட்டுமே நடக்கிறது.தடைப்பட்ட வழிப்பாட்டினை துவக்கிய கன்னிகை இவளே!!அவளை பொறுத்தவரையில் அவர் இறைவனில்லை.அவளது தாய்! தந்தை!தோழன்!சகோதரன்!ஆசான்!அனைத்தும் அந்த நீலகண்டன் தான்.

அவளது நடவடிக்கைகள் அவருக்கு மட்டுமே பரிச்சயமான ஒன்று!!உண்மையில் அத்தெய்வீகத்தின் மொழியை அவள் அறிந்திருப்பாள் எனில்,பலமுறை உனக்கென்று ஏதேனும் வேண்டு!என்று அவர் வினவி இருப்பது அவளுக்கு புரிந்திருக்கும்.ஆனால்,அவளோ அந்த அன்பின் மொழியை அறிந்திருக்கவில்லை.அன்றுவரை தனக்கென்று அவள் எதையும் வேண்டியதில்லை.நாள் தவறாமல் விரதம் இருப்பாள்.என்ன வேண்டினாய் என்று வினவினால்,வேண்ட மறந்தேன் என்பாள்!!விசித்திரமானவள்.ஆம்..!விசித்திரமானவள் இந்த கங்கா!!

"ஏ...பொண்ணே!"உரக்க செவிக்கேட்ட குரலால் கவனம் கலைந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள்.தலையிலிருந்த சுள்ளிக்கட்டை இறக்கி வைத்து,அவள் எதிரே அமர்ந்தார் அக்கிழவி.

"என்ன பொண்ணே!என்ன யோசனை?இந்நேரம் நீ பெரிய வீட்டுல தானே இருப்ப?இங்கே என்ன பண்ற?"

"ப்ச்...மனசு சரியில்லை ஆச்சி!"

"ஆத்தாடி!அப்படி என்ன சங்கதி?பட்டம்மாக்கிட்ட சொல்லு,பரிகாரத்தை நான் சொல்றேன்!"

"ஒரு கெட்ட கனவு கண்டேன்!"

"என்ன கனவு?"

"அது...!"-தயங்கியது அவள் மனம்.

"யாரோ ஒரு பொண்ணை ஒருத்தர் வந்து கூட்டிட்டு போற மாதிரி கனவு கண்டேன்!"

"கனவுல கைப்பிடிக்கிற கனவு வந்தா எங்கேயோ கருமாதி நடக்க போகுதுன்னு அர்த்தம்!"-அப்பதிலில் ஆடிப்போனாள் கங்கா.

"என்ன சொல்றீங்க ஆச்சி?"

"ஆமா தாயீ!ஆனா,கவலைப்படாதே பொண்ணே!நீ அந்த சிவனை பூஜை பண்ற!அந்தச் சிவன் உனக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டான்.சரி உன் கைக்காட்டு!"

"ஆங்??"

"உன் இடது கையை காட்டு பொண்ணே!"

"ம்!"-அவள் தனது இடக்கரத்தை நீட்டினாள்.சில நிமிடங்கள் அவள் கரத்தில் கோலமிட்டவர்,பின்,அவள் முகம் நோக்கி புன்னகைத்தார்.

"உன்னைத் தேடி ராஜகுமாரன் வந்துட்டு இருக்கான்!"

"என்ன?"

"ஆமா பொண்ணே!உலகமே தூக்கி ஆடுற மகராசன்!உனக்காக,வந்துட்டு இருக்கான்."

"எனக்காகவா?யாரது?"

"ம்..!!ராஜ குடும்பத்தோட வாரிசு!ராஜாதி ராஜன்!நீ பட்ட கஷ்டம் எல்லாம் பனியா போக போகுது பொண்ணே!இனி,உனக்கு எல்லாம் நல்லது தான்!"

"சரி...நான் போய் பொழப்ப பார்க்கிறேன்!"-திகைத்து போய் அவளிருக்க,சலித்துக்கொண்டு கிளம்பினார் அம்மூதாட்டி!!

"என்ன உளர்கிறார்?என்னைத் தேடி....?யாரவன்??"துடிக்க மறந்தது அக்கன்னிகை இதயம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.