(Reading time: 14 - 27 minutes)

19. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

வ்வொரு விடியலும் மனித நம்பிக்கைகளின் பிரதிபலிப்பு தான். ஒரு சில அழகான நாட்களின் விடியல் நம் வாழ்கையின் பெரும் மாற்றத்திற்கு காரணமாகிறது. சில விடியல்கள் அன்றாட வாழ்கையை புரட்டிவிடுகிறது. மாற்றங்களின் மேலான மனித நம்பிக்கைகள் தான் நம்மை இயக்குகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தர்ஷினி அந்த அழகிய விடியலை இரசித்தவாரே, தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். கையிலிருந்த அலைபேசியில் ஒரு ஆயிரம் முறை சிவாவின் முகத்தைப்பார்த்திருப்பாள். எத்தனை முறைப்பார்த்தாலும் உள்ளம் அலுக்காது தான்,  மீண்டும் மீண்டும் அவனை நேரே சந்திக்கும் ஆவல் உள்ளத்தில் எழாமலில்லை, அதனை வலுக்கட்டாயமாக அடக்க முயன்றது அவள் பெண் உள்ளம். நொடிக்கொருமுறை கண்கள் சலனமில்லாத அடுத்த வீட்டை அளந்துகொண்டுதான் இருந்தது. இன்னும் அவன் மீதான நம்பிக்கையும் இருவரையும் பிணைத்த காதலும் மட்டும் தான் நம்பிக்கை பாலாமாய்.

கண்களை மெதுவாய் மூடி, கால்களை லேசாய் உண்ணி அவள் ஊஞ்சலை ஆட்டியபோது, வீட்டின் அழைப்பு மணி காதில் விழுந்தது. மாணிக்கத்தின் உறக்கத்தை கலைக்க விரும்பாது, அவள் அடுத்த இரண்டு நொடிகளில் கதவின் அருகே நின்றிருந்தாள். கதவை திறந்தபோது முழு புன்னகையும் அழுத்தமான பார்வையுமாய் யோகியும் வரதராஜனும்.

“உள்ள வரலாம்மாம்மா?” அவர் மென்மையாக கேட்க

“வாங்க அங்கிள், சாரி..” இவள் வரவின் அர்த்தம் புரியாத தடுமாற்றத்துடன்.

அவர்கள் பின்னேயிருந்து ஒரு விசில் சத்தம், மூவரும் திரும்ப “ஹலோ அவங்களப்பார்த்த உடனே உனக்கு என்ன கண்ணு தெரியலையா? ம்ம்?”

இருவருக்கும் பின்னே சற்று தள்ளி அலங்கார பூஷியதயாய் நின்ற காவ்யாவைப் பார்த்ததும் இன்னும் உள்ளம் பூரித்தது தர்ஷினிக்கு.  “காவ்யாதம்மா எங்கள அழைச்சிட்டு வந்தா…கோவிலுக்கு வந்தோம் அப்பிடியே அப்பாவ ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்..” – யோகி

“அப்பா விழிக்கிற டைம் தான் அங்கிள் நீங்க உள்ள வாங்க.. மத்திரை நால கொஞ்சம் அதிகம தூங்கிறாரு…” அவர்களை அமர செய்துவிட்டு காவ்யாவின் பக்கம் திரும்ப..

“அம்மா தாயே சீக்கிரமா ஒரு காபி போடு பார்க்கலாம்.. அப்டியே நான் போய் அங்கிள எழுப்புறேன்” -  காவ்யா

அதற்குள் மாணிக்கம் வெளியே வர, பெரியவர்களின் இயல்பான உரையாடல் துடங்க, மெதுவாக தர்ஷினியின் கையைப்பற்றி உள்ளே இழுத்துப்போனாள் காவ்யா.

“சரி இந்த டூ ஓல்டும் அங்கிள இன்னிக்கு ஃபுல்லா பார்த்துப்பாங்க நீ என்னோட எங்கேஜ்மென்ட்டுக்கு வர்ற..!”

“காவீ.. உளறாத…”

“இல்ல பக்கா ப்ளான்.. இரண்டு பேத்துட்டையும் சொல்லியாச்சு, அவங்க இங்க தான் இருப்பாங்க நாம வர்ற வரைக்கும்.. சோ நீ களம்பு..!”

காபியை டம்ளரில் ஊற்றி ஒரு சிறிய தட்டில் அடுக்கி கையில் எடுத்துக்கொண்டாள், வெளி தாழ்வாரத்தில் இருக்கையைப்போட்டு மலர்ந்த முகத்துடன் மூவரும் உரையாடிக்கொண்டிருக்க மௌனமாக அவர்கள் அருகில் சென்று தட்டை நீட்ட புன்னகையுடம் மூவரும் எடுத்துக்கொண்டனர். யோகி, கனிவுடனும் வாஞ்சையுடனும் தர்ஷினியின் கையைப் பற்றிகொண்டார்.

“இன்னிக்கு உன் ஃப்ரண்டோட எங்கேஞ்ச்மென்டாமே, நீ காவ்யாவோட கிளம்புமா, நாங்க இன்னிக்கு அப்பாவோட தான் இருக்கப்போறோம்” – யோகி

“ஐயோ, அவ்ளோ முக்கியமான ஃபங்க்ஷன் இல்ல ஆண்ட்டி.. போனும்னுலாம் இல்ல நீங்க காவ்யா சொல்றதலாம் பெரிசா எடுக்காதீங்க!”

இப்போது அவளுக்கு பின்னே நின்று காபியை இரசித்துக் குடித்துக் கொண்டிருந்தவளுக்கு புரை ஏறியது. “அடப்பாவி.. இவலாம் தேர்றது ரொம்ப கஷ்டம்!” இது காவ்யாவின் எண்ணம்.

“அப்படி இல்லம்மா.. நாங்க அப்பாகிட்ட ஒரு சில விஷயம் பேசணும் நீங்க சின்னப் பொண்ணுங்க அப்டியே வெளியே போயிட்டு ஏதாவது பர்ஷேச் பண்ணீட்டு வெளிய சாப்பிட்டு வாங்க…!” – வரதராஜன்

இப்போது உண்மையிலேய குளம்பிப்போனாள் பெண். அப்பவிடம் தனியாக பேசும் அளவிற்கு விசயம் என்னவாக இருக்கும். மெல்லிய பயம் உள்ளத்தில் பரவியதை கண்கள் காட்டிக்கொடுத்தது. வெளிறிய அவள் முகத்தை பார்த்து மாணிக்கம், “தர்ஷினிமா அங்கிளும் ஆண்டியும் பாண்டிசேரில ஒரு ஆஷிரமம் வரைக்கும் போறாங்க.. பீஸ்ஃபுல்லான இடம் அத பத்தி பேச வந்திருக்காங்க.. நீயும்  ஒரு மாசமா வீட்டுக்குள்ளே அடஞ்சு கிடக்க .. பாரு காவ்யா கிளம்பி வந்துட்டா.. நீயும் ஜம்முன்னு கிளம்பு, அவ கூட போயிட்டு இரண்டு பேருமா பத்திரமா வந்திருங்க..”

“காவீமா.. லேட்டாச்சுன்னா மாப்பிள்ளைய ட்ரைவ் பண்ணீட்டு வரசொல்லு.. நீ கார் ஓட்டாத ஓகேவா…!” – மாணிக்கம்

“அங்கிள் அவர விட நான் பக்காவ ட்ரைவ் பண்ணுவேன்.. முதல்ல இவள கிளப்பணும்.. “,  தர்ஷினியின் அருகே வந்து அவள் கையைப்பற்ற,

“சரிப்பா, லஞ்சு மட்டும் ப்ரிப்பேர் பண்ணீட்டு கிளம்புறேன்!” – தர்ஷினி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.