(Reading time: 14 - 27 minutes)

“அதல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா.. நீ கிளம்பு” யோகி மென்மையாக சொன்னாலும் அதில் ஏதோ ஒரு கண்டிப்பு தெரிய மறுக்க முடியாது, உள் அறையை நோக்கி நகர்ந்தாள் பெண்.

உள் அறைக்குள் புகுந்து தாளிட்ட பின்பு, உள்ளே ஆயாசமாக இருக்கையில் விழுந்த காவ்யாவை முறைக்க அவளோ தர்ஷினி ஆரம்பிக்கும் முன்னே, “அம்மா பரதேவத, என் மேல எந்த தப்பும் இல்ல, வரும்போது பிள்ளையார் கோவில் கிட்ட இரண்டு பேரும் மெதுவா நடந்து வந்தாங்க, சரி பாவம் வயசானவங்களேன்னு ட்ராப் பண்ணினேன் அவ்ளோதான், இதுல என் தப்பு என்ன இருக்கு சொல்லு!”

“அப்டியா அப்போ இந்த ஃபங்கஷன் விசயம் எப்பிடி தெரியுமாம் ம்ம்?”

“ஓ அதுவா, வர்ற வழில ஏதாச்சும் டாப்பிக் பேசனும்னு இத சொன்னேன் பட் நல்லதா போச்சு, வலிய வந்து மாட்டிக்கிட்டாங்க. ! நாம அவுட்டிங்க் போய் எவ்ளோ நாளாச்சு, வீ வில் ஹேவ் குட் டைம் டுடே!” கண்களை உருட்டி அவள் பேசியதில் லேசாக காவ்யா மீது துளிர்த்த கோபமும் வற்றிப்போக புன்னகையுடம் கிளம்ப எத்தனித்தாள் பெண்.

ரைமனது இங்கும் அரைமனது அங்குமாய் அவள் கிளம்பிப்போக, மாணிக்கமும் வரதராஜனும் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தனர். யோகி சமைத்த காலை உணவை உண்டு மூவரும் அரைக்குள் வந்து அமர,

“மாணிக்கம், தர்ஷினி கல்யாண விசயமா என்ன முடிவு பண்ணீருக்கீங்க, கால தாமதம் பன்றதால, எதுவும் மாறப்போறதில்லைங்கிறது என்னோட எண்ணம்!” – வரதராஜன்.

மாணிக்கம் பெரும் மூச்சுடன் அவரைப் பார்க்க, “அண்ணாச்சி, உங்களுக்கு விசயம் தெரியுமா? தர்ஷினி உங்கக்கிட்ட ஏதாச்சும் சொன்னாளா என்ன?”

“இல்ல அண்ணன், தர்ஷினி தங்கமானப் பொண்ணு அவ இத பத்தி எதுவும் எங்கக்கிட்ட பேசலா, ஆனா எங்களுக்கு இது தெரியாமப்போகாது, உங்கக்கிட்ட அதப் பத்தி பேசணும் ஆனா நீங்க பொறுமையா பதட்டப்படாம கேக்கணும்!” – யோகி

“ஆமாம்ப்பா, உன்ன விட நான் அஞ்சாறு வயசு பெரியவன், உன்ன மாதிரியே பெண்ணப் பெத்து வளர்த்தவன்.. இது பொறுமையா பேசி விசாரிச்சு எடுக்க வேண்டிய முடிவு.. கோபப்பட்டோ ஆத்திரப்பட்டோ நாம செய்யுற காரியம் நம்மக்கிட்ட உயிரா இருக்கிற நம்ம குழந்தைகளத்தான் பாதிக்கும்!” –வரதராஜன்

மாணிக்கம் மனம் குளம்பினாலும் நிதானத்தோடு அவர்களை எதிர்கொண்டார்.

“மாணிக்கம் முதல நாங்க யாருன்னு நீ முழுமையா தெரிஞ்சுக்கனும், நாங்க சிவாவோட மாமனார், மாமியார்!” - வரதராஜன்

“ஆமாம் அண்ணா, சிவா எங்கக்கிட்ட எல்லா விசயத்தையும் முன்னாலேயே சொல்லிட்டாரு, உங்கக்கிட்ட நிறைய விசயத்த தெளிவு படுத்தனும்னு நாங்க விரும்புறோம், இதுக்கும் சிவாக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வரட்டும்னு தான் நாங்க உங்கக்கிட்ட பேசணும்னு நினைக்கிறோம்!” – யோகி

“சிவாவோட குடும்பம் எனக்கு உறவுக்காறங்கன்னு உங்களுக்கு தெரியும் என்னோட கல்யாணத்தோடயே சிவா அப்பா ரொம்ப பிரச்சனப் பன்னீட்டாரு.. அதுலேயே எனக்கு கசப்பான அனுபவம் தாம்மா…இப்ப சிவா…தர்ஷினிதான் புரியாம.. இத அவகிட்ட என்னனு சொல்றது.. மொத்ததுல சிவாவப்பத்தி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல.. நீங்க சொல்லபோற விசயத்துனால அது மாறப்போறதும் இல்ல…!” – மாணிக்கம்

யோகியும் வரதராஜனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள சிறிது மௌனம்.

“உன்னோட அபிப்ராயம் இருக்கட்டும், ஆனா உண்மை என்னான்னு நீ முழுசா தெரிஞ்சுக்கனும், என்னப் பொறுத்தவரையில நீ ஒரு பொறுமைசாலி, நிதானமான ஆள், இல்லைனா கைக்குழந்தையான தர்ஷினிய உன்னோட இளம் வயசுல இருந்து இன்னோரு வாழ்கைய பத்தி யோசிக்காம தனியாள கன்னியமா வாழ்ந்து அவளையும் வளர்த்திருக்க முடியாது!”

“இங்கப்பாருப்பா நீ வேலைசெய்த முதலாளி வீட்டு பெண்ண விரும்பி கல்யாணம் செஞ்சுகிட்ட, அத அவங்க முழு மனசோட ஏத்துக்கனும்னு நீ எப்படி எதிர்பார்க்கலாம் சொல்லு, உன் மனைவி லெஷ்மி பிடிவாத குணம் எல்லாத்துக்கும் தெரியும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா உங்க கல்யாணம் நடந்திருக்கும், அவ பெரிய இடத்துப்பொண்ணு கத்திய தூக்கீட்டு நாலு பேர் வரத்தான் செய்வாங்க.. அதுலயும் சிவா அப்பாக்கு உன் மனைவி மேல பாசம் அதிகம் அதனால அவரு பிரச்சனை பன்னினாரு.. இத நீயும் மறுக்க முடியாது.”

“கல்யாணம் செஞ்சு சிங்கப்பூருக்கு போனீங்க வரும்போது நீயும் தர்ஷினியும் தான் வந்தீங்க..தன் வீட்டு பெண்ணோட மரணத்தை பத்தி முழுமையா தெரிஞ்சுக்க முடியாத அந்த குடும்பத்துக்கு உன் மேல பகை வந்ததில எந்த விதர்சனமும் இல்ல.. இல்லையா.. அவங்க கோபம் கூட இப்ப உனக்கு சிவா மேல இருக்கிற கோபம் மாதிரி நியாயமான கோபம் தான்…!”

மாணிக்கத்தின் மனம் கலங்கியது. மனைவியின் ஞாபகமும் தர்ஷினியின் எதிர்காலமும் நிலழாட அவர் கண்கள் கலங்கியது. வரதராஜன் மென்மையாக மாணிக்கத்தின் தோளில் கைவைத்து அவரை சமாதனப்படுத்தினார்.

“மாணிக்கம், தர்ஷினிக்கு சிவாவ பிடிச்சிருக்கு, அது இயற்கை, அவனுக்கு ஒரு குழந்தை இருக்கு, அது தாயில்லாத குழந்தை தன்னைப்போலனு தர்ஷினிக்கு அவ மேல அன்பும் கனிவும் தாய்மை உணர்வும் ஏற்பட்டிருக்கு, தர்ஷினியும் விஷ்ணுவோட சேர்ந்த சிவாவத்தான் விரும்புறா, அத நீ புரிஞ்சுக்கனும், அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறதால நீ அவன வெறுக்கிறது சரியில்ல..!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.