(Reading time: 14 - 27 minutes)

“இல்ல இல்ல அது மட்டும் காரணமில்ல… சிவாபத்தி நான் கேள்விபட்ட வரைக்கும்.. என்னோட உயிர் நண்பன் கூட ஒரு தரவ சொல்லிருக்கான், சிவா அவன் மனைவிய கொண்ணுட்டானு..!” - மாணிக்கம்

“பணத்துக்காகவும் சொத்துக்காவும் அவன் கொன்னுட்டானு நீ கேள்விப்பட்ட இல்லையா?” , வரதராஜன் அதை முடிக்க, ஆமாம் என தலைஆட்டினார் மாணிக்கம்.

“அப்போ நீ எதையும் தீர விசாரிக்கலைனு தெரியுது! அது இருக்கட்டும் சிவா ஒரு ஓழுக்கமான பையனா இருந்தா இந்த கல்யாணத்த நீ தடை செய்யமாட்ட இல்லையா? இல்லைனா உனக்கு அவன் குழந்தையோட இருக்கிறது தான் பிரச்சனையா?”

மாணிக்கம் அமைதியாக இருந்தார்.

“என்னப்பொறுத்த வரைல சிவாவுக்கு சின்ன வயசு தான், நீ லெஷ்மிய கல்யாணம் பன்னும்போது கூட உனக்கும் இதே வயசுதான், சரி அத விடு…விசயத்துக்கு வருவோம்.. சிவாவோட அப்பா அருள் பிரகாஷும் நானும் பால்ய நண்பர்கள், நான் தொழில்னு வெளிநாட்டுலேயே இருந்துட்டேன், அங்கேயே வளர்ந்தனால என் பெண்ணுக்கு அங்க உள்ள லைஃப் ஸ்டைல்தான் பிடிச்சுஇருந்துச்சு. சரி சம்பாதிச்ச வரைக்கும் போதும் இங்க வந்து செட்டில் ஆயிடலாம்னு நினைக்கும்போது தான் என் பெண்ணோட விபரீதமான பழக்கவழக்கங்கள் தெரிஞ்சுச்சு, விளையாட்டா பப் பார்ட்டினு போயிட்டு இருந்தவ எப்படியோ ட்ரக் எடுக்க ஆரம்பிசுட்டா, அதுல இருந்து அவள மீட்டு ஒரு வழியா இங்க வந்து சேர்ந்தோம்.

அப்போதான் அருளோட மகன் சிவாவ பார்த்தோம் அப்பாவ மாதிரியே நல்ல குணம், மேலும் தொழில்ல மேல வரனும்னு முயற்சி செய்யுற பாங்கு, செண்பகத்தோட நல்ல குணம் எல்லாம் பிடிச்சுபோக, அருள்ட பேசி என் மகளுக்கு நிச்சயம் செஞ்சோம்.  அவளுக்கும் ஆரம்பத்தில பிடிச்சிருந்துச்சு, சிவா வெளிநாட்டுக்கு அடிக்கடி போயிட்டு வந்ததால இவ கூட கல்யாணாத்துக்கு முன்னாடி அவ்வளவா பேசி பழக முடியல நாங்க அத நல்லதுன்னு நினைச்சோம் ஆன அதுவே வினையா முடிஞ்சுட்டு” – வரதராஜன் பேச்சை நிறுத்த யோகி தொடர்ந்தார்.

“ஆமாம் அண்ணா கல்யாணதுக்கு முன்னாடி மறுபடியும் போதை பழக்கம், அவ எங்கப்போற என்ன செய்யுறானு தெரியாம, அவளைக் கட்டுப்படுத்த முடியாம நாங்க தினறிட்டோம். கல்யாணத்துக்கு ஒரு வாரதுக்கு முன்னாடி இருந்து அவளை வீட்டுக்குள்ள அடைச்சுதான் வச்சிருந்தோம்,  சிவா வீட்டுல கேட்டப்பல்லாம் ஏதோ காரணம் சொல்லி மழுப்பி கடைசியா கல்யாணதுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அட்டகாசம் தாங்க முடியாம இந்த விசயத்த சிவாக்கிட்டேயும் அவங்க அப்பா அம்மாக்கிட்டேயும் சொன்னோம். செண்பகம் அக்கா வருத்தப்பட்டாலும், சிவாவோட அப்பா அவங்க எல்லாத்தையும் சரிகட்டி கல்யாணத்த நடத்தினாரு, நம்ம வீட்டுல ஒரு பெண் இருந்து அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனைனா நாம என்ன செஞ்சிருப்போம், இத பொறுமையா கையாளலாம்னு அவர் முடிவு எடுத்தாரு, சிவாக்கு இது அதிர்ச்சியக் கொடுத்தாலும் அந்தப்பையன் பொறுமையா அவளை ஏத்துக்கிட்டானு தான் சொல்லனும்.

வாழ்கைல பல கனவுகளோட திருமண பந்தத்தை எதிர்நோக்கிறப்ப இப்படி ஒரு பிரச்சனை உள்ள பெண்ணோட வாழனும்னா அந்தப்பையனுக்கு எவ்வளவு மன முதிர்ச்சி இருக்கனும்னு சொல்லுங்க..

இதுக்கெல்லாம் மேல ஒரு பிரச்சனை வந்துச்சு, ட்ரக் கொடுக்காதனால ஏற்பட்ட டிப்ரஷன் அதுல இருந்து அவள வெளில கொண்டுவர தூக்க மாத்திரைனு கல்யாணம் ஆன நாள்ல இருந்து சிவாவும் அவளும் சேர்ந்து வாழல, அவனும் அவ முழுமையா குணம் ஆகட்டும் பொறுமையா இருந்தான், எங்கக்கிட்ட அவ பொறுப்ப விட்டுட்டு வேலை  வேலைனு இருந்தான். அவகூட நாங்க இருந்து அவளப்பார்துக்கிட்டோம் ஆன ஒரு மாசத்துல அவ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சுது, மாசம் தள்ளிபோயிட்டு, மூணு மாசம் இருக்கும் பாதி போதைலும் மாத்திரையோட மயக்கத்திலயும் இருக்கிறவகிட்ட இருந்து எதை தெரிஞ்சுக்க முடியும்  சொல்லுங்க.. தற்கொலை பன்னலாம்னு கூட தோனும் ஆனா இவள யார நம்பி விடுறது.. அருள் பிரகஷுக்கு தெரிஞ்சப்ப அவர் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு..

இவ அட்டகாசம் தாங்க முடியல.. ட்ரக் கொடுக்கலைனு ஏகப்பட்ட பிரச்சனை, சிவாவோட ஆஃபீஸ் அங்க இங்கனு அவன ரொம்ப அசிங்கப்படுத்தீட்டா, இத தாங்க முடியாமலையே அருள் பிரகாஷ் போய் சேர்ந்துட்டாரு.. கடைசியா நாங்களே நீ இவள விவாகரத்து பன்னிக்கோப்பான்னு அவன்கிட்ட சொன்னோம், அப்ப கூட அவன் பொறுமையாதான் இருந்தான், குழந்தைப்பிறந்தா எல்லாம் மாறும்னு சொல்லி பொறுமையா இருந்தான்.

விஷ்ணு பிறந்தா, இனிமேலும் அவ இங்க இருக்கிறது சரி இல்லை, இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா எல்லாம் சரி ஆயிடும்னு அவங்க வீட்டுக்குபோனோம், சிவா இவகிட்ட நெறுங்காம குழந்தைய மட்டும் கவனிக்கானு மறுபடியும் பிரச்சனை, பொறுமையா இருந்து அவனோட வாழத்தெரியலை நெறிகெட்ட அவகிட்ட அவனாலையும் ஒரு மனைவியா நெறுங்கமுடியலை இந்தப் பிரச்சனை பெருசாகி அவ ஹிஸ்டீரியா பேஷண்ட் மாதிரி ஆயிட்டா, ஒரு கட்டத்துல குழந்தைக்கே எதிரியா ஆயிட்டா..”  - யோகி குரல் உடைந்து அழத்தொடங்க வரதராஜன் எழுந்து வந்து அவரை சமாதனப்படுத்தினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.